சிவாஜி தாமதம் ஏன் ?

sivaji-13.jpg

சிவாஜி திரைப்படம் வெளியாகும் நாள் ஜூன் பதினைந்தாம் தியதிக்கு மாற்றி வைக்கப்பட்டிருப்பதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

முதல் காரணம் தியேட்டர் அதிபர்கள் திடீரென சதவீத அடிப்படை என்று போர்க்கொடி தூக்க ஆரம்பித்திருப்பது. அதை பேச்சுவார்த்தை மூலம் உடன்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன.

இரண்டாவது காரணம் சென்சார். சென்சாரில் சிக்கி இரண்டு மூன்று காட்சிகள் வெட்டப்பட்டனவாம். ( ஸ்ரேயா தொப்புள் காட்சி தான் வேறென்ன 🙂 ) அந்த இடத்துக்கு ( தொப்புளுக்கு இல்லீங்க.. வெட்டப்பட்ட இடத்துக்கு ) ஷங்கர் வேறு காட்சிகள் வைத்திருந்தாலும் அது திருப்தியாக இல்லையாம். எனவே ஒட்டும் வேலைகள் நடைபெறுகின்றன.

மூன்றாவது எ.ஆர். ரஹ்மான் இசை சில இடங்களில் சரியில்லை என்று மீண்டும் சிறிது பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடக்கின்றனவாம்.

நான்காவது காரணம் கேரளா, கர்நாடகா வில் படம் வெளியாவதில் இருக்கும் சிக்கல்களைத் தீர்த்துவிட்டு படத்தை வெளியிடுவது சிறந்தது என ஏவிஎம் நினைக்கிறதாம். இல்லையேல் டிவிடிக்கள் பக்கத்து மாநிலங்களை ஆக்கிரமித்து படம் வெளியாகும்போது பரபரப்பில்லாமல் போகலாம் எனும் பயம் இருக்கிறதாம்.

கடைசியாக திருட்டு விசிடி தடுக்க என்ன செய்யலாம் எனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான வியூகம் அமைக்கப்படுகிறதாம்.

படத்தை தள்ளிக்கொண்டே போவதில் ஷங்கர் ஏக கடுப்பில் இருக்கிறாராம். 🙂
ரசிகர்கள் தான் கடுப்பில் இருப்பார்கள் என நினைத்தேன்
இயக்குனரேவா !!!

What More you want than Whatmore ?

what.jpg
உலகக் கோப்பையில் கிடைத்த நியாயமான தோல்விக்குப் பின் அடுத்த உலகக் கோப்பை வரை இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கொண்டு செல்லக்கூடிய ஒருவரை பயிற்சியாளராக நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் வலை வீசித் தேடிக்கொண்டிருக்கிறது.

இந்த விஷயம் கேள்விப்பட்ட மீன்கள் எல்லாம், வலையில் விழுவதற்காக ஓடிக் கொண்டிருக்கின்றன. காரணம் இந்த வலையில் விழுந்தால் சாதாரண மீன்களெல்லாம் தங்க மீன்களாக மாறிவிடும் என்பது மட்டுமல்ல உலகப் புகழ் பெற்ற மீன்களாகவும் மாறிவிடும் என்பதும் தான்.

இலங்கையை உலகக் கோப்பை வாங்க வைத்ததும், வங்காள தேச அணியை அதிர்ச்சி வைத்திய அணியாக உருமாற்றியதும் என இவரிடம் நல்ல பயோடேட்டா. வங்காளதேச துணைதல அஷ்ரபுல் வேறு வாட்மோர் மாதிரி இன்னொரு ஆளை பார்க்க முடியாது ரேஞ்சுக்கு ( ஸ்பீச் ஃபிக்சிங் ? ) பேசித் தள்ள அவர் மீதான ஆர்வம் எகிறியிருக்கிறது.

தனக்கு இந்தியப் பயிற்சியாளராக இருக்க விருப்பம் என்று அவரே முன்வந்து அறிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பயிற்சியாளரை நியமிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாவிட்டாலும், ஆஸ்திரேலிய பயிற்சியாளரையாவது வீழ்த்த முடிந்ததே ( பின்னே… டீம் தோற்று போனா பயிற்சியாளர் தானே பொறுப்பு ) எனும் சந்தோசத்தில் இந்தியா இருக்க மேலும் ஒரு வாய்ப்பு வருகிறது.

பார்க்கலாம்.