ஒரே நாளில் சூப்பர் மேன் ஆன தயாநிதி !!!

maran.jpg

தயாநிதி மாறன் பதவியை ராஜினமா செய்ததன் மூலம் நடுவண் அரசு ஒரு திறமையான அமைச்சரை இழந்து விட்டது என்று இல கணேசன் கூறியிருக்கிறார் !

ஆஹா !! தயாநிதி மாறன் சுயநலமாகச் செயல்படுகிறார், சன் குழுமத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபடுகிறார், சமூக அக்கறை இல்லை என்றெல்லாம் அடுக்கடுக்காய் புகார் கூறிய பா.ஜ.க தயாநிதி மாறனைப் பற்றி இப்படி புகழ்கிறதே என்று சிரித்துக் கொண்டே செய்தியைப் படித்தேன்.

இந்தியாவில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு தயாநிதி காரணம் என்றும், அன்னிய முதலீடுகளின் அதிகரிப்பிற்கு தயாநிதி காரணம் என்று இல கணேசன் தெரிவித்திருக்கிறார்.

ஆமா, தயாநிதி மாறன் அமைச்சரவையில் இருக்கும் போது இப்படி ஒரு அறிக்கையை இல வெளியிட்டிருக்கலாமே ? அதுக்கு கட்சி இடம் கொடுக்காதோ ? நல்ல திறமையான அமைச்சர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் மனம் விட்டுப் பாராட்டும் நிலைக்கு நாம் உயர என்ன செய்ய வேண்டும் ? ராஜினமா செய்வதைத் தவிர ??

இனி தயாநிதி மாறனின் திறமைகளைக் குறித்து எல்லா கட்சிகளும் பாராட்டித் தள்ளும். தயாநிதி எங்கும் சேராமல் இருக்கும் வரை தான் இந்தப் பாராட்டுகள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

எங்கேயாவது சேர்ந்து விட்டால் இப்போது பாராட்டும் வாய்களே நாளை சூனியக்காரியின் வாயாக மாறி சாபங்களை தரையிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

போரடிச்சுப் போச்சுடா சாமி !!!

Advertisements

12 comments on “ஒரே நாளில் சூப்பர் மேன் ஆன தயாநிதி !!!

 1. இல.கணேசனுக்கு அன்று தகுதி இல்லாத தயாநிதி மாறன், இன்று ஒரு திறமையான அமைச்சராக தெரிவது ஏன்?

  இதே மே மாதம் 2006 யில் இல.கணேசனுக்கு தயாநிதி மாறன் ஒரு திறமையான அமைச்சராக தெரியவில்லை. அதற்கு மாறாக தயாநிதி மாறன் டாடாவை மரட்டுகிறார். அதிகாரத்தை தவறாக பயன்ப்படுத்துகிறார். எனவே தயாநிதி மாறனை உடனடியாக தொலைத் தொடர்புத் துறையிலிருந்து மாற்றியாக வேண்டும். இப்படி கூறிய இல.கணேசன்

  இன்று தயாநிதி மாறன் ராஜினாமா செய்ததில் மத்திய அரசு திறமையான ஒரு அமைச்சரை இழந்துவிட்டது என்று கூறியுள்ளார்.அவர் மூலம் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் பல்வேறு வளர்ச்சிகளை அடைந்துள்ளது. அன்னிய முதலீடுகளும் அதிகரித்துள்ளது. இப்படி மாற்றி பேச இல.கணேசன் வெட்கமாக இல்லை. எனவே அவர் தி.மு.க அமைச்சராக இருந்த போது இருந்த கண்ணோட்டம். அமைச்சர் பதவியை துறந்தவுடன் தலை கிழாக மாறியது வியப்பாக உள்ளது. என்ன இந்த அரசியல்?

  எல்லாமே பார்ப்பனீயத்தில் உள்ளது.

  Like

 2. Pingback: Dinakaran survey - Feedbacks, Blog Posts: Maran vs Alagiri or Sun Network & DMK promotion? « Snap Judgment

 3. இல.கணேசனுக்கு மட்டுமில்லை இன்னும் நிறைய பேருக்கு சூப்பர் மேன் ஆயிருவாரு தயாநிதி.ஆனா நம்ம வைகோ சொன்னத பாருங்கோ. பணமும் பவரும் இருந்தா டாடாவை மிரட்டலாம் தாத்தாவ மிரட்டமுடியுமா அப்புடின்னாராம்.இது எப்படி இருக்கு.

  Like

 4. இதன் எதிர்நிகழ்வும் உண்மையாதே. அதாவது இதுவரை ஹீரோவாகத் தெரிந்த மாறன் வில்லனாக்கப்பட்டுவிட்டது. அவர் சாதனைகள் சாதாரணம், மற்ற துரைகளும் வளர்ந்துள்ளன போன்ற குற்ரச்சாட்டுக்கள் அவரை தூக்கிவைத்தவர்களிடமிருந்தே வருதே. என்ன இப்ப சன்/தினகரன் அந்த செய்திகளப் போடாது.

  அரசியல்ல இதெல்லாம் சகஜமில்லையா.

  Like

 5. Pingback: Top Posts « WordPress.com

 6. All the medias are talking or focusing more about maran’s issue, i dont see none of them care about those 3 people died on this incident. just my thought.

  Like

 7. //பணமும் பவரும் இருந்தா டாடாவை மிரட்டலாம் தாத்தாவ மிரட்டமுடியுமா அப்புடின்னாராம்.இது எப்படி இருக்கு.//

  வாய் ஜாலத்தில் வைகோவை மிஞ்ச முடியுமா 🙂

  Like

 8. சரியா சொன்னீங்க சிரில்… ! உண்மையான செய்தியை தெரிந்து கொள்ள எத்தனை நாளிதழ்கள் படிக்கணுமோ !!

  Like

 9. //All the medias are talking or focusing more about maran’s issue, i dont see none of them care about those 3 people died on this incident. just my thought.//

  உண்மை தான் அனானி. இந்த சோகம் எல்லா முக்கிய நிகழ்வுகளுக்கும் பொருந்தும் !

  Like

 10. sun tv group is Asia’s 12th richest group…intha sandai ellam verum eye wash….watch and see….I bet..

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s