Life is Full of Difficult Decisions

தலைப்பில் உள்ள வாசகத்தை நண்பன் ஒருவன் சொன்னான். ஏன் என்று கேட்டேன். இந்தப் படத்தைப் பார் புரியும் என்றான் ! புரிகிறதா ??

lifeisfullofdifficultdecisions.jpg

சிவாஜி : இதெல்லாம் ரொம்ப ஓவர் !!!

சிவாஜி திரைப்படத்தை , பார்க்கலாம், வியக்கலாம், ரசிக்கலாம். தப்பில்லை ! ஆனால் இதெல்லாம் ரொம்ப ஓவருங்க !

சிவாஜி படம் நன்றாக ஓட வேண்டுமென்று பெண்கள் ஒன்று திரண்டிருப்பதைப் பாருங்கள் ! இத்தனை பெண்களை ஒற்றுமையாய் வேறெங்கேனும் சந்திக்க முடியுமா ? சந்தேகமே !

r1.jpg

கோயிலுக்குள் படப்பெட்டியை யானையில் வைத்துக் கொண்டு போயி வழிபாடாம் !
படப்பெட்டி போலாமாம் ! மனுஷன் போகக் கூடாதாம் !!

r2.jpg

மேலே போஸ்டரில் இளைய மகாத்மா !
கீழே பகிரங்கப் ப(லி)டுகொலை !

நல்ல பொருத்தம் !r3.jpg

மக்களுக்கு அறிவு வரணும்னு சிவாஜி நினைக்கிறார்.
உண்மை தான்.. !!! இவரையும் அந்த காலேஜ்ல சேத்துடுங்க !

r4.jpg

வீட்ல அப்பன் சாப்பாட்டுக்கு சேத்து வெச்சிருந்த பணம் சிவாஜி வாயிலே ஜிலேபி !!

r5.jpg

பாலூட்ட வழியற்ற தாய்மார்கள்
தேசத்தில்
பாலூற்றத் திரண்டிருக்கும்
நம்பிக்கை விடிவெள்ளிகள்.

r6.jpg

15 MB HardDisk $2495 !!! பழைய விளம்பரம் ஒன்று !!

இந்த விளம்பரத்தைப் பார்க்கும் போது, இன்றைய ஹார்ட் டிஸ்க் மற்றும் கணினி விலைகளோடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. !!!!

15-harddisk.jpg

மொட்டையடித்தால் டி-ஷர்ட் : கேரளாவில் ‘சிவாஜி’ ஸ்பெஷல் !

sivaji_malay1.jpg

கேரளாவில் ரஜினிகாந்தின் சிவாஜி படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

தமிழக ரசிகர்களை விட ஒரு படி மேலே போய் மலையாளம் ரசிகர்கள் வித்தியாசமான போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள் எர்ணாகுளம் முழுவதும்.

“ரஜினிகாந்த் ரசிகர்கள் கவனத்துக்கு” எனும் தலைப்பிட்ட போஸ்டரில் காணப்படும் விஷயம் இது தான்

தலையை மொட்டையடித்துக் கொண்டு வருபவர்களும், திரையில் அண்ணன் முதலில் வரும்போதும் முக்கியமான பாடல் காட்சிகளிலும் பூக்கள் வீச ஆசைப்படுபவர்களும், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்” !!!

அன்றைய தினத்தில் மொட்டையடித்துக் கொண்டு திரையரங்கிற்கு வந்த அனைவருக்கும் ரஜினி ரசிகர்கள் இலவச டி-ஷர்ட், இலவச சாப்பாடு கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். !

மம்முட்டி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் சிவாஜி படத்தைப் பார்த்து வியந்து பாராட்டியிருப்பதும் கேரளாவில் சிவாஜி பரபரப்பை எகிற வைத்திருக்கிறது !

சிவாஜி படம் பார்த்தேன் : பகிர்கிறேன்

2.jpg

சத்யம் திரையரங்கம் நேற்று தீபாவளித் திருநாளை கொண்டாடியது போல ஒரு தோற்றம்.

