கணக்கு கலாட்டா ! கணக்கு பாக்காம சிரிங்க :)

கணக்கு பாடம் நமக்கு தலைவலியாய் இருந்ததெல்லாம் அப்போ !!!
இப்போ ??? மனம் விட்டுச் சிரிங்க 🙂

maths1.jpg

maths2.jpg

maths3.jpg

maths4.jpg

மனம் விட்டுச் சிரிச்சாச்சா 🙂

ஹாரிபாட்டர் ஆச்சரியங்கள்

harry.jpg

ஹாரிபாட்டர் நூல் உலக அளவில் எப்போதுமே கவனத்தைக் கவரும் என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஜே.கே ரௌலிங் எழுதிய ஹாரிபாட்டர் நூலின் ஏழாவது மற்றும் கடைசிப் பாகம் ‘Harry Potter and the deathly hallows’ ஜூலை இருபத்து ஒன்றாம் நாள் வெளியாகிறது என்பதால் உலகம் முழுவதும் இந்த புத்தகத்துக்கான முன்பதிவுகள் ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றன.

பிரபலமான வலைத்தளமான அமேசானில் மட்டுமே ஒரு மில்லியன் எனுமளவுக்கு முன்பதிவுகள் நடந்திருக்கின்றன. ஹாரிபாட்டர் நூல் விற்பனைக்கு வரும் தினத்தன்று நள்ளிரவிலேயே கடைகளைத் திறப்பதும், முந்தின நாள் இரவிலிருந்தே மக்கள் வரிசையில் காத்திருப்பதும், கடைகளின் கால்வாசி இடத்தை ஹாரிபாட்டர் புத்தகமே நிரப்பும் என்பதும் அமெரிக்க வாழ் மக்களுக்குப் பரிச்சயமானது தான்.

இந்த நூலுடன் இந்த தொடர் முடிவுக்கு வரும் என்பதால் இந்த புத்தகத்துக்கான ஆர்வம் மக்களிடையே பெருமளவுக்கு அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டுமன்றி இங்கிலாந்திலும் இந்த நூலுக்கு பல இலட்சம் பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள். இந்தியாவிலும் பல இலட்சம் புத்தகங்கள் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்து விடும் என கணிக்கப்பட்டுள்ளது.

அமேசான், முன்பதிவாளர்களுக்கு சுமார் பத்து விழுக்காடு தள்ளுபடி விலையில் இந்த நூலை தருகிறது என்பது இனிப்பான தகவலாய் இருந்தாலும் விலையைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை என்பது தான் உண்மை. இரண்டாயிரத்து ஐந்தில் வெளிவந்த ஆறாவது பாகத்தை விட அதிக அளவில் இந்த ஏழாவது பாகத்துக்கு முன்பதிவு நடந்திருப்பது ஹாரிபாட்டர் நூல் மீதான உலகளாவிய கவனத்தையே காட்டுகிறது.

இதற்கிடையில் இணையத்தில் ஹாரிபாட்டர் ஏழாவது பாகம் மின்நூலின் கடைசி அத்தியாயம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறது. அது போலியானது என்று ஆசிரியர் மறுத்துள்ளார். அதில் கதாநாயகன் சாகவில்லையாம் 🙂 நாவலின் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களைக் கொல்லப்போவதாக ஆசிரியர் ஏற்கனவே சொல்லியிருந்தது குறிப்பிடத் தக்கது.

ஹாரிபாட்டர் நூலுக்கு அதிகபட்ச பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அது மிகவும் பாதுகாப்பாக பூட்டப்பட்ட பெட்டிகளில், சங்கிலிகளால் இணைத்து பாதுகாப்புடன் தான் கடைகளுக்கே அனுப்பப்படும் என்று பதிப்பாளர்கள் தெரிவித்தனர். இதுவரை இந்த நூலை ஆசிரியரும் இரண்டு பதிப்பகத் தலைகளும் மட்டுமே படித்துள்ளனராம்.

ஹாரிபாட்டர் நூல் இதுவரை உலக மொழிகள் 64 ல் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. சுமார் முப்பத்து மூன்று கோடி புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளன என்பது வியப்பூட்டும் தகவல். புத்தக வெளியீட்டு விழாவைக் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுவதிலுமிருந்தும் பயணப்பட உள்ளதால் பல சிறப்பு பயண திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டுள்ளனவாம்.

இதற்கிடையில் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் ஹாரிபாட்டர் தீம் பார்க் ஒன்று அமைப்பதற்காய் ஒப்பந்தம் இடும் முயற்சிகள் தீவிரமாய் நடந்து வருகின்றன. நூலின் ஆசிரியர் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் ஒரு தனி தீவையே ஹாரிபாட்டர் தீம் பார்க் ஆக மாற்றி அதில் நிம்பஸ் 2000 பயணம் உட்பட பல வினோத பயணங்கள் அமைத்து அசத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக குறைந்தபட்சம் ஐநூறு மில்லியன் டாலர்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் ஆசிரியர் ஒத்துக் கொள்ளவில்லையாம்.

வாழ்வின் ஆரம்ப காலத்தில் வறுமையில் வாடியும், பேருந்து பயணச்சீட்டின் பின்புறமெல்லாம் கதைகளை எழுதியும் வந்த ஜே.கே ரௌலிங் இன்று சுமார் அறுநூறு மில்லியன் பவுண்ட்க்கு சொந்தக்காரர் ! இந்த தீம் பார்க் ஒப்பத்தமானால் ஆசிரியருக்கு இதன் மூலம் ஆண்டுக்கு நூற்று எண்பது மில்லியன் பவுண்ட் வருமானம் வரும் என தெரியவருகிறது. மூச்சு முட்டுது அம்மாடியோவ்…. !

இந்த நூல் விற்பனைக்கு வரும் நாளிலேயே குறைந்தபட்சம் முப்பது இலட்சம் புத்தகங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.