சிவாஜி : இதெல்லாம் ரொம்ப ஓவர் !!!

சிவாஜி திரைப்படத்தை , பார்க்கலாம், வியக்கலாம், ரசிக்கலாம். தப்பில்லை ! ஆனால் இதெல்லாம் ரொம்ப ஓவருங்க !

சிவாஜி படம் நன்றாக ஓட வேண்டுமென்று பெண்கள் ஒன்று திரண்டிருப்பதைப் பாருங்கள் ! இத்தனை பெண்களை ஒற்றுமையாய் வேறெங்கேனும் சந்திக்க முடியுமா ? சந்தேகமே !

r1.jpg

கோயிலுக்குள் படப்பெட்டியை யானையில் வைத்துக் கொண்டு போயி வழிபாடாம் !
படப்பெட்டி போலாமாம் ! மனுஷன் போகக் கூடாதாம் !!

r2.jpg

மேலே போஸ்டரில் இளைய மகாத்மா !
கீழே பகிரங்கப் ப(லி)டுகொலை !

நல்ல பொருத்தம் !r3.jpg

மக்களுக்கு அறிவு வரணும்னு சிவாஜி நினைக்கிறார்.
உண்மை தான்.. !!! இவரையும் அந்த காலேஜ்ல சேத்துடுங்க !

r4.jpg

வீட்ல அப்பன் சாப்பாட்டுக்கு சேத்து வெச்சிருந்த பணம் சிவாஜி வாயிலே ஜிலேபி !!

r5.jpg

பாலூட்ட வழியற்ற தாய்மார்கள்
தேசத்தில்
பாலூற்றத் திரண்டிருக்கும்
நம்பிக்கை விடிவெள்ளிகள்.

r6.jpg

Advertisements

58 comments on “சிவாஜி : இதெல்லாம் ரொம்ப ஓவர் !!!

 1. thalaivargal kodiyil purala,,,,,thondargal theru kodiyil……ilaiya mahatma….Gandhi note i ye pathathillai periya mahatma….gandhi note i thavira ethaiume pakarathillai ilaya mahatma..

  Like

 2. இரசிகர்கள் என்ற பெயரில் இருக்கும் பாரிய முட்டாள்களே இவர்கள்……

  Like

 3. சிவாஜி படத்துக்கான இணைப்பு
  ( மன்னிக்கவும்.. இணைப்பை எடுத்து விட்டேன் )

  Like

 4. சேவியர் இந்தியா போன்ற ஆன்மீக பூமியில் இதுபோன்ற ஆராதனைகள் தவிர்க்க இயலாதது. பிரார்த்தனைகள் அர்த்தமற்றது என்ற புத்தன் கடவுளாக்கப்பட்டான். தனிமனித துதியை அறவே வெறுத்த பெரியாரின் பிள்ளைகள் ஊர்தோறும் சிலைகளும் அவை சார்ந்த வன்முறைகளையும் நிகழ்த்தி வருகின்றன. அவற்றின் நீட்சிதான் இவைகளும். மேற்கண்ட புகைப்படங்களின் அடிநாதமாக ‘கவன ஈர்ப்பு’ என்கின்ற ஒரு ஆதார விஷயமும் இருக்கிறது. நான்கு பேரை திரும்பிபார்க்கவைக்க வைக்கிற சின்ன, சின்ன ஜிம்மிக்ஸ்கள் இவை.

  Like

 5. சிவாஜி படத்துக்கான இணைப்பு
  ( மன்னிக்கவும்.. இணைப்பை எடுத்து விட்டேன். தயவு செய்து எனது தளத்தில் போடாதீர்கள் )

  Like

 6. எம்மூவி ச்சூஸ்தார்க்கும் தெளிவுண்டாம் தெளிவில்லை சிவ்வாஜ்ஜி பார்த்த மகர்க்கு.

  அடக்கம் அண்டிராயரை காக்கும் ஆடம்பரம்
  அருணா சவத்தையே கவுக்கும்.

  தொட்டணைத் தூறும் மணற்கேணி ராவ்காருக்கு

  திட்டணைத் தூறும் வசூல்

  Like

 7. எப்படியோ ரஜினி எதிர்ப்பு அலை உருவாகினால் சரி.

  Like

 8. Mr.Rajinifan…..pera keatta adhirum…DTS theatre la padam paartha…intha vasanaththi vadivelu pesinalim DTS la adhirum….Ovvoru padaththukku pinnalayum nairaya technical velai irukku…muthallla Hats off to Makeup man…
  KURANGAI KILIYA MAARTHTHINATHUKKU….
  MUTHALLA UN VEETTA KAVANI…..ILLATTI UN VEEDU ADHIRUM….POIYA…..PO…

  Like

 9. ரஜனிகாந்தின் சிவாஜி வரப் போகிறது என்ற பரபரப்பான செய்திகள்தான் இன்று தமிழ் நாட்டையும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. தமிழகத்தின் வணிகப் பத்திரிகைகளும் உலகின் தமிழ் இணையத் தளங்களும் இதைத்தான் எழுதிக் கொண்டிருக்கின்றன. இந்த தேவனின் வருகைக்காக தமிழ் மக்களும், புலம்பெயர்ந்துள்ள தமிழ் உறவுகளும் ஏங்கித் தவித்த நிற்பது போன்ற தோற்றம் கூட உருவாகி விட்டது. அது உண்மையாகக் கூட இருக்கலாம்.

