நிறைய ஆப்பிள் பழச்சாறு குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று யூ.கே வின் தேசிய இதய மற்றும் நுரையீரல் ஆராய்ச்சிக் கழகம் கண்டுபிடித்திருக்கிறது.
ஆப்பிள் உடல் நலத்திற்குப் பலவகைகளிலும் பயன்படும் என்று ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் தெரிவித்திருக்கின்றன. ஆனால் ஆப்பிள் ஜூஸ் குறித்து ஆராய்ச்சிகள் அதிகம் வந்ததில்லை.
இப்போதைய இந்த ஆராய்ச்சி குழந்தைகளுக்கு வரும் இழுப்பு நோயை ஆப்பிளை விட ஆப்பிள் ஜூஸ் அதிக வீரியத்துடன் தடுப்பதாகக் கூறி வியக்க வைத்திருக்கிறது.
தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் நிறைய ஆப்பிள் பழம் உட்கொண்டால் அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வரும் வாய்ப்பு இல்லையாம்.
ஆப்பிள் பழத்தை உட்கொள்ளும் முன் அதன் மேல் மெழுகு பூசப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிப்பது மிக மிக அவசியம். பெரும்பாலான ஆப்பிள்கள் பளபளப்பாக இருக்க மெழுகு பூசப்பட்டிருக்கும், அவை உடலுக்கு மிக மிக ஆபத்தானவை. மெழுகை முழுமையாய் அகற்றிய பின்பே உட்கொள்ள வேண்டும்.
அதுபோல ஆப்பிள் பழத்தை வெட்டிய உடனே சாப்பிட வேண்டும். வெட்டி விட்டு சிறிது நேரம் பொறுத்து சாப்பிட்டால் ஆப்பிள் ஆரோக்கியக் கேடு வருவிக்கும்
ஃ
ஆப்பிள் பழச்சாறை நீங்களே மிக்ஸியடிக்காமல், கடையில் வாங்கிக் குடித்தாலோ (அல்லது) பேக்கேஜ்ட் பழரசம் குடிப்பதாலோ கெடுதல் அதிகம். சர்க்கரை அளவு அதிகமாகப் போட்டிருப்பதால், ஜூஸை விட, நேரடியாக ஆப்பிளை உட்கொள்வதே சிறந்தது 🙂
LikeLike
இடுகைத் தகவலுக்கும் மறுமொழித் தகவலுக்கும் நன்றி
LikeLike
நன்றி 🙂
LikeLike
THANKS FOR YOU INFORMATION ITS HELPFUL FOR MY FAMILY
LikeLike
🙂
LikeLike
மிகவும் அருமை
LikeLike
நன்றி கண்ணன்…
LikeLike
thks mr xavier
LikeLike
hi
LikeLike