ரஜினியின் மகள்கள், ஸ்ரேயா, திரிஷா, பார்த்திபன், யுவன் சங்கர் ராஜா, கார்த்திக், பவதாரிணி என நட்சத்திரப் பட்டாளத்தில் மிக முக்கியமான நபராக நானும் சிவாஜியைப் பார்க்கும் வாய்ப்பு வாய்த்தது.

கல்வியை இலவசமாக வழங்கவேண்டும் என அமெரிக்க ரிட்டர் ரஜினிகாந்த் நினைக்கிறார். கல்வியை வியாபாரமாகப் பார்க்கும் வில்லன் எதிர்க்கிறார். நடுத்தெருவுக்கு வரும் ரஜினியிடம் சுமன் ஒரு ரூபாய் நாணயத்தை பிச்சையாகப் போடுகிறார்.

ரஜினி அந்த காசை சுண்டிப்போட்டு பூ வந்தால் பூபோல, தலை வந்தால் சிங்கம் போல என நினைக்கிறார். எல்லோரும் எதிர்பார்த்த தலை வருகிறது. தலைவர் சிலிர்க்கிறார்.

கருப்புப் பண முதலைகளிடமிருந்து பணம் பிடுங்கி சுமார் நாற்பத்து ஐயாயிரம் கோடி சம்பாதித்து, அதை அமெரிக்க டாலர்களாக்கி சிவாஜி ட்ரஸ்ட் மூலம் தான் நினைத்ததை நடத்துகிறார்.

வில்லன்கள் அவரைக் கொன்று விடுகிறார்கள். (அதான்.. வழக்கம் போல கொஞ்சம் உயிர் இருக்குது பொழச்சுக்கிறாரு ). உலகிற்கு சிவாஜி ரஜினி இறந்து விடுகிறார்.

அப்போது அந்த நிர்வாகத்தை நடத்த வருகிறார் எம்,ஜி,ஆர் – ரஜினி. களை கட்டுகிறது படம்.

இந்த கதையை வைத்துக் கொண்டு என்னத்த சாதித்து விட முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஷங்கர் புகுந்து விளையாடியிருக்கிறார்.

பிரேமுக்கு பிரேம் இது ரஜினி படம், ஷங்கர் படம் என்பதை உறுதி செய்கின்றன காட்சிகள்.

பாடல்களைப் படமாக்கியிருக்கும் விதம் அருமை. அதிலும் ‘அதிரடிக்காரன் மச்சான்’ பாடலில் ஷங்கரின் கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது. ரஜினியின் அசத்தல் உச்சத்தை எட்டுகிறது.

அதற்கு முந்தைய காட்சியில் சிவாஜி, எம்ஜியார், கமல் என ரஜினி தோன்றும் காட்சிகள் சுவாரஸ்யமானவை.

முழுக்க முழுக்க கண்ணாடி மாளிகையில் படமாக்கியிருக்கும் சஹானா பாடல் அற்புதம்.

சண்டைக்காட்சிகள் மின்னல். அசர வைக்கின்றன. ‘பன்றிகள் தான் கூட்டமா வரும், சிங்கம் தனியா தான் வரும்’ என்று ரஜினி சொல்லும் வசனம் வேறு ஏதோ படத்தில் அர்ஜூன் ? சொன்னதாக ஞாபகம்

நகைச்சுவைக்கு விவேக், ராஜா, சாலமன் எவருமே குறை வைக்கவில்லை.

ஸ்ரேயாவா இது ? இவ்ளோ அழகா இருக்காங்க ?

படம் மூன்று மணி நேரம். !!! ஷங்கர் ஷாட்டா படம் எடுக்க எப்போ கத்துக்கப் போறாரோ ?

மேக்கப் மாயாஜாலங்களையும் மீறி பல காட்சிகளில் ரஜினியின் ‘முதுமை ஊஞ்சலாடுகிறது’

‘பாட்ஷா’ ரஜினியின் வேகம் இந்த படத்தில் பல இடங்களில் மிஸ்ஸிங்,

பின்னணி இசை லயிக்க வைக்கிறது.