  சுப்பர்ஸ்ரார் என்கின்ற ஆங்கில சொற்தொடரை தனது பெருமையாகக் கொண்டிருக்கும் சிவாஜிராவ் என்கின்ற கன்னடனை முன்னிறுத்தி செயற்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டங்களின் ஊடாக தமிழன் எவ்வாறு திசை திருப்பப்பட்டு, அவனது பண்பாடும் எதிர்காலமும் எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பது குறித்து பலருக்கு அக்கறை இல்லை. ரஜனிகாந்து ஊடாக மாபெரும் சீரழிவு ஒன்று உருவாகி வருகிறது அல்லது உருவாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

  ரஜனிகாந்த் மட்டும்தான் இந்த சீரழிவை செய்கிறாரா மற்றவர்கள் செய்யவில்லையா என்று கேள்வி கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு தவறைக் கொண்டு இன்னொரு தவறை நியாயப்படுத்தக் கூடாது. அது மட்டும் அல்லாமல் இன்று வரை அல்லது நேற்றுவரை தமிழக சினிமாவில் ரஜனிகாந்த் என்கின்ற நடிகர் மீது தமிழ் நாட்டு மக்கள் கொண்டிருப்பதாக சொல்லப்படும் திரைப்படும் மோகமும் சாதாரணமானது அல்ல. அவருடைய தாக்கமும் வீச்சும் முக்கியமாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

  இன்று தமிழ்நாட்டு திரைப்பட ரசிகர்களின் ஆதரவு காரணமாக பணமும் புகழும் பெற்று வாழ்ந்து வருகின்ற ரஜனிகாந்த் என்கின்ற கன்னட மனிதரின் பண்பாட்டு சீரழிவுத் திரைப்படங்கள் செய்கின்ற தாக்கம் ஒருபுறம் இருக்கட்டும். ரஜனிகாந்த் என்கின்ற ஒரு மனிதரை ஒரு கன்னடன் என்று சொல்லி தமிழர்களிடம் இருந்து அந்நியம் பேசுவது சரியா? அதனை தமிழர்கள் செய்யலாமா? என்று சில நியாயமான கேள்விகளும் எழுகின்றன. அவைகளுக்கு உரிய பதில் என்ன?

  அவைகளுக்கு உரிய பதிலும் ரஜனிகாந்திடம் இருந்தே வருகின்றது. வந்தும் இருக்கின்றது. ரஜனிகாந்த் எப்போதுமே தன்னை ஒரு கன்னட வெறியன் என்று காட்டியும், நடந்தும் வந்திருக்கிறார் என்பது இங்கே சுட்டிக்காட்டத் தக்கது. சில பழைய சம்பவங்களை சொல்வது இங்கே பொருத்தமாக இருக்கும்.

  ரஜனிகாந்த் முன்னாள் சிவாஜிராவாக இருந்த போது செய்த பல தொழில்களில் ஒன்றான மூட்டை தூக்கும் வேலையை செய்து கொண்டிருக்கும் போது “கன்னட பாதுகாப்பு இயக்கம்” என்கின்ற கன்னட தீவிர இயக்கத்தின் உறுப்பினராக இருந்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் படைப்பில் எம்ஜிஆர் அவர்கள் நடித்த “காஞ்சித் தலைவன்” என்ற திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட்டது. அதில் கன்னட மன்னன் ஒருவனை தாழ்த்தி சில வசனங்கள் சொல்லப்பட்டிருந்தன.

  இதற்கு தங்கள் கன்னடத்தை (கண்டனத்தை) காட்டுவதற்காக தமிழர்களின் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அதனை முன்னின்று செய்தவர் யார் தெரியுமா? வேறு யாருமில்லை. தமிழ்நாட்டின் இன்றைய சுப்பர்ஸ்ரார் ரஜனிகாந்தான் அதை முன்னின்று செய்தார். இன்றைய தினம் வரை ரஜனிகாந்த் “கன்னட பாதுகாப்பு இயக்கத்தின்” உறுப்பினராகத்தான் இருக்கிறார். அவருடைய அண்ணன் சத்தியநாராயணா இந்த இயக்கத்தின் ஒரு அமைப்பாளராகவும் இருக்கின்றார்.

