தலைமுறையை முடமாக்கும் குளிர்பானங்கள்

coke.jpg

வெயில் உடலிலிருக்கும் வெப்பத்தையெல்லாம் உறிஞ்சி எடுத்து மனிதனை சக்கையாக்கும் காலம் இது. இந்தக் காலகட்டத்தில் ஏதேனும் பானத்தைக் குடித்துத் தாகத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும் என அனைவரும் நினைப்பது இயல்பு.

ஆனால் எல்லா பானங்களுமே உடலின் தேவையை பூர்த்தி செய்வதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக இன்றைய ஊடகங்கள் பிரபலப்படுத்தியிருக்கும் பல குளிர்பானங்கள் உடலுக்கு நன்மை விளைவிப்பதற்குப் பதிலாக ஊறு விளைவிக்கின்றன என்பது பொதுவாக நாம் அறிந்ததே.

இதை மெய்ப்பிக்கும் விதமாக வந்திருக்கும் இன்னொரு ஆராய்ச்சி அதிர்ச்சியளிக்கிறது.

அதிகமாக குளிர்பானங்களை குடிக்கும் குழந்தைகளுக்கு டி.என்.ஏ பாதிக்கும் அபாயம் இருக்கிறதாம் ! E211 அல்லது சோடியம் பென்சோனைட் போன்றவை ஃபாண்டா, பெப்சி போன்ற குளிர்பானங்களில் உள்ளன. இவை டி.என்.ஏவை பாதிக்குமாம்!!!

டி.என்.ஏ பாதிப்பு என்பது பல் சொத்தை விழுவதைப் போன்ற சிறு பாதிப்பு அல்ல. தலை முறை தலைமுறையாகக் தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறையினரை நோயாளிகளாக்கும் வீரியமுடையது.

இத்தகைய பாதிப்பு மிகவும் கொடிய நோய்களான பார்கின்ஸ்டன், லிவர் சிர்கோஸிஸ் போன்ற பயங்கரமான நோய்களை உருவாக்கும் அபாயமும் உள்ளது. இவை சிறுக சிறுக உடலை ஆக்கிரமித்து மனித வாழ்வையே முடமாக்கிவிடும் என அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

லண்டனிலுள்ள பேராசிரியலர் பைப்பர் இது குறித்துப் பேசுகையில் குளிர்பானங்கள், உணவுப் பொருட்கள் தரமானதுதானா, உடலுக்கு ஊறு விளைவிக்காதா என்பதைச் சோதிக்கும் முறைகள் நவீனப்படுத்தப்பட வேண்டும். தற்போதைய அபாய சூழலிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.

சோடியம் பென்சோனைட் மற்றும் பென்சோயிக் ஆசிட் உணவுப் பொருட்களில் இருக்க அனுமதிக்கப்பட்டவை என்பது வியப்பூட்டும் தகவல். இவை அனுமதிக்கப்படக் கூடாது என்று பலமுறை வலியுறுத்தியும் இன்னும் அவை கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

FDA ( Food and Drug Administration ) சில வருடங்களுக்கு முன் ஊழலில் திளைத்து தவறான அங்கீகாரத்தை சில மருந்துகளுக்கு வழங்கிய செய்தி நாளேடுகளில் வந்திருந்தது. எனவே இந்த அங்கீகாரக் குழுவின் அங்கீகாரமே கேள்விக்குரியதாகி இருக்கிறது.

குளிர்பான தயாரிப்பு முதலாளிகள் இதை பாதுகாப்பான பானம் என்று கூவிக் கூவி விற்கிறார்கள், அதற்கு அவர்கள் ஊடகங்களையும் திரை, விளையாட்டு நட்சத்திரங்களையும் பயன்படுத்துகிறார்கள்.

மேலை நாடுகளைப் பொறுத்தவரை மக்கள் பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக அங்கே இத்தகைய குளிர்பான வியாபாரம் குறைந்து பழச்சாறு வியாபாரம் முன்னேற்றம் கண்டிருக்கிறது.

ஊழலுக்கும், சுயநலத்துக்கும் பெயர்போன அரசு அதிகாரிகள் இருக்கின்ற இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் தான் இத்தகைய கொடிய குளிர்பானங்கள் மக்களின் பணத்தை உறிஞ்சி உடல்நலத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றன. வெளிநாடுகளுக்கென தயாராக்கும் குளிர்பானங்களுக்குக் கடைபிடிக்கும் பாதுகாப்புக் கவனத்தையும், சிரத்தையையும் முதலாளிகள் மூன்றாம் உலக நாடுகளுக்கென தயாராக்கும் குளிர்பானங்களில் காட்டுவதில்லை என்பது இன்னொரு வருத்தத்துக்குரிய உண்மை.

