திருமண மண்டபங்களின் விதி மீறல்

plastic.jpg

நமது நாட்டில் விதி மீறல்களுக்குப் பஞ்சமே இல்லை. பெரும்பாலான விதி மீறல்கள் அரசு அதிகாரிகளின் ஆசீர்வாதத்தினாலேயே நடக்கிறது என்பதால் அவை ‘விதி’ என்று ஒத்துக் கொள்கின்றனர் மக்கள்.

நேற்று ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அந்த மண்டப வாசலில் அரசு உத்தரவு என்று பல செய்திகளைக் குறிப்பிட்டிருந்தார்கள். அதில் ஒன்று அரசு உத்தரவுப்படி இந்த மண்டபத்தில் பிளாஸ்டிக் கப், விரிப்பு எதுவுமே உபயோகப்படுத்தப்பட மாட்டாது.

ஆஹா என வியந்து கொண்டே கீழே பார்த்தால் நான் ஒரு பிளாஸ்டிக் காட்டுக்குள் தான் நிற்கிறேன்.

உள்ளே பந்தியில் எங்கும் பிளாஸ்டிக் மயம். இத்தனைக்கும் அந்த திருமண மண்டபம் சென்னையில் முக்கியமான இடத்தில் தான் இருக்கிறது.

மண்டப அலுவலகத்தில் இருந்த ஒருவரிடம் இது குறித்துக் கேட்டேன். ‘அரசு ஆணைன்னு எழுதி வெச்சிருக்கீங்க ஆனா எங்கும் பிளாஸ்டிக் மயமா இருக்கே’ என்று.

‘நாங்க வாடகைக்கு விட்டிடுவோம். மத்ததெல்லாம் வாடகைக்கு எடுக்கிறவங்களோட பொறுப்பு. ‘ என்று ஒரு பொறுப்பற்ற பதில் தான் வந்தது. அட.. பதிலாவது வந்ததே என்று சந்தோசத்தில் வெளியே வந்து திருமணம் நடத்துபவர்களில் ஒருவரிடம் சொன்னேன்.

‘பிளாஸ்டிக் பயன்படுத்தறது சட்டப்படி குற்றம். நீங்க ஏன் கவலைப்படாம பயன்படுத்தறீங்க ?’

‘என்ன ? பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாதா ?’ என்று அவர் ஆச்சரியமும், வியப்பும் கலந்த குரலில் சொல்லியபோது அவருடைய தலைக்கு மேல் பரிதாபமாகத் தொங்கிக் கொண்டிருந்தது அறிவுப்புப் பலகை.

வாடகைக்கு விடுபவர்கள், வாடகைக்கு எடுப்பவர்கள், அரசு என ஒட்டுமொத்த பொறுப்பின்மையினால் சென்னை தினம் தோறும் மாசு அடைந்து கொண்டே இருக்கிறது !!

2 comments on “திருமண மண்டபங்களின் விதி மீறல்

  1. புரிகிறது – வேறு வழி – சட்டம் கடுமையாகத் தன் கடமையைச் செய்ய வேண்டும் – மாற்று வழி – காகித உபயோகம் – விலை குறைய வேண்டும் –

    Like

  2. புரிகிறது – வேறு வழி – சட்டம் கடுமையாகத் தன் கடமையைச் செய்ய வேண்டும் – மாற்று வழி – காகித உபயோகம் – விலை குறைய வேண்டும் –

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s