  இது குறித்து கன்னட தீவிரவாத இயக்கமான சளுவளி இயக்கத்தின் தலைவரான வட்டாள் நாகராஜ் 1992ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி வெளிவந்த “சுடச் சுடச் செய்தி” என்ற பத்திரிகைக்கு தெளிவாகவே செவ்வி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவிக்கையில் “இங்கே தமிழர்களின் கடைகளை அடித்து நொருக்குவதற்கு சிவாஜிராவ்தான் முன்னணியில் நிற்பான், ஏனென்றால் அவனுக்கு தமிழர்களை கண்டாலே பிடிக்காது, சிவாஜிராவ் நம்ம பையன், அவரை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அத்தோடு சத்தியநாராயணாவின் பிள்ளைகள் “கன்னட இளைஞர் முன்னணி” என்ற அமைப்பையும் ஆரம்பித்துள்ளார்கள், அப்படி ரஜனிகாந்தின் குடும்பமே கன்னடர்களுக்கு ஆதரவாக உள்ளது, தன்னுடைய படம் தமிழ்நாட்டில் ஓட வேண்டும் என்பதற்காக அவர் செய்கின்ற தமிழர் ஆதரவுப் பேச்சுக்களை நாம் பொருட்படுத்தக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

  தமிழ்திரைப்படங்கள் அனைத்தும் கர்நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்பே திரையிடப்பட முடியும் என்ற நிலை இருக்கின்ற போது, ரஜனியின் “சிவாஜி” திரைப்படம் மட்டும் உடனடியாகவே எவ்வித பிரச்சனையும் இன்றி கர்நாடகத்தில் திரையிடப்பட முடிவதன் ரகசியமும் இதுதான்.

  1991ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டு, மேலும் ஆயிரக்கணக்கானோர் அகதியாக ஓடி வந்து வந்த போதும் இந்த ரஜனிகாந்த் அவர்களுக்காக வாய் திறக்கவில்லை. நெய்வேலியில் தமிழ்நாட்டு திரையுலகம் பேரணி நடத்திய போது, தனித்து உண்ணாவிரதம் இருந்து ஒற்றுமைக்கு உலை வைத்தார்.

  தமிழ்நாட்டு ரசிகர்களின் ஆதரவால் தான் பெற்ற கோடிக்கணக்கான செல்வத்தை ரஜனிகாந்த் இன்று கர்நாடாகவிலேயே பெரும்பாலும் முதலீடு செய்து தொழிற்சாலைகளும் மற்றும் வியாபாரங்களுமாக நடத்தி, தனது இனத்திற்கு உதவி செய்வது ஒரு விதத்தில் பாராட்டப்படக் கூடியதுதான். தான் எங்கு சென்று உழைத்தாலும், தனது இன மக்களும் மாநிலமும் பயன்பெற வேண்டும் என்கின்ற அவரது கன்னடப் பற்றும் பாராட்டுக்கு உரியதுதான்.

  ஆனால் வேறொரு இனத்தினை (தமிழ் இனத்தை) ஏமாற்றியும், அவர்களை முட்டாள்கள் ஆக்கியும் அந்த இனத்தின் இலட்சக் கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தியும் அதன் மூலம் தன்னுடைய இனத்திற்கு உதவி செய்வது என்பது கண்டிக்கத்தக்கது.

  வீரப்பன் கடத்திச் சென்ற கன்னட நடிகர் ராஜ்குமாரை ஐயா பழநெடுமாறன் அவர்களும், நக்கீரன் கோபால் அவர்களும் காடு சென்று பேச்சுவார்த்தைகள் நடத்தி மீட்டு வந்த போது, நடிகர் ரஜனிகாந்த் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஒரு அறிக்கை விடுத்தார். அதில் குறிப்பாக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் அவர்களுக்கு ஒரு பாராட்டை தெரிவித்திருக்கின்றார். ரஜனி அந்தப் பாராட்டில் என்ன சொன்னார் தெரியுமா?

  “நீங்கள் செய்த இந்த முயற்சி காரணமாக கர்நாடகாவில் தமிழர்களின் ரத்த ஆறு ஓடுவது தவிர்க்கப்பட்டு உள்ளது”

  “சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி” என்கின்ற மாதிரி கன்னடர்களை தமிழர்களுக்கு எதிராக கிளப்புகின்ற அறிக்கையை ரஜனிகாந்த் வெளியிட்டார். அட, வீரப்பன் என்கின்றவர் ராஜ்குமார் என்கின்ற நடிகரை கடத்தினால் ஏன் கர்நாடகத்து தமிழர்கள் ரத்தம் சிந்த வேண்டும்? ஏன் அப்படி ஒரு சிந்தனையை தமிழ்நாட்டில் வாழுகின்ற இந்த ராஜனிகாந்த் என்கின்ற நடிகர் சொல்கிறார்?

