காற்றில் ஓடும் கார் ! 2 ரூபாய்க்கு 200 கி.மீ !!!

aircar.jpg

காற்றினால் இயங்கும் கார் ஒன்று விரைவில் சாலைகளில் ஓடப்போகிறது, பழைய பார்முலா ஒன் பொறியாளர் நெக்ரேயின் உதவியுடன் டாட்டா இந்த தயாரிப்பில் இறங்கப் போகிறது.

காற்றின் அழுத்தத்தினால் இயங்கும் இந்த வாகனம் முதலில் சோதனைத் தயாரிப்பாக ஆறாயிரம் எனும் எண்ணிக்கையில் இந்தியத் தெருக்களில் ஓடப் போகின்றன. அதுவும் இரண்டாயிரத்து எட்டிலேயே !

இந்த வாகனம் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். ஒரு முறை காற்றடித்தால் சுமார் இருநூறு கிலோ மீட்டர் தூரம் வரை இந்த வாகனம் ஓடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நகர போக்குவரத்திற்கு இந்த வாகனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இரண்டு ரூபாய் கொடுத்து ஒருமுறை காற்றடித்தால் இருநூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வைக்கும் இந்த கார் அதிக விலை இல்லாமல் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் விலை ரகசியங்கள் வெளிவரவில்லை.

ஒருவேளை காற்றடிக்க இடம் இல்லாமல் போனால் என்ன செய்வது ? அதற்கும் அவர்கள் வழி செய்திருக்கிறார்கள். காரிலேயே இணைக்கப்பட்டிருக்கும் காற்றடிக்கும் வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாமாம். ஆனால் என்ன ஒரு நான்கு மணி நேரமாகுமாம் அப்படிக் காற்றடிக்க.

இந்தியா உட்பட ஜெர்மனி, இஸ்ரேல் , தென் ஆப்பிரிக்கா என பன்னிரண்டு நாடுகளில் விற்பனைக்கு வரப்போகும் இந்த வாகனமத்திற்கு அமெரிக்காவில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம். அமெரிக்க சாலைகளின் வேகத்தில் இந்த கார்கள் சென்றால் பாதுகாப்பாக இருக்காது என்பது அவர்களுடைய விபத்துச் சோதனையின் முடிவு.

Advertisements

7 comments on “காற்றில் ஓடும் கார் ! 2 ரூபாய்க்கு 200 கி.மீ !!!

 1. //ஒருவேளை காற்றடிக்க இடம் இல்லாமல் போனால் என்ன செய்வது ? அதற்கும் அவர்கள் வழி செய்திருக்கிறார்கள். காரிலேயே இணைக்கப்பட்டிருக்கும் காற்றடிக்கும் வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாமாம். ஆனால் என்ன ஒரு நான்கு மணி நேரமாகுமாம் அப்படிக் காற்றடிக்க.//
  இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறார் செந்தில். அவரிடம் சொன்னால் அவர் கவுண்டமணியிடம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் தருவதாக சொல்லி அவர் சமையல் வேலையை விட்டுவிட்டு வரச் சொல்லுவார். வந்தவுடன் ஒரு பெரிய விசிறியை கொடுத்து, காற்று வீசச் சொல்வார்.

  கவுண்டமணி டென்ஷன் ஆவது தனி விஷயம்.

  உங்களுக்கு இப்பின்னூட்டம் பிடிபடாவிட்டாலும் பரவாயில்லை போடுங்கள். நிச்சயம் பல பேருக்கு புரியும்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  Like

 2. How do you refill the compressed air tanks? How much does it cost?
  The car’s air tanks will be refilled thanks to the same internal engine working in compressor mode. This will take about four hours and 22 Kwh of electricity are needed as energy. Otherwise the tanks can be refilled with high pressure in three minutes at an air station. The cost of refueling with the generator will be approximately 1.5 Euros.

  Like

 3. வாங்கலாம்ன்னு தான் நினைச்சேன். வினோத் ஏதோ சொல்றாரு, வாங்கலாம்ன்னு சொல்றாரா வேண்டாம்ன்னு சொல்றாரா தெரியலை. அதனால விட்டுட்டேன் 😉

  Like

 4. Pingback: கில்லி - Gilli » Blog Archive » காற்றில் ஒடும் கார்

 5. தற்செயலாக ஒரு நாள் அரைகுறையாக இந்த செய்தியை கேட்டேன்.
  அடிக்கடி என் மனதை அது குடைந்து கொண்டிருந்தது.
  முழுத்தகவலுக்கு நன்றி.

  நடுத்தர மக்களுக்கு ஆட்டோ கெடுபிடியிலிருந்து விடுதலை.
  ( காரை நிப்பாட்ட இடம்?)
  இந்த மடக்கு கட்டில், நாற்க்காலி மாதிரி காரையும்
  சுருட்டி மடக்கி வைக்க ஏதாவது வ௯ழியிருந்தால் நல்லது.

  Like

 6. போன ஆண்டு 2007, ஜூன் மாதம் இந்த செய்தியைப் போட்டேன். ஆனால் இந்த ஆண்டு துவக்கத்தில் தான் இந்த செய்தி பத்திரிகைகளில் பேசப்படுகிறது. !

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s