உங்களுக்கு சிறுகதை எழுதத் தெரியுமா ?

‘த சண்டே இந்தியன்’ ஆசிரியர் குழுவில் பணிபுரியும் நண்பரிடம் கடந்த முறை சந்தித்தபோது ஒரு வாதத்தை வைத்தேன்.

அதாவது வெகுஜன இதழ்களில் பணி புரிபவர்களுக்கு இணையத்தில் எழுதுபவர்களைப் பற்றி எதுவும் தெரிவதும் இல்லை, தெரிந்து கொள்ள ஆசைப்படுவதும் இல்லை என்றேன்.

அவர் அதை முழுமையாக மறுக்காமல் காரணம் கேட்டார்.

சிறுகதை, கவிதை, கட்டுரை என படைப்பிலக்கியத்தின் முக்கியக் கூறுகளும், மிகவும் தரமான படைப்புகளும் இணையத்தில் கிடைக்கின்றன ஆனால் வெகுஜன இதழ்கள் இணைய எழுத்தாளர்களை கவுரவிப்பதில்லை என்றேன்.

சரி சொல்ல வருவதை நேரடியாகச் சொல்லுங்கள் என்றார்

இணையத்தில் சிறுகதைகள் நிறைய வருகின்றன அவற்றில் சிலவற்றை நீங்கள் தேர்ந்தெடுத்து இந்திய அளவில் பதிமூன்று மொழிகளில் வெளிவரும் உங்கள் சண்டே இந்தியனில் போடலாமே என்றேன்.

அவ்வளவு தானா.. ? கண்டிப்பாக செய்கிறேன், ஆனால் இணையத்தில் என்னால் தேடி கண்டுபிடிக்க முடியாது. எனவே அச்சு இதழ்களில் பிரசுரமாகாத நல்ல கதைகள் இருந்தால் எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பச் சொல்லுங்கள். இதழில் பிரசுரிப்பதுடன் ரூபாய் 1500/- சன்மானமும் வழங்க ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

அதனால் தான் கேட்டேன். உங்களுக்கு சிறுகதை எழுதத் தெரியுமா என்று !

உங்கள் சிறுகதை மீது நம்பிக்கை இருந்தால் இந்த மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் sbuddhan@gmail.com . இணைய இதழ்களுக்கும், அச்சு இதழ்களுக்கும் தேவையான பாலம் கட்டும் பணியில் முதல் கல்லாவது நாட்டப்படட்டும்.

Advertisements

7 comments on “உங்களுக்கு சிறுகதை எழுதத் தெரியுமா ?

 1. தமிழ் அச்சிதழ்ப் பத்திரிகையாளர்களுக்கு இணையம் பற்றித் தெரியாது என்பது ஒரு பொத்தாம் பொதுவான Sweeping Statement.நான் அச்சிதழ்கள் இணையம் இரண்டிலும் எழுதிவருகிறேன். திசைகள் இதழில் வெளியான கவிதைகளை ஆனந்தவிகடன் வெளியிட்டதுண்டு. குங்குமம், தினமலர் போன்றவை வலைப்பதிவுகளிலிருந்து எடுத்து மறு பிரசுரம் செய்திருக்கின்றன.

  போதுமான அளவு இல்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள். ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் புனைகதைகளுக்கான இடம் அச்சிதழ்களில் குறைந்து கொண்டே வருகிறது என்பதும் ஓர் உண்மைதானே?

  Like

 2. //போதுமான அளவு இல்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள். ஏற்றுக் கொள்கிறேன். //

  வாங்க மாலன் சார். உண்மை தான். அரிசியில் ஆங்காங்கே கல் கிடப்பது போல தான் அங்கொன்றும் இங்கொன்றும் அங்கீகாரம் கிடைக்கின்றன.

  நான் உங்கள் திசைகள் பத்திரிகையில் கவிதைகள் எழுதியதுண்டு. மாலன் நடத்தும் பத்திரிகையில் வரும் கவிதைகள் வெகுஜன கவனத்துக்கு வருவதில் ஆச்சரியமில்லை. காரனம் மாலன்.

  அம்பலம் இதழில் வந்த படைப்புகளும் அச்சு இதழ்களில் வந்திருக்கின்றன. காரணம் சுஜாதா.

  இப்படி ஒரு அச்சு இதழ்களின் கவனத்தைக் கவர்ந்த நபர் நடத்தாத இணைய பத்திரிகைகள் இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை.

  //ஆனால் புனைகதைகளுக்கான இடம் அச்சிதழ்களில் குறைந்து கொண்டே வருகிறது என்பதும் ஓர் உண்மைதானே //

  100% உண்மை !

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s