  “கர்நாடகத் தமிழர்கள் இரத்தம் சிந்தினால், தமிழ்நாட்டில் கன்னடர்களின் இரத்தம் ஆறாக ஓடும் என்று யாராவது கர்நாடகத்தில் சொல்லி இருக்க முடியுமா? சொல்லியிருந்தால் அவர்கள் கதி என்னவாகி இருக்கும்? அதுதான் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் உள்ள வித்தியாசம்.

  அன்று தனது “பாபா” திரைப்படத்திற்கு அதிகூடிய கட்டணத்தில் நுழைவுச் சீட்டுக்களை விற்பதற்கு அனுமதியை பெறவேண்டும் என்பதற்காக அன்றைய தமிழ்நாட்டு முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு சத்தியநாராயணா மூலம் மலர்க்கொத்து ஒன்றினை அனுப்பி சமாதானத் தூது விட்ட இந்த ரஜனிகாந்த் சில வருடங்களிற்கு முன்பும் செல்வி ஜெயலலிதாவிற்கு அன்புடன் ஒரு வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.

  ஒரு பொதுக்கூட்டத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் முன்னிலையில் ரஜனிகாந்த் பேசும் போது சொல்கிறார் “அம்மா, விடுதலைப் புலிகளால் மட்டும் உங்களுக்கு ஆபத்து வரும் என்று நினைக்காதீர்கள்! இங்கேயும் சில புலிகளால் உங்களுக்கு ஆபத்து வரலாம்! ஆகவே, கவனமாக இருங்கள்! – இது ரஜனிகாந்தின் அன்பான அறிவுரை!

  இந்த ரஜனிகாந்த் 2001 ஈழத் தமிழர்களின் தேசியப் பிரச்சனை குறித்து பேசும் போது, இது புராணங்கள் எமக்கு தருகின்ற விளக்கம் என்று புதிராக கருத்தினை வெளியிட்டார். தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கருத்துக்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஒத்து வராது என்று முன்னர் சொன்ன போது, ரஜனிக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்தன. அப்போது ரஜனியை காப்பாற்ற ஓடோடி வந்தவர் வேறு யாருமில்லை. தந்தை பெரியாரின் பாசறையில் பயின்ற கலைஞர் கருணாநிதிதான். பெரியாருக்கு எதிராக ரஜனி சொன்ன கருத்துக்களை மழுப்பி அறிக்கை ஒன்றை விட்டு நிலைமையை சமாளித்த கருணாநிதி ரஜனியை கண்டிக்கக்கூட இல்லை.

  தமிழ்நாட்டு தமிழர்களை சிந்திக்க விடாமல் திரைப்பட மாயையில் அழிழ்த்தி வைத்திருக்கும் அதிகார சக்திகளின் ஒரு கருவிதான் இந்த ரஜனிகாந்த் என்பதில் ஐயமில்லை. ரஜனிகாந்த் என்கின்ற கருவி மழுங்கிப் போனால், புதிய ஒரு முகத்தை உருவாக்கும் பணியில் இந்தச் சக்திகள் இறங்கக்கூடும் என்பதையும் நாம் உணர வேண்டும்.

  இதே வேளை தமிழ்நாட்டு தமிழர்களை மட்டும் இந்த திரைப்பட மாயை பாதிக்கவில்லை. இதற்கு பலம் சேர்த்து உலகம் எங்கும் பரவச் செய்ய உறுதுணையாக இருப்பதில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. இன்று தமிழகத்தின் மிகப் பெரிய தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், நடிகர்களும் நம்பி இருப்பதும், தங்கி இருப்பதும் புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்தைத்தான்.

  தமிழ் படங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் முன்பு வைத்ததற்கும், பாடல்கள் ஆங்கிலத்தில் பாடப்படுவதற்கும், வசனங்கள் தமிங்கிலத்தில் பேசப்படுவதற்கும் தமிழனின் பண்பாடு பகிரங்கத்தில் சீரழிக்கப்படுவதற்கும் காரணமாக இருக்கின்ற தமிழ்நாட்டில் வாழும் மார்வாடிப் பண முதலீட்டார்களக்கு கைகொடுத்து உதவுவது எமது புலம்பெயர்ந்த தமிழர்களே.

  இந்திய சீன யுத்தத்தின் போதும், கார்க்கில் போரின் போதும் மற்றைய வேறு பிரச்சனைகளின் போதும் நிதிசேகரித்துக் கொடுப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டு திரைப்படத் துறையினர்தான் முன்னிற்கிறார்கள். அவர்களுடைய வருவாயில் முக்கிய பங்கை செய்கின்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் இரத்த உறவுகள் கொடிய அடக்குமுறையில் துன்பப்படுகின்ற போது இந்தத் திரைப்படத்துறையினர் என்ன செய்து கிழித்தார்கள்?

  தென்னாபிரிக்காவில் நிறவெறி என்றவுடன் அந்த நாட்டுடன் விளையாட்டுப் போட்டிகளை தவிர்த்த நாடுகளும் மக்களும் உண்டு. சீனாவில் மனித உரிமை மீறல்களுக்காக அவர்களின் உற்பத்திப் பொருட்களை வாங்க மறுத்தவர்கள் உண்டு. அதே போல் தமிழ் இனப் பண்பாட்டின் சீரழிவை, மொழிக் கொலையை நாம் ஏன் எமது செலவில் இறக்குமதி செய்ய வேண்டும்?

  இதற்கு தீர்வாக பலர் பலதரப்பட்ட கருத்துக்களை சொல்கிறார்கள். இது நடைமுறைச் சாத்தியம்தானா, இதற்கு அனைத்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் ஒத்துழைப்பார்களா என்ற யதார்த்தமான கேள்வியையும் சிலர் கேட்கிறார்கள். திரைப்படங்களை திரையில் பார்க்காது ஒளிநாடாக்களிலும், இறுவெட்டுக்களிலும் பார்க்கலாம் என்று சிலர் மாற்றுத் தீர்வு யோசனை சொல்கிறார்கள்.

  தமிழ்நாட்டின் அரசியலையும், பொருளாதாரத்தையும் தீர்மானிக்கின்ற மிக முக்கியமான சக்தியாக இன்று தமிழ் திரையுலகம் விளங்குகின்றது. கலைஞரின் வார்த்தைகளை கடன் வாங்கினால் “அது இன்று கொடியவர்களின் கூடாரமாக விளங்கி வருகின்றது”. ஆனால் இந்தக் கொடியவர்களின் கூடாரம் இன்று புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவையும் நம்பித்தான் இயங்குகின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

  புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மஹாத்மா காந்தியின் வழியில் கொடுக்கக்கூடிய புறக்கணிப்புக்கள் வணிகரீதியில் தமிழ்நாட்டு அரசை மட்டும் அல்ல, மத்திய அரசையும் வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரு வழியில் உதவக் கூடும். புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது உறவுகளே! உங்கள் அனைவருக்கும் உரிமையோடும் உறவோடும் தாயகத்தில் இருந்து நாம் முன்வைக்கின்ற வேண்டுகோளை தயவு செய்து செவிமடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

  நமக்கு உதவாத, நமக்கு எதிரான இந்தக் கேவலமான கீழ்த்தரமான நடிகர்களினதும், தயாரிப்பாளர்களினதும் திரைப்படத்தை புறக்கணியுங்கள். இவற்றை வாங்கி வெளியிடுகின்ற அன்பு உறவுகளுக்கும் இதே வேண்டுகோளைத்தான் நாம் முன்வைக்கின்றோம். அன்று எம்ஜிஆர் என்கின்ற நடிகர் தமிழ்தேசியத்திற்கு முன்னின்று

  Like

 10. Sivaji enkira oru thirapadathin vazhiyaga ulaga thamizharkalai orunkinaitha Super Star Rajinikanth avarkaluku intha katturai ezhuthiyavarin sarbaga nandriyai therivithu kolkiren.

  Like

 11. 1 பெரியார் இல்ல 100 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.

  — இந்தியனாக வாழும் தமிழன்

  Like

 12. Manithanukea undana aravathu arivana pagutharivu enra onrai manithan inru payanpaduthuvathe illai. entertainment ellam serius agaum serius ellam entertainment agaum eduthu kolvathu kodumai. sivaji pondra nigazhugal megaum kavalai alikirathu. government deduction seithum ‘perior’ padathai parka all illai. makkalin madamai kandu varunthukiren.
  varunkala thamzhagathirku aaaaaazhtha anuthbangal.

  unmai thamizhachi.
  sathyabharathy.

  Like

 13. Hello All,

  I saw all the above comments. First of all everyone have to accept one single man came from a poor family, struggled in the film industry and finally he got this appriciation. You all have to appriciate him first. Its not that much easy to get this much popularity all over the world. Even all the politicians are trying to get the popularity by doing all kind of other activities like jumping from one party to other, give more promises, spending more monies..etc. But are they getting that?No sir. They get one seat and what they do finally to people?..But eveyone are again electing him for the same position. But in this case, all his popularity he got without doing all the above. Thats automatically came from the people. What he will do for that?. You said, he is against Tamil. Boss, he came from Karnataka, and he cannot leave his own state just for the popularity he got from Tamilnadu. He has to maintain the both. He born there and earning here just like the people does in foreign contries. See even Rajkumar also born in Tamilnadu and he lived in Karnataka. Siranjivee, Venkatesh, Sreedevi…we can add the list.
  If a person get popularity, automatically against will raise. Just think what he has done wrong now. He is giving life to lots of lots people behind the wall. Starting from producers, directors, visitors, distributors..etc. And also he is doing lots of help to the poor people, thats also behind the wall. You know, when his Baba got flop, he called all the distributors and gave the money they have spent. Who will do that?..Ok i accept, he earned lots of money. He can do it. But first of all, you should have the feeling of sharing the money from your pocket right?. He said he will give 1 crore from his pocket if all rivers are joined in india. Can you tell, anybody did the same talk before? What he will do if the fans kill the goat and hen?. Thats their wish. He can say dont do that. But who will listen that. Normally, if a human gets tempted or got more happy, he dont know what he does. Thats the habit of some kind of people.
  Its not like if you have opened a wesite, you can write everything. Please think from his position and write the words. Its really too bad about the sentenses, words and comparision you have used in your big school esay.