கான்சர் நோயை உருவாக்கும் லிண்டேன் எனும் விஷத்தன்மை குறிப்பிட்ட அளவை விட 140 மடங்கு அதிகமாக இந்த குளிர்பானங்களில் இருக்கின்றன .Heptachlor எனும் தடை செய்யப்பட்ட பொருளும் இந்த குளிர்பானங்களில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்திருக்கின்றன.

பெண்களுக்கு வரும் osteoporosis எனும் எலும்பு முறிவு நோய்க்கு இந்த குளிர்பானங்கள் பெருமளவு காரணமாக இருக்கின்றன என்பதும், இந்த நோய் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களில் ஏராளமானோருக்கு இருக்கிறது என்பதும் கவலைக்குரிய செய்தியாகும்.

உடலிலுள்ள கால்சியம் சத்து குறையவும், பாஸ்பரஸ் அளவு உயரவும் இந்த குளிர்பானங்கள் காரணமாக இருப்பதனால் இந்த நோய் வருவதாக மிக்கேல் முர்ரே தன்னுடைய ஆய்வில் தெரிவித்துள்ளார்.

இந்த குளிர்பானங்களிலுள்ள காஃபைன் உடலுக்கு தீமை செய்வதுடன் பல்லின் எனாமல் சேதமாக இவை காரணமாகி விடுகின்றன.

வினிகரிலும், இந்த வகை குளிர்பானங்களிலும் ஒரே அளவு அசிடிடி பொருட்கள் இருப்பது நேவல் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சோடாக்களில் உள்ள ஆஸ்படேம் ( aspartame ) எனும் பொருள் அதிக அளவில் உடலில் சேர்ந்தால் மூளை புற்றுநோய்க்கு சாத்தியம் இருப்பதாக சாமுவேல் எஸ் எப்ஸ்டீன் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இதிலுள்ள மீத்தேல் அல்லது மரச்சாராயம் எனும் பொருள் மூளை வளர்ச்சியையே பாதிக்கும் என்கிறார் எரால் மைண்டெல் எனும் மருத்துவர். இது மலச்சிக்கல், கால்சியம் குறைபாடு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு இவற்றுக்கும் காரணமாகி விடும் அபாயம் உண்டு என்கிறார் அவர்.

இந்தியாவின் கார்பொனேட்டட் குளிர்பானங்களின் 90 விழுக்காடு விற்பனையை வைத்திருக்கும் இந்த பெப்சி, கோலா குளிர்பானங்கள் விஷங்களையே வினியோகிக்கின்றன என்பது இந்த ஆராய்ச்சிகளின் தீர்க்கமான முடிவு. தற்போதைய டி.என்.ஏ அச்சுறுத்தல் இதன் உச்சகட்டமாக வந்திருக்கிறது. இனிமேலாவது அரசு விழிப்படைந்து செயல்பாட்டில் இறங்குதல் நலம்.

அரசு ஆணைக்காகக் காத்திருக்காமல் நாமே நம் அன்றாட வாழ்க்கையில் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த செயல்படுதலே நமது றறிவுக்கு நாம் செய்யும் மரியாதையாய் இருக்கும்.

Advertisements

12 comments on “தலைமுறையை முடமாக்கும் குளிர்பானங்கள்

 1. ////////////////////
  அரசு ஆணைக்காகக் காத்திருக்காமல் நாமே நம் அன்றாட வாழ்க்கையில் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த செயல்படுதலே நமது அறிவுக்கு நாம் செய்யும் மரியாதையாய் இருக்கும்.
  ////////////////////

  அறிவு இருக்கிறவனுக்கு தான் நீங்க சொல்றது . . . . . .

  ஸ்டைலுக்காகவும் பேஷனுக்காகவும் குடிக்கிறவிங்கள ஒன்னும் பண்ண முடியாது.

  நல்ல பதிவு

  Like

 2. நல்ல இடுகை. உங்கள் பதிவுகள் நவரசமானவையாக இருக்கின்றன.

  நல்ல சுவாரஸ்யம்

  நீண்டகால வாசகன் 😉

  Like

 3. Xavi,

  Good information, btw, enge irunthu ivalavu information gather panna? first title pakkum pothu enge beer/whisky adikka koodathu solla poriyoo nenachi bayanthukittte padichen..nalla vela mixing product’la taaan kai vechi irukka..main’a vittutta..:o) hereafter mixing, i will use cocunut or lemon choose..illati raw’vaa adhichittu poren..vittu taallu machi

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s