சிவாஜி படக் கதையைச் சொன்னார் ரஜினி.

raj6.jpg

சிவாஜி படத்தின் கதையின் ஒரு துளி கூட வெளியே கசியக்கூடாது என்று பட யூனிட் முழுவதுமே கங்கணம் கட்டிக் கொண்டிருக்க ரஜினியே படத்தின் கருவை பத்திரிகையாளர்களிடம் சொன்னார்.

கல்வி குறித்தும் , கருப்புப் பணத்தை வெள்ளைப்பணமாக்குவது குறித்தும், சமுதாய விரோதிகளை எதிர்ப்பது குறித்துமே சிவாஜி திரைப்படம் இருக்கும் என்றும். அனைத்து தரப்பினரையும் திருப்திப் படுத்தும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

படத்தை வெற்றிகரமாக நடித்து முடித்தபின் ‘செட்’ போடாமல் திருப்பதிக்கு நேரடியாகவே சென்று திரும்பிய போதுதான் பத்திரிகையாளர்களிடம் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

சிவாஜி திரைப்படம் முன்பதிவில் சுமார் 1.7 கோடி ரூபாய் திரட்டி மிகப்பெரும் வியப்புச் சாதனை நிகழ்த்தியிருக்கிறதாம்.

ஒரு வாரம் சென்னையின் அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடினாலே படம் வெற்றி பெற்றுவிடும் என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் இதுவரை இல்லாத சாதனையாக 75 திரையரங்குகளில் சிவாஜி அதிரப்போகிறார். இதனால் மலையாளத் திரையுலகினர் அதிர்ச்சியும் எரிச்சலும் அடைந்திருக்கின்றனராம். காரணம் இதுவரை மலையாளப் படங்களுக்கே 45 பிரிண்ட் க்கு மேல் கேரளாவில் போட்டதே இல்லையாம் !!

ஆனாலும் ரஜினியின் சொந்த ஊரான கர்நாடகாவில் தான் இன்னும் மக்கள் ‘சுத்த கர்நாடகமாகவே’ இருக்கிறார்கள்

இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் 52 சதவீதம் பேர் ரஜினிக்கு ஆதரவாகவும், 48 சதவீதம் பேர் அமிதாப்பிற்கு ஆதரவாகவும் வாக்களித்து ரஜினி அமிதாப்பை விட அதிக ஆதரவுடையவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

இருபத்து நான்காம் தியதி சந்திரமுகி 800 வது நாள் விழா ! நாளைக்கு சிவாஜி முதல் நாள் ! பரபரப்புக்குப் பஞ்சமில்லை இந்த மாதம் !

படம் பாத்ததுக்கு அப்புறம் மிச்சம் மீதியைப் பேசலாம்

Advertisements

One comment on “சிவாஜி படக் கதையைச் சொன்னார் ரஜினி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s