  Like

 14. நண்பர்களே இந்த கட்டுரையை படித்து பார்த்தேன். எனக்கு புடிச்சிருக்குது ஆனால் நான் தமிழன்.
  தமிழன் என்றால் பிறர் பணத்திற்கு ஆசைபடாமல் எந்த மாநிலத்துகாரனையும் பாசத்துடன் அரவணைக்கும் பண்பு உள்ளவன். அதன் எதிரொலியாக அன்றே டாக்டர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மலையாளம் ஆனால் நம்முடைய மாநிலத்தை ஆளும் பொறுப்பை நாம் அவர்களிடம் அளித்தோம் திரும்ப அதே போல் பிழைப்புக்காக வந்த யாரையும் நாம் வெறுக்க கூடாது அப்படி வெறுத்தால் நமக்கு நம்முடைய பக்கத்து மாநிலத்துக்கு என்ன வித்தியாசம் ஆகவே ரஜினி ஒரு நடிகர் அவ்வளவு தான் மற்றப்படி அவர் அந்த மாநிலத்து காரன் என்று வெறுப்பை தூண்டக்கூடாது. இதுவே தமிழனுடைய கலாச்சாரம். இது இந்தியா நாடு இதில் மொழி வாரியாக யாரை யாரையும் பிரிக்க கூடாது. மற்றவர்கள் பிரித்தால் அது அவர்களுக்கு தான் நஷ்டம் தவிர நமக்கு அல்ல.

  Like

 15. Hi Kalidhasan, I really appriciate what you said. We are indians. We should not have any clashes between us.

  Like

 16. he is just sucking tamils money. indian tamils are cheated by central gov by a fake thing called INDIA. when u r going to stop using superstar and other useless stuff. why real raciest tamil is signing in english and villian is signing in tamil? only tamil will listen to songs which spell “Thamilan” ‘Tamilan’. Tamil unarvulla oru tamilanum thai rasikka mattan. india flagku kodukkum mathippai kooda tamilluku kodukkamal athayum rasikkra kevalamana pilaippu manaketta thamilanin. rajaniyalo indian central govenmentalo kaveri thannium india tamillan india engayum adipadamal valamudiyum endu sure panna mudiyathu… because because when there are real assh***s like kalidasan and many more. tamilnadu endu oru manilathaye vantharai valavaikkum endu solli solli tamilan valvai alikurangal. “ஆகவே ரஜினி ஒரு நடிகர் அவ்வளவு தான் மற்றப்படி அவர் அந்த மாநிலத்து காரன் என்று வெறுப்பை தூண்டக்கூடாது” ippadi sonnal ivar inaikalam thannai oru nallavan endu others will think. like him all the good tamils think. but i think all are boodly shi*.

  Like

 17. Wat the hell is happening around … Y are ppl wasting time instead of doing there jobs .. come on guys .. ranjini is just an actor .. lets see our career and life .. he has lots of money but how about the people “so called his bloody FANS” .. time to change … 🙂

  Like

 18. Tamil makkal ellarum muttalkal, avanukku koncham kooda soranai illai.

  Pakkathu manilathu kaaran thanni vida kooda manasu vara matinkuthu. Intha porinkikal paal abisekam pannrathu, kaavadi thookrathu…… Kodumai sir. Intha jenmangal eppathan thiruntha poghutho…

  Oru nadikannuku avan sampathika ivan veetla ellavu vilunthakooda kandukama intha mathiri nadikanukku vellai seiran.

  Ivan sampathikka vali parkama kanda nadikanukku paal abishekam, yaanaila pada pettiya thookrathu intha mathri nadikanukku kodi pudikirathu ellam antha nadikannuku nightla villakku pudikirathku sammam.

  Ithavida ennala kevalama sollamudiyathu……

  Like

 19. Is he the only one responsible for this kind of cinema or cheap entertainment?
  The film makers are all not from other states. The producers, distributors are not from other states. Why blame him alone?. People look for escapism and they are providing it.

  How come you and I are not interested in this kind of cinema or adulation?. Because our sensitivity is hurt. We know that the man and the actor are separate. Masses are not able to differentiate.

