சன் டிவி, கலைஞர் டிவி, அண்ணா அறிவாலயம் !

tv3.jpg

எல்லோரும் கணித்தபடி திமுக வின் கொள்கைப் பரப்புச் சானல் கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பமாகிறது. அதற்காக அண்ணா அறிவாலயத்திலேயே கலைஞர் தொலைக்காட்சிக்கான அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது என பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

இனிமேல் சன் தொலைக்காட்சி அறிவாலயத்தை விட்டு வெளியேறும் என எதிர்பார்க்கப் படுகிறது. சரத் ரெட்டி என்பவரை நிர்வாக இயக்குனராகக் கொண்டு கலைஞர் டி வி செயல்படும் என்கிறார்கள். ( தமிழ்த் தலைவருக்கு தமிழகத்தில் யாரும் கிடைக்கவில்லையோ ? இல்லை நம்பிக்கையில்லையா ? )

சன் தொலைக்காட்சியிலிருந்து பல நிகழ்ச்சிகள் கலைஞர் தொலைக்காட்சிக்கு இடம் பெயரும் வாய்ப்பு உண்டு. எனினும் சன் தொலைக்காட்சிக்கு பெருமளவில் பாதிப்பு ஏதும் வர வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.

சன் டிவியே புதுமை ஏதும் இல்லாமல் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காப்பியடிக்கும் அவலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது எனில் இங்கிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு என்ன இறக்குமதியாகப் போகிறதோ.

எப்படியோ தனிநபர் துதிபாடும் தொலைக்காட்சியாக கலைஞர் டிவி இல்லாமல் பா.ம.க வின் மக்கள் தொலைக்காட்சி போல புதுமையாய் இருக்கும் பட்சத்தில் வரவேற்போம். இல்லையேல் ஜெயா தொலைக்காட்சி போல நகைச்சுவைக்குப் பஞ்சம் வரும்போது செய்திகள் பார்ப்போம் 🙂

12 comments on “சன் டிவி, கலைஞர் டிவி, அண்ணா அறிவாலயம் !

 1. சன், ஜெயா அல்லது கலைஞர் டி.வி ஆகட்டும், எல்லாமே மக்களை ஏமாற்றும் வித்தைகளே. கலை வளர்க்கிறோம், கண்றாவி வளர்க்கிறோம் என்கிற பெயரில் 24 மணி நேரமும் மக்களை சிந்திக்க விடாமல் புத்தி மங்க வைக்க உருவாக்கப்பட்ட போதை தரும் மருந்துதான் இவைகள்.

  புரட்சி செய்யாதே, ஏன் என்று கேட்காதே, எதிர்த்து பேசாதே, கிடைத்த வேலையை செய், இலவச உலகில் வாழ், சோம்பேறியாக இரு, வீட்டைவிட்டு வெளியே வராதே, வேலை செய்தாயா சாப்பிட்டாயா டி.வி பார்த்துவிட்டு படுத்து தூங்கு. புழு வாழ்க்கை வாழ்ந்து வந்த இடம் தெரியாமல் செத்து போ. இதுதான் இவர்கள் எதிர்பார்க்கும் பொது மக்களின் வாழ்க்கை. மக்களை முண்டங்களாக்குவது ஒன்றுதான் இவர்களின் ஒரே குறிக்கோல். மீது அனைத்தும் ச்சும்மா வெறும் உடான்ஸ் ஐயா.

  பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சேவியர்.

  Like

 2. kasu irupavaragal (makkalidam iruthu kollaaditha!!!!!!)
  suntv nadathugiraragal…
  kalaignar tv arambikkirargal……
  jayavil kamadi seithigal podugirargal…..
  makkal ILAVASA TV vangi vedikkai parkirargal…..
  engae selgirathu Tamilnadu…
  thevai ANNAITHERESAvin Anbullam konda ORU HITLER!!!!

  Like

 3. Pingback: Top Posts « WordPress.com

 4. புரட்சி செய்யாதே, ஏன் என்று கேட்காதே, எதிர்த்து பேசாதே, கிடைத்த வேலையை செய், இலவச உலகில் வாழ், சோம்பேறியாக இரு, வீட்டைவிட்டு வெளியே வராதே, வேலை செய்தாயா சாப்பிட்டாயா டி.வி பார்த்துவிட்டு படுத்து தூங்கு. புழு வாழ்க்கை வாழ்ந்து வந்த இடம் தெரியாமல் செத்து போ. ?!

  Like

 5. thatha was accusing dhayanidhi maran of conspiring to take the cm post, so who the hell gave him and his family only to sit in the cm post? will someone ever tell thatha that?

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s