சிவாஜியைக் கவிழ்த்த அறிவு ஜீவி சுஜாதா !

sivaji-04.jpg
ரஜினி ரசிகர்களுக்குத் