நானும், நீங்களும், மற்றவர்களும்

helmet.jpg

எதையும் கடைசி நேரத்தில் செய்வதில் தான் எல்லாருக்குமே ஒரு சுவாரஸ்யம் போல, அல்லது அதுதான் இரத்தத்தோடு ஊறிவிட்டது போல. எதிலும் திட்டமிடாத வாழ்க்கை நமக்கு மிகவும் பழகிப் போயிருக்கிறது.

காலையில் எட்டு மணிக்கு கிளம்ப வேண்டுமெனில் ஏழரை வரைக்கும் போர்த்திக் கொண்டே தூங்கி பின் எழுந்து அரக்கப் பரக்க ஓடுவது நமக்கு பழக்கமான காட்சி தானே.

ஆறு மாதங்கள் இருந்தாலும் பரீட்சைக்கு முந்தைய நாள் தானே அவசரமாய் படிக்கிறோம் ?

ஏழு மணிக்கு ரயில் வண்டியெனில் சரியாக ஏழுமணிக்கு தான் இரயில் நிலையம் வருகிறோம். மீட்டிங் நான்குமணிக்கெனில் இரண்டு நிமிடம் முன்னதாகவே வருவதை கௌரவக் குறைச்சலாய் பார்க்கிறோம்.

இந்த கடைசி நேர பரபரப்புகள் தான் பெரும்பாலும் நமக்கு மன உளைச்சலையும், நோய்களையும் தருகிறது. டிராபிக்கை திட்டுவதும், பஸ் லேட்டானால் எரிச்சலடைவதும் எல்லாம் இதன் விளைவுகளே.

கடைசி நேரப் பரபரப்பின் இன்னொரு வடிவத்தை நேற்று மாலையிலும் இன்று காலையிலும் சந்திக்க நேர்ந்தது.

கிரீம்ஸ்ரோட்டில் இருக்கும் அலுவலகத்திற்குச் செல்ல தேனாம்பேட்டையிலிருந்து ஜெமினி பாலம் வழியாக வந்து ஆயிரம் விளக்குப் பகுதியை தாண்டவே 30 நிமிடங்கள் ஆகிவிட்டது ( பொதுவாக 3 நிமிடம் ).

ஹெல்மெட் வாங்க ஆயிரம் விளக்குப் பகுதியில் வந்து குவிந்து கிடந்த ஆயிரக் கணக்கான மக்கள் தான் இதற்குக் காரணம்.

மாதக்கணக்காய் கரடியாய் கத்திக் கொண்டிருந்தாலும் கூட கடைசி நேரத்தில் தடை செய்துவிடுவார்கள், யாராவது ஸ்டே வாங்கி விடுவார்கள் என்று நினைத்து நினைத்தே காலத்தை ஓட்டிய மக்களின் மனநிலையை என்ன சொல்ல ?

ஹெல்மெட் தன் தலைக்குத் தேவை என்று யாருமே வாங்கவில்லை போல. எல்லோரும் வேறு வழியில்லாமல் ( சும்மா சும்மா போலீசுக்குக் கொடுக்கற காசுல நாலு வாங்கலாம்லே ) வாங்கக் குவிந்தனர்.

சரி நேற்று தான் அப்படி இன்று சரியாகி இருக்கும் என்று பார்த்தால், ஏதோ சிவாஜி படத்துக்குக் குவிந்து கிடக்கும் கூட்டம் போல கடை திறக்கும் முன்பே மக்கள் கூட்ட முண்டியடித்ததால் பெரிய போக்குவரத்து நெரிசல் இன்று காலையிலும் ஏற்பட்டது என்பது ஆச்சரியம்.

‘எதையும் கொஞ்சம் முன்னாடியே திட்டமிடலாமே’ என்று இன்னும் ஹெல்மெட் வாங்காத நண்பன் ஒருவனைக் கேட்டேன். ‘விஷயம் தெரியாதா ? இன்னும் மூணு நாள்ல ஸ்டே வாங்கிடுவாங்களாம். இல்லேன்னா பாத்துக்கலாம்’ என்றான் !!!

Advertisements

4 comments on “நானும், நீங்களும், மற்றவர்களும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s