சிவாஜி படம் பார்த்தேன் : பகிர்கிறேன்

2.jpg

சத்யம் திரையரங்கம் நேற்று தீபாவளித் திருநாளை கொண்டாடியது போல ஒரு தோற்றம்.

ரஜினியின் மகள்கள், ஸ்ரேயா, திரிஷா, பார்த்திபன், யுவன் சங்கர் ராஜா, கார்த்திக், பவதாரிணி என நட்சத்திரப் பட்டாளத்தில் மிக முக்கியமான நபராக நானும் சிவாஜியைப் பார்க்கும் வாய்ப்பு வாய்த்தது.

கல்வியை இலவசமாக வழங்கவேண்டும் என அமெரிக்க ரிட்டர் ரஜினிகாந்த் நினைக்கிறார். கல்வியை வியாபாரமாகப் பார்க்கும் வில்லன் எதிர்க்கிறார். நடுத்தெருவுக்கு வரும் ரஜினியிடம் சுமன் ஒரு ரூபாய் நாணயத்தை பிச்சையாகப் போடுகிறார்.

ரஜினி அந்த காசை சுண்டிப்போட்டு பூ வந்தால் பூபோல, தலை வந்தால் சிங்கம் போல என நினைக்கிறார். எல்லோரும் எதிர்பார்த்த தலை வருகிறது. தலைவர் சிலிர்க்கிறார்.

கருப்புப் பண முதலைகளிடமிருந்து பணம் பிடுங்கி சுமார் நாற்பத்து ஐயாயிரம் கோடி சம்பாதித்து, அதை அமெரிக்க டாலர்களாக்கி சிவாஜி ட்ரஸ்ட் மூலம் தான் நினைத்ததை நடத்துகிறார்.

வில்லன்கள் அவரைக் கொன்று விடுகிறார்கள். (அதான்.. வழக்கம் போல கொஞ்சம் உயிர் இருக்குது பொழச்சுக்கிறாரு ). உலகிற்கு சிவாஜி ரஜினி இறந்து விடுகிறார்.

அப்போது அந்த நிர்வாகத்தை நடத்த வருகிறார் எம்,ஜி,ஆர் – ரஜினி. களை கட்டுகிறது படம்.

இந்த கதையை வைத்துக் கொண்டு என்னத்த சாதித்து விட முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஷங்கர் புகுந்து விளையாடியிருக்கிறார்.

பிரேமுக்கு பிரேம் இது ரஜினி படம், ஷங்கர் படம் என்பதை உறுதி செய்கின்றன காட்சிகள்.

பாடல்களைப் படமாக்கியிருக்கும் விதம் அருமை. அதிலும் ‘அதிரடிக்காரன் மச்சான்’ பாடலில் ஷங்கரின் கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது. ரஜினியின் அசத்தல் உச்சத்தை எட்டுகிறது.

அதற்கு முந்தைய காட்சியில் சிவாஜி, எம்ஜியார், கமல் என ரஜினி தோன்றும் காட்சிகள் சுவாரஸ்யமானவை.

முழுக்க முழுக்க கண்ணாடி மாளிகையில் படமாக்கியிருக்கும் சஹானா பாடல் அற்புதம்.

சண்டைக்காட்சிகள் மின்னல். அசர வைக்கின்றன. ‘பன்றிகள் தான் கூட்டமா வரும், சிங்கம் தனியா தான் வரும்’ என்று ரஜினி சொல்லும் வசனம் வேறு ஏதோ படத்தில் அர்ஜூன் ? சொன்னதாக ஞாபகம்

நகைச்சுவைக்கு விவேக், ராஜா, சாலமன் எவருமே குறை வைக்கவில்லை.

ஸ்ரேயாவா இது ? இவ்ளோ அழகா இருக்காங்க ?

படம் மூன்று மணி நேரம். !!! ஷங்கர் ஷாட்டா படம் எடுக்க எப்போ கத்துக்கப் போறாரோ ?

மேக்கப் மாயாஜாலங்களையும் மீறி பல காட்சிகளில் ரஜினியின் ‘முதுமை ஊஞ்சலாடுகிறது’

‘பாட்ஷா’ ரஜினியின் வேகம் இந்த படத்தில் பல இடங்களில் மிஸ்ஸிங்,

பின்னணி இசை லயிக்க வைக்கிறது.

மொத்தத்தில் ரஜினிரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமைந்திருக்கிறது சிவாஜி !

Cool

விளக்கமாக காட்சிகளைச் சொன்னால் நீங்கள் படம் பார்க்கும் போது ரசிக்க இயலாது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

Advertisements

15 comments on “சிவாஜி படம் பார்த்தேன் : பகிர்கிறேன்

 1. Super xavier! thalaivar padathai eppo parpomonu avala iruku 🙂 good or bad, thalaivar on screen is enjoyable 🙂

  Like

 2. Pingback: சிவாஜி படம் பார்த்தேன் : பகிர்கிறேன் « கவிதைச் சாலை

 3. Pingback: Sivaji - More Reviews « கில்லி - Gilli

 4. சூப்பரப்பு…

  //மேக்கப் மாயாஜாலங்களையும் மீறி பல காட்சிகளில் ரஜினியின் ‘முதுமை ஊஞ்சலாடுகிறது’ //

  அசத்திட்டீங்க.. டிரெய்லரிலேயே அது தெரியும் ஒரு வசனத்தில், “சாகப்போற நாள் தெரிஞ்சுட்டா வாழற நாள் அப்புறம் நரகமாயிடும்” அப்படின்னு தலைவர் சொல்ற சீன்ல….

  Like

 5. //விளக்கமாக காட்சிகளைச் சொன்னால் நீங்கள் படம் பார்க்கும் போது ரசிக்க இயலாது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.//
  சொல்றதையெல்லாம் சொல்லியாச்சே..

  ரெண்டு வரி படிச்சிட்டு எஸ்கேப் ஆயிட்டேன். நாளைக்கு நானும் பாக்கணும்ல.

  :))

  Like

 6. Pingback: Sivaji (The Boss) - Bachelor of Silver Screen « Snap Judgment

 7. Pingback: Top Posts « WordPress.com

 8. லாஜிக், ஷங்கர் பற்றியெல்லாம் யோசிக்காமல் பார்த்தால் இது ஒரு extraordinary ரஜினி ஷோ. அவ்வளவுதான். நான் ரசித்து பார்த்தேன்.
  உங்க விமர்சன பார்வையும் நல்லா இருக்கு.

  Like

 9. kodatha kasu Sahana songuke sariapochuuuu…..
  Konjam fight scenes time korachi mottaiku ennum neria neram
  koduthuirutnha “ennum soundaaa athirumillaa!!!!!!!!!!”
  ana rasigargalluku nalla virunthu….

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s