  We understand that the kind of emotional opium they are giving to the masses is wrong and it is downhill over the years. In this movie however , the dosage seems to have gone too far.

  Like

 20. HELLO MR.CHANDRAMOULI AND MR.KALIDASA……
  ENTHA STATE LA SIR INTHA MAATHIRI NADAKKUTHU………
  OTHER STATE KAARAN NAMMAI PAARTHU SIRIKKIRAAN….
  CHUMMA VANTHAARAI VAZHA VAIPPOM NU SOLLIYE TAMILAN THAAN VAZHA VAZHI ILLAMA IRUKKAAAN…..

  Like

 21. கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்….!

  அது போல் இந்த ரஜினி காந்த் கதை.

  அவர் தான் சார்ந்த சினிமாத் தொழிலில் செய்தவற்றைப் பார்ப்போம்.

  —-

  ரஜினி – விஜயகாந்த இருவரும் பிரபலமான பின் நடந்த முறைகளைப் பார்ப்போம்.

  ரஜினி- ஏவிஎம், சத்யா மூவிஸ், கவிதாலயா, சுஜாதா பிலிம்ஸ் போன்ற தயாரிப்புகளில் தான் நடிப்பார். அவரால் எந்த ஒரு புதிய தயாரிப்பு நிறுவனமும் மேல் வந்ததில்லை.

  விஜயகாந்த்- அம்மா மூவிஸிலிருந்த நடித்ததில் 80% புதிய பேனர்களே.

  ரஜினி:: புதிய இயக்குனர்கள் யாரையுமே அறிமுகப்படுத்தியதில்லை.

  விஜயகாந்த்: ஆபாவாணன், செல்வமணி தொடங்கி பல இளம் இயக்குனர்களின் சினிமா வாழ்க்கைக்கு காரணமானவர்.

  முண்ணணியில் இருந்த போது சரத்குமார், போன்றோரை தைரியமாக அறிமுகப்படுத்தினார் (வில்லனாக) விஜயகாந்த்.

  ரஜினி எந்த ஒரு நடிகரையும் அறிமுகப்படுத்தியதில்லை.

  வளசரவாக்கத்தில் ஒரு மருத்துவமனையை ஆரம்பித்து, அதில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்க்க ஏற்பாடு செய்தார் விஜயகாந்த்.

  திரையுலகமே வேலை நிறுத்தத்தில் இருந்த போது உல்லாசபுரி அமெரிக்காவில் சுதந்திரமாய் இருந்தவர் ரஜினி.

  ஆனால், அந்தப் பிரச்சனையில் இறங்கி தீர்வு காண தோள் கொடுத்தவர் விஜயகாந்த்.

  எம்ஜிஆருக்குப் பின், சினிமா அலுவலகம் வருபவர்களுக்கு வாய், வயிரார உணவு தந்தவர் விஜயகாந்த்.

  வேறுபாடுடன் உணவு பரிமாறப்படும் சூழல் மாற்றி, படப்பிடிப்பில் கறி சோறு அனைவருக்கும் முதலில் போட்டவர் விஜயகாந்த்.

  ரஜினிகாந்த் மற்றவருக்கு என்ன உணவு கிடைக்கிறது என்பது பற்றிய கவலை இல்லாதவர்.

  காவிரிப் பிரச்சனையில் தமிழர்களை மிரட்டியவர் ரஜினிகாந்த்.

  அய்யா அய்யா என்று காலில் விழுந்து விட்டு, கருணாநிதி முதுகில் குத்தியவர் ரஜினிகாந்த். கருணாநிதியின் தொகுதியிலேயே, இரட்டை இலைக்கு வாக்களித்ததாகச் சொன்னவர்.

  கார்கிலுக்கு 5 லட்சம் தானம் கொடுத்து, வீரர்கள் உடல் வரும் போது நேரில் போய் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் எங்கே, கருணாநிதி முன்னிலையில் , பொதுகூட்டத்தில் அறிவிப்புடன் 2 லட்சம் தந்த ரஜினி எங்கே… ?

  யாருடனும் முகம் கொடுத்துப் பேசாத, திரையுலகப் பிரச்சனைக்கு வந்து உதவாத ஒரு மனிதர் ரஜினிகாந்த்.

  அவரின் பயத்தின் மெளனத்தை மோனம் என்று தப்பர்த்தம் பண்ணிவிட வேண்டாம்.

  வானத்தில் பெரிதாய் பறக்கும் பலூன் மாதிரி தான் அவரின் தோற்றம் மீடியா எனும் காற்றின் உதவியுடன் இருந்தது. அதில் போன தேர்தலில் விட்ட அவரின் சொந்த வாய்ஸ் குண்டூசியாக மாறிக் குத்தியதில் புஸ் என்று காற்றுப் போன பலூனான இன்று இருப்பது தான் அவரின் உண்மை நிலை.

