தந்திரிக்குச் செக் வைத்த மந்திரி !!!

guruvayoor-temple1.jpg

கேரளாவில் அமைச்சர் வயலார் ரவியின் மகனுக்கு சோறூட்டு விழா. வயலார் ரவியின் மனைவி கிறிஸ்தவராக இருந்தாலும் வயலார் ரவிக்கு குழந்தைக்குச் சோறூட்டும் நிகழ்ச்சியை குருவாயூர் கோயிலில் வைத்து நடத்த வேண்டும் என்று ஆசை. அப்படியே நடந்தது.

விடுவார்களா தந்திரிகள் ? ஏற்கனவே உலகப் புகழ் பாடகர் இயேசுதாசையே எதிர்த்தவர்கள். அழகான மீரா ஜாஸ்மினைக் கூட அனுமதிக்காதவர்கள். பிரச்சனை கிளப்பினார்கள்.

உச்ச கட்ட அவமானமாக கோயில் வயலார் ரவியின் மனைவி நுழைந்ததால் புனிதத் தன்மை 🙂 கெட்டு விட்டதாகக் கூறி இரண்டு நாள் சுத்தி கிரியையை சுத்திச் சுத்திச் செய்தார்களாம்.

கேரள பத்திரிகைகளில் இந்த தகவல்கள் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து இடப்பட அமைச்சர் கடுப்பாகியிருக்கிறார். இந்தியாவிலேயே படித்தவர்களால் நிரம்பி வழியும் கேரளாவில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததால் கேரளாவிலுள்ள எழுத்தாளர்கள் கொதித்து விட்டார்கள். சம்பந்தப்பட்டது மந்திரியாச்சே.

எல்லா நாளிதழ்களிலும் மந்திரியின் வரவால் தந்திரிமார் செய்த அலம்பலுக்குக் கண்டனங்கள் எழுதப்பட்டன.

அரசியல் வட்டாரத்தில் அமைச்சருக்கு இது ஒரு பெருத்த அவமானமாய்க் கருதப்பட்டது. இந்தத் தகவல் கேரள தேவசம்போட்டு அமைச்சர் சுதாகரனுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

கொதித்துப் போனார் சுகுமாரன். ஏற்கனவே கண்டரரு மோகனரு எனும் தந்திரியின் காம லீலைகளினால் காயம்பட்டுக் கிடக்கும் கேரளாவின் பெருமை இதன் மூலம் இன்னும் காயப்படும் என்பதை உணர்ந்த அவர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

கோயில்களுக்கு யார் வரவேண்டு என்பது குறித்து தந்திரிகளோ, பிராமணர்களோ, நம்பூதிரிகளோ இனிமேல் முடிவு செய்ய வேண்டாம். அரசு அதை சட்டமாக்கும். கோயிலுக்குள் யார் வேண்டுமானாலும், எந்த மதத்தினர் வேண்டுமானாலும் செல்லலாம் எனும் சட்டத்தை விரைவில் கோண்டுவருவேன் என்பதே அந்த அறிவிப்பு.

இந்த அறிவிப்பால் பழைய சம்பிரதாய இருட்டறைக்குள் கிடக்கும் தந்திரி வட்டாரங்கள் கலங்கிப் போயிருக்கின்றன. கேரளாவிலுள்ள கோயில்களில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ( யானைகள் கொல்கின்றன, அல்லது ஆணைகள் கொல்கின்றன ) என அதிகாரத்தைக் கைக்குள் வைத்திருக்கும் தந்திரிகள் எரிச்சலில் இருக்கிறார்களாம்.

எப்படியோ மந்திரி வந்தாரு
தந்திரி எந்திரி
ன்னு சொன்னாரு கணக்கா கேரளாவில் அடுத்த நடவடிக்கை என்னன்னு பொறுத்திருந்து ரசிப்போம்.

4 comments on “தந்திரிக்குச் செக் வைத்த மந்திரி !!!

  1. வரவேற்கப்பட வேண்டிய முடிவு. அதுவும் ஜேசுதாஸிற்கு அனுமதி மறுப்பது போன்ற அபத்தம் வேறில்லை. இந்த முடிவு செயலாக்கப்படுமென்றால் அதனால் அந்த குட்டி கண்ணனுக்குத்தான் லாபம் – தேனிசைக்குரலை சந்நதிக்குள்ளேயே கேட்டு மகிழலாமே அவன்.

    Like

  2. இதற்கு கருத்து தெரிவிக்க முடியாது. மத நம்பிக்கையை மாற்ற முடியாது. மனம் புண்படும். பல காலமாக கடைப்பிடித்து வரும் ஒரு பழக்கத்தை மாற்றுவது என்றால் ….. – ஏன் அரசின் நிகழ்ச்சிகளில் கூடத்தான் தேவையற்ற ப்ரோட்டகால்ஸ் இருக்கின்றன. மாற்றுங்களேன்

    Like

Leave a comment