சேரனைப் பிரதிபலிக்காத மாயக்கண்ணாடி !

mk.jpg

தன்னோட படம் ஓடும்னு நினைக்கிறது தன்னம்பிக்கை
தன்னோட படம் மட்டும் தான் ஓடும்னு நினைக்கிறது தலைக்கனம்

சும்மா.. கஜினி பட டயலாக்கைச் சொல்லிப் பார்த்தேன். மாயக்கண்ணாடி படம் வெளியாகும் முன் சேரனுடைய பேட்டிகளுக்கு அளவே இல்லாமல் இருந்தது.

சிவாஜி படத்துக்கு சரியான போட்டியாக என்னுடைய மாயக்கண்ணாடி இருக்கும். மாயக்கண்ணாடி படம் வெளியான பின் தமிழக இளைஞர்கள் எங்கேயோ போய்விடுவார்கள் ( உண்மை தான் தியேட்டரை விட்டு எழுந்து வெளியே எங்கேயோ ஓடிட்டாங்க ) என்றெல்லாம் பேசித்திரிந்தார் சேரன்.

சிவாஜி படம் தாமதமானபோது மாயக்கண்ணாடியோடு போட்டி போட முடியாமல் சிவாஜி தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக ஒரு மறைமுகப் பரபரப்பையும் கிளப்பிப் பார்த்தார்.

படமும் வெளியானது, உடனே உள் ஆனது !!!

படத்தின் மீதான மன்னிக்கவும் தன் மீதான நம்பிக்கையில் படத்தை யாருக்கும் கொடுக்காமல் தானே ஒரு கோடி ரூபாய் போட்டு வினியோக உரிமை வாங்கினார். இதுவரை அவருக்கு வந்திருப்பதோ வெறும் 10லட்சம் தானாம்.

படத்தை தயவு செய்து பாருங்கள் என்று பேட்டிகளிலும், பத்திரிகைகளிலும் கைகூப்பிக் கேட்டுக் கொண்டார். அப்படிப் போய் பார்த்தவர்களும் படம் திருப்தியாய் இல்லை என்றே சொன்னார்கள். போதாக்குறைக்கு மீண்டும் குலக் கல்வியை ஆதரிக்கும் ஒரு பிற்போக்குப் படம் என விமர்சனங்கள் எழ மாயக்கண்ணாடி உடைந்து போய்விட்டது.

மாயவரத்தில் மாயக்கண்ணாடி மூன்றே நாட்களில் தூக்கப்பட்டு சேரனுக்கு வேதனை தந்திருக்கிறது.

தவமாய் தவமிருந்து படத்தை அணு அணுவாய் ரசித்துப் பார்த்தேன். ( ஆட்டோகிராஃப் ஐ அல்ல ) அந்த சேரனை மீண்டும் பார்க்கும் ஆவலில் அடுத்த மாயங்கள் இல்லாத கண்ணாடிக்காகக் காத்திருக்கிறேன்.

Advertisements

9 comments on “சேரனைப் பிரதிபலிக்காத மாயக்கண்ணாடி !

 1. Mayakkannadi Illaiyaa……….. Athu Verum “Chayakkannadi”
  pavam cheran Yemanthuttaru……..

  Like

 2. சேவியர் உங்களுக்கு ஆட்டோகிராஃப் படம் பிடிக்க்காதா??????ஏன்??

  Like

 3. Perhaps Thavamai Thavamiruthu loaded a lot of thalaikanam to Cheran…..
  And also he was more worried about Navya Nayar than mayakannadi…
  so an ultimate FLOP movie!!!!!!

  Like

 4. என்னால் முடியும் – தன்னம்பிக்கை
  என்னால் மட்டும் தான் முடியும் – தலைக் கனம்

  எடுக்கும் படங்கள் அத்தனையும் வெற்றிப்படங்கள் ஆக முடியுமா என்ன

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s