  முதலில், குழம்பாமல் ஒரு திரைப்படத்தை எடுத்து முடிக்கட்டும்.

  இவர் யோசிசிசிசிக்கும் நேரத்தில் விஜயகாந்தும், கமலும் பல படங்கள் வெற்றிகரமாக எடுத்து விட்டார்கள். இது மாதிரி மக்கள் பிரச்சனையில் யோசித்தால், பி.எஸ்.வீரப்பா பாணியில் சொல்வதானால் ‘ நாடும் மக்களும் நாசமாகி விடுவார்கள் ‘.

  கல்மனத்தையும் கரைத்த கும்பகோணம் வராதவர். இவர் வந்தால் பிரளயம் நடக்கும் என்ற நினைப்பு மட்டும் இன்னும் பொழைப்பைக் கெடுக்கிறது.

  Like

 22. vanthaarai vaazh vaiththu….irupporai saagadikkum tamilnadu…..
  proud to be a tamilan…….hahahahah…..
  KEVALAM………MAANATHTHAI VAANGURANUNGA………
  ITHELLAM SEYYADHEENGA ENRU ORU ARIKKAI VIDALAMULLAA INTHA SELFISH RAJINI…….AVANUDAIYA NOKKAM TAMILAN MUTTALAVE IRUKKANUM….APPA THAANE AVAN KAASU PAARKA MUDIYUM……

  Like

 23. ithellam too much. etho padam pathama poi(atleast 2 times) velaya pathamanu irukanum, naanum oru rajini fanthan ana intha mathiri ellam mudiyathu.

  Like

 24. இந்த செலவுகளை நல்ல காரியங்களுக்காக செலவு செய்யலாம். இது என் கருத்து.

  Like

 25. thalaivanai pathi thapa asna evanum nalla valthatha sarithiram illa ok atha muthalla purichu nadanthukonga en lodukku

  Like

 26. ade Naasama ponavanungala enga thalaivaruku ithellam paththathu ithukku mela ethavthu sonnenga rasikar naanga thaanga maattam.mudiyatti poththunga

  Like

 27. ரஜனிகாந்த் மட்டும்தான் இந்த சீரழிவை செய்கிறாரா மற்றவர்கள் செய்யவில்லையா?………….

  Like

 28. //ரஜனிகாந்த் மட்டும்தான் இந்த சீரழிவை செய்கிறாரா மற்றவர்கள் செய்யவில்லையா?………….//

  ரஜினி ஏதும் செய்யவில்லை. எல்லாம் ரசிகர்கள் தான் !

  Like

 29. இப்படியான மனிதர்கள் இருப்பதால் தான் நாடு “குட்டிச்சுவராய்” போகுது!….
  தலைவர்களும் தட்டிக் கேட்க மாட்டார்கள்… தொண்டர்களும் அநியாயத்திலிருந்து வெளியே வர மாட்டார்கள்…
  என்ன கொடுமை இது??? நாடும் மக்களும் உருப்பட்டாப் போலத்தான்…
  இப்படிப்பட்ட அக்கிரமத்தால் தான் இன்னும் பஞ்சமும் பட்டிணியும் தலைவிரித்தாடுகிறது போலும்!…..

  “நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த
  நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்…” – பாரதியார்-

  “தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்”
  என்ற பாரதியைத் தந்த நாடா இது.. என்று நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது… வேறு என்ன சொல்வது??? 😦

  உங்கள் பதிவுக்கு நன்றி சேவியர்!

  Like

 30. தமிழன் அவர்களுக்கு!
  கொஞ்சமாவது மனசாட்சி இருக்கட்டும்! ரஜினி மாயவலையில் சிக்கிய தமிழ் இளைஞர்களை விடுங்கள். ரஜினியை விஜயகாந்துடன் ஒப்பிடுவது அபத்தம். ரஜினி ஒரு நடிகர் அவ்வளவே ஆனால் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று ரஜினி மிக நல்ல மனிதர்! அவரை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு! ஆனால் விஜயகாந்துடன் ஒப்பிடுவது தான் தாயை சந்தேகப்படும் முயற்சி! நேர்கொண்ட பார்வை இருந்தால் இதை பிரசுரிக்கவும். நன்றி!

  Like

 31. வாளேடுத்தோர் வையத்துள் வாழ்ந்திருக்க முடியவில்லை!
  உலகை ஆள சூலேடுத்தோர் சுடப்பட்ட சாம்பல் ஆனார்!
  வெற்றி தாளெடுத்து வரலாற்றை வரைந்தோர் கூட….
  சமுதாய மாறுதலால் மங்கி விட்டார்!
  நாளெடுத்து வருகின்ற காலமும்
  எங்கள் தலைவன் …..
  ரஜினியை போற்றும்! போற்றும்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s