அம்மு – எதிர்ப்பினால் ஓடும் !

ammuvagiya-03a.jpg

கற்பு குறித்து காலம் காலமாகப் பேசப்பட்டு வரும் செய்திகளெல்லாம் தற்போது விதி மீறல்களால் மாறி வருகின்றன. மாற்றங்கள் எல்லாம் நல்லவை என்றோ , அல்லவை என்றோ அறுதியிட்டுக் கூற முடிவதில்லை. ஒவ்வோர் தரப்பிற்கும் அதனதன் சாதக பாதகங்கள் இருக்கத் தான் செய்கின்றன.

விபச்சாரத்தை வறுமையோடும், இயலாமையோடும் இணைந்தே இது வரை பேசியிருக்கின்றன திரைப்படங்கள். அதிலிருந்து மாறுபட்டு விபச்சாரத் தொழிலை விருப்பத்துடன் செய்யும் ஒரு பெண்ணின் வாழ்க்கை அம்முவாகிய நான் படத்தில் பதிவாகிறது என்பது வியப்பூட்டும் தகவல்.

கலாச்சாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும் என நம்பப்படும் இந்தத் திரைப்படத்தை பார்த்தவர்கள் அதன் தொழில் நுட்பத்திலும், காட்சியமைப்பிலும் வியந்து போயிருக்கிறார்களாம்.

காமத்தை ஒரு கலையாகப் பார்க்கும் திரைப்படமாக இது இருக்கும். இந்தத் திரைப்படத்தில் காதலை காமத்தின் உச்சமாகக் காட்டி வித்தியாசப்படுத்தியிருக்கிறேன் என்றெல்லாம் இயக்குனர் பத்மா மகன் கூறியிருக்கிறார்.

இது குறித்து திரையுலக நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் இது போன்ற பரபரப்புகளை வேண்டுமென்றே அவிழ்த்து விடுவதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் ! ஓ.. அப்படியா ??

எதிர்ப்பினால் படங்களை ஓடவைக்க முடியும் என்பதை உயிர் திரைப்படத்திலேயே காட்டிட்டோம்ல.. என்று வேறு ஒரு குண்டை இலவச இணைப்பாகவும் போட்டார். ஓஹோ… அப்படியா ??

ஆனா படத்தோட ஸ்டில்சைப் பார்த்தா விவகாரமா தான் தெரியுது !.
பார்த்திபன்.. பார்த்து…

Advertisements

3 comments on “அம்மு – எதிர்ப்பினால் ஓடும் !

 1. xavier i think parthibanakku ethu onrum puthusu illai……
  when he loses his market and has no pictures!!!!!!
  rmbmr ULLAE VELIYAE….if am not wrong…

  Like

 2. அம்மு சென்னை நிறுவனம்
  அம்மு சென்னை சொத்து நிர்வாகம், மேம்பாடு மற்றும் சந்தையிடல் சேவை நிறுவனம்
  நீண்டகால நேர்தியான அனுபவம் கொண்ட வெளிநாடு வாழும் தமிழர்கள்
  மத்தியில் பிரபலமானவர்கள், எல்லா நாடுகளில் வாழும் தமிழர்களை
  உறுப்பினர்களாக கொண்டவர்கள்
  வாடகைக்கு வீடு அமர்த்த ,
  வாடகை வசூல் செய்து வங்கியில் போட ,
  மாத மாதம் வீட்டைக் கண்காணித்து தகவல் தர,
  சொத்து வாங்க விற்க வேண்டிய வழி முறைகள், வாங்குவது விற்பது போன்றவற்றில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடை முறைகள்
  சரியான சொத்தை தேர்ந்துஎடுக்க,
  கடந்த,நிகழ் மற்றும் எதிர் கால வில்லங்கங்களை தவிர்க்க,
  எந்த சொத்து கை மாறினாலும், காபிடல் கெய்ன் டாக்ஸ்,ஸ்டாம்ப் … ஆகவே கெட்டிக்காரத்தனமாக அவற்றைக் குறைக்க வழி முறைகள் செய்ய

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s