மொத்தத்தில் ரஜினிரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமைந்திருக்கிறது சிவாஜி !

Cool

விளக்கமாக காட்சிகளைச் சொன்னால் நீங்கள் படம் பார்க்கும் போது ரசிக்க இயலாது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

Sivaji : A Quick Review from Singapore..

sivaji-01.jpg

மின்னஞ்சலில் வந்த சிவாஜி விமர்சனம் !

The small rajini comes from US.the story begins from that.opening song is ballelaika with nayanthara.

The story moves normally with Vivek jokes.vivek has given an excellent performance.he has been given equal weightage to rajni in the first half.shriya is characterised as an innocent girl.then love with shriya.sahana song.

then she comes to know about the other side of rajini with violence.she fets apart.you might have seen that scene in the trailor.after she bangs the door,sahana sad version.

actualy rajini does all good things to people through violence and blackmiles like a villain since he doesnt get justice through rules.the scenes involving these sequences is one of the main highlight.then he describes the flashback to shreya regarding why he is doin all these.now big shivaji entrance.

THE FLASHBACK IS FOR 42 MINUTES SHARP.THIS IS THE MAIN HIGHLIGHT OF THE WHOLE MOVIE. RAJINI WITH MOTTAI GET UP IS THE BIG RAJINI.YOU MIGHT HAVE SEEN THOSE STILLS WITH MOTTAI RAJINI LIKE A DON. SHANKAR SAID THAT THERE IS A SURPRISE FOR RAJINI FANS IN THE MOVIE.THE MOTTAI GET UP IS THE SURPRISE.TAKE MY WORDS,THOSE 42 MINUTES ARE THE BEST EVER IN INDIAN CINEMA.THALAIAVR MAY POSSIBLY GET EVEN A NATIONAL AWARD FOR THAT.LOTS OF STYLE,PUNCH DIALOGUES & DEDICATED ACTING IN THAT 42 MINUTES.SIMPLY SAYING;PATTAIYA KELAPRA FLASHBACK.

since its too special,i cant say more about it.see it urself in the theatre.that would be more interesting. Rani Mukherjee IS THE SURPRISE HEROINE in the film.she is big Rajini’s pair.then big rajini is killed as said in the story.then small rajini takes revenge & he preaches about some ideas to our people & leaves the town.the film ends.
 
Main theme of the movie::

shankar has exploited that going against the laws for doing good to the
poor people is never wrong.and the main highlight is HE HAS INTRODUCED
SOME NEW METHODS AND IDEAS REGARDING HOW POOR PEOPLE CAN REFORM TO HIGH
SOCIETY,HOW VILLAGES CAN BE TRANSFORMED TO HIGH TECH CITIES.I REALY
FAINTED ON HEARING THOSE IDEAS AND HIS GORGEOUS IMAGINATION..HATS OFF
TO SHANKAR’S INTELLIGENCE.HE REALY DESERVES AN AWARD FOR THIS

சிவாஜி படக் கதையைச் சொன்னார் ரஜினி.

raj6.jpg

சிவாஜி படத்தின் கதையின் ஒரு துளி கூட வெளியே கசியக்கூடாது என்று பட யூனிட் முழுவதுமே கங்கணம் கட்டிக் கொண்டிருக்க ரஜினியே படத்தின் கருவை பத்திரிகையாளர்களிடம் சொன்னார்.

கல்வி குறித்தும் , கருப்புப் பணத்தை வெள்ளைப்பணமாக்குவது குறித்தும், சமுதாய விரோதிகளை எதிர்ப்பது குறித்துமே சிவாஜி திரைப்படம் இருக்கும் என்றும். அனைத்து தரப்பினரையும் திருப்திப் படுத்தும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

படத்தை வெற்றிகரமாக நடித்து முடித்தபின் ‘செட்’ போடாமல் திருப்பதிக்கு நேரடியாகவே சென்று திரும்பிய போதுதான் பத்திரிகையாளர்களிடம் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

சிவாஜி திரைப்படம் முன்பதிவில் சுமார் 1.7 கோடி ரூபாய் திரட்டி மிகப்பெரும் வியப்புச் சாதனை நிகழ்த்தியிருக்கிறதாம்.

