சிவாஜி ரிலீஸ் !

sivaji-12.jpg

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம் மே மாதம் முப்பத்து ஒன்றாம் தியதி வெளியாகும் எனும் அதிகாரபூர்வ தகவலை ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஏப்பிரல் 14, மே பதினேழு என்றெல்லாம் ஆரூடம் செய்யப்பட்ட சிவாஜி ரிலீஸ் ஒரு வழியாக அதிகார பூர்வமாகியிருக்கிறது. சிவாஜி ரஜினியின் நூறாவது தமிழ்ப் படம் என்னும் சிறப்பினைப் பெறுகிறது.

ஏவிஎம் நிறுவனத்தில் ரஜினி நடிக்கும் ஒன்பதாவது படம் இது ( ரஜினிக்கு ஒன்பது ராசியாம் ) ஷங்கரின் எட்டாவது படமாம் ( ஷங்கருக்கு எட்டு ராசியாம் ) 31 வியாழக்கிழமை அதுவும் ராசிக்காக முடிவுசெய்யப்பட்டதாம். அடக்கடவுளே !!!

சிவாஜி தமிழக ரசிகர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பைக் கிளறிவிட்ட அதே நேரத்தில் மற்ற மாநில ரசிகர்களையும் வெகுவாகக் காத்திருக்க வைத்திருக்கிறது. ஆனால் கேரளாவிலும், கர்நாடகாவிலும் சிவாஜி வெளியாவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. சிவாஜி வெளியானால் அந்த மாநிலங்களிலுள்ள நேரடிப் படங்கள் படுத்துவிடும் என்று பயப்படுகிறார்களாம் !!!

ரஜினிகாந்த்,ஏவிஎம், ஷங்கர், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த், கலை தோட்டாதரணி, சுஜாதா, எ.ஆர்.ரஹ்மான் என முன்னணிகளால் உருவாகியிருக்கும் சிவாஜி மிகப்பெரிய பரபரப்பின் சின்னமாக மையம் கொண்டிருப்பதில் வியப்பில்லை.