ஹெல்மெட் அணியணுமா ? வேண்டாமா ? யாராச்சும் சொல்லுங்க பிளீஸ்.

hell.jpg

ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும் எனும் சட்டம் அமலுக்கு வந்த தினத்தில் சாலையில் தலைக்கவசம் இல்லாமல் யாரையும் பார்க்க முடியவில்லை. அத்தி பூத்தாற்போல தெரிந்த சில தலைகள் தவிர.

போலீஸ்காரர்களும் ஆங்காங்கே ‘வாப்பா ராசா’ என்று அழைத்து அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்கள். அப்புறம் என்னவோ பின்னாடி இருக்கிறவங்களுக்கு தலை இல்லாத காரணத்தால் அவர்களுக்கு தலைக்கவசமும் தேவையில்லை என்று சட்டம் போட்டார்கள்.

அப்புறம் மக்களிடையே தங்கள் தலையைக் குறித்த பாதுகாப்பு உணர்வை விட என் தலையைக் குறித்து அரசுக்கு என்ன அப்படி ஒரு அக்கறை எனும் சிந்தனை முளை விட்டது. அது வழக்குகளாகவும் பதிவானது.

பொதுமக்களிடையே இப்படி ஒரு எதிர்ப்பு வரும் என்று ஒருவேளை அரசு நினைத்திருக்காது போல, ‘பொது மக்களை கஷ்டப்படுத்தாதீங்க. கட்டாய ஹெல்மெட் கட்டாயம் போடவேண்டுமென்றில்லை. கட்டாயப்படுத்தப்படாத கட்டாயச் சட்டமே கட்டாயமாக்கப்படும்’ என விசு பாணி அறிக்கை வர ஆரம்பித்தது.

இரண்டாம் தியதியுடன் ஹெல்மெட் சென்னை மக்களால் வாங்கப்பட்டு விட்டது இனிமேல் போட்டால் என்ன போடாவிட்டால் என்ன, நமக்கு ‘போட வேண்டியது’ போட்டாகிவிட்டது என்று அரசு நினைத்ததாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

எப்படியோ ஒரு சட்டத்தைக் கூட உருப்படியாகப் போட்டு அமுல் படுத்த முடியாத நிலையில் இருக்கிறது அரசு எனும் பலமான உண்மை பலவீனமான அரசின் முதுகில் மீண்டும் ஒருமுறை விக்கிரமாதித்திய வேதாளமாக அமர்ந்து விட்டது.

கடந்த வாரம் கிராமத்துக்குச் சென்றிருந்தபோது, வருகின்ற ஒன்றாம் தியதி முதல் கட்டாய ஹெல்மெட் சட்டம் வருகிறது என விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள். ‘ஹெல்’லென்று சிரித்தேன்.

கேரளாவில் கட்டாய ஹெல்மெட் சட்டம் வந்தபின் தமிழக எல்லை தாண்டிய உடன் ஹெல்மெட்டை தலையில் அணிந்து கொண்டு செல்கிறார்கள் தன்மானத் தமிழர்கள்.

இப்போதெல்லாம் சென்னை வீதியில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு போகும் நபர்களைப் பார்த்து ‘என்னப்பா பயந்தாங்கொள்ளிகளா? ‘ எனும் எள்ளல் பார்வைகளை வீசிவிட்டுப் போகிறார்கள் தலைக்கவசத்தை பின்னால் தொங்க விட்டுச் செல்பவர்கள்.

போதாக்குறைக்கு சில போக்குவரத்துக் காவலர்களும் ஹெல்மெட்டை வண்டியின் வாலில் மாட்டிக் கொண்டு செல்வதைப் பார்க்க முடிந்தது. அதனால தான் கேக்கறேன் ஹெல்மெட் அணியணுமா ? வேண்டாமா ?

ஆராய்ந்து பார்த்ததில் தமிழக அரசியலில் நடப்பது இது தான்.

சட்டம் போடுகிறார்கள் அல்லது
சத்தம் போடுகிறார்கள்.

Advertisements

7 comments on “ஹெல்மெட் அணியணுமா ? வேண்டாமா ? யாராச்சும் சொல்லுங்க பிளீஸ்.

 1. சேவியர் இப்போதைக்கு ஆட்சியாளர்களின் முழு கவனமும், ‘பட்டத்து இளவரசரை’ அரியணையில் அமர வைக்க வேண்டும். ‘இளவரசி’யை ‘குறுநில ராணி’யாக்க வேண்டும். தான் ‘பேரரசராக’ ஓய்வு பெற வேண்டும்.. இதற்கெல்லாம் மக்களின் கருணையுள்ளப் பார்வை தேவைப்படுகிறது. அதனால் கொஞ்சம் விட்டிருக்கிறார்கள்.

  கூடவே டிப்ஸ்ம் உண்டு.. ஹெல்மெட்டுகளின் உற்பத்தி இப்போதுதான் மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள் ஹரியானாவில். ஒரு குறிப்பட்ட அளவு சென்னை துறைமுகத்திற்கு வந்து இறங்கியவுடன் ‘கட்டிங்’கை கரெக்ட்டா ‘வெட்டி’யவுடன் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அமலாக்கப்படும். அதுவரையிலும் நீங்கள் ஹெல்மெட்டிற்கு லீவு கொடுத்துவிடுங்கள்..

  Like

 2. Xavier your leaving efd this week. Its great disaappointment for me but any way we will communicate through sirippu.wordpress.com . Enrum ungalai marakatha deva.

  Like

 3. ////sattam podugiraragal…
  satham podugiraragal////

  Thutum vangikolgiraragal!!!!!!
  ottu pottavanakku pattai namamum podigiraragal!!!!

  Like

 4. Sattam clear aha illai….Bike i konjam pinnadi utkarnthu otturavanum helmet podama thappikkalam…ketta nan pinnadi urkarnthu irrukkennu soliralam..eppadi?

  Like

 5. எல்லாரும் எள்ளி நகையாடும் விதத்தில் இந்த கெல்மெட் சட்டம் ஆகிவிட்டதே.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s