ஒரு வாரம் சென்னையின் அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடினாலே படம் வெற்றி பெற்றுவிடும் என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் இதுவரை இல்லாத சாதனையாக 75 திரையரங்குகளில் சிவாஜி அதிரப்போகிறார். இதனால் மலையாளத் திரையுலகினர் அதிர்ச்சியும் எரிச்சலும் அடைந்திருக்கின்றனராம். காரணம் இதுவரை மலையாளப் படங்களுக்கே 45 பிரிண்ட் க்கு மேல் கேரளாவில் போட்டதே இல்லையாம் !!

ஆனாலும் ரஜினியின் சொந்த ஊரான கர்நாடகாவில் தான் இன்னும் மக்கள் ‘சுத்த கர்நாடகமாகவே’ இருக்கிறார்கள்

இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் 52 சதவீதம் பேர் ரஜினிக்கு ஆதரவாகவும், 48 சதவீதம் பேர் அமிதாப்பிற்கு ஆதரவாகவும் வாக்களித்து ரஜினி அமிதாப்பை விட அதிக ஆதரவுடையவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

இருபத்து நான்காம் தியதி சந்திரமுகி 800 வது நாள் விழா ! நாளைக்கு சிவாஜி முதல் நாள் ! பரபரப்புக்குப் பஞ்சமில்லை இந்த மாதம் !

படம் பாத்ததுக்கு அப்புறம் மிச்சம் மீதியைப் பேசலாம்

உங்களுக்கு சிறுகதை எழுதத் தெரியுமா ?

‘த சண்டே இந்தியன்’ ஆசிரியர் குழுவில் பணிபுரியும் நண்பரிடம் கடந்த முறை சந்தித்தபோது ஒரு வாதத்தை வைத்தேன்.

அதாவது வெகுஜன இதழ்களில் பணி புரிபவர்களுக்கு இணையத்தில் எழுதுபவர்களைப் பற்றி எதுவும் தெரிவதும் இல்லை, தெரிந்து கொள்ள ஆசைப்படுவதும் இல்லை என்றேன்.

அவர் அதை முழுமையாக மறுக்காமல் காரணம் கேட்டார்.

சிறுகதை, கவிதை, கட்டுரை என படைப்பிலக்கியத்தின் முக்கியக் கூறுகளும், மிகவும் தரமான படைப்புகளும் இணையத்தில் கிடைக்கின்றன ஆனால் வெகுஜன இதழ்கள் இணைய எழுத்தாளர்களை கவுரவிப்பதில்லை என்றேன்.

சரி சொல்ல வருவதை நேரடியாகச் சொல்லுங்கள் என்றார்

இணையத்தில் சிறுகதைகள் நிறைய வருகின்றன அவற்றில் சிலவற்றை நீங்கள் தேர்ந்தெடுத்து இந்திய அளவில் பதிமூன்று மொழிகளில் வெளிவரும் உங்கள் சண்டே இந்தியனில் போடலாமே என்றேன்.

அவ்வளவு தானா.. ? கண்டிப்பாக செய்கிறேன், ஆனால் இணையத்தில் என்னால் தேடி கண்டுபிடிக்க முடியாது. எனவே அச்சு இதழ்களில் பிரசுரமாகாத நல்ல கதைகள் இருந்தால் எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பச் சொல்லுங்கள். இதழில் பிரசுரிப்பதுடன் ரூபாய் 1500/- சன்மானமும் வழங்க ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

அதனால் தான் கேட்டேன். உங்களுக்கு சிறுகதை எழுதத் தெரியுமா என்று !

உங்கள் சிறுகதை மீது நம்பிக்கை இருந்தால் இந்த மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் sbuddhan@gmail.com . இணைய இதழ்களுக்கும், அச்சு இதழ்களுக்கும் தேவையான பாலம் கட்டும் பணியில் முதல் கல்லாவது நாட்டப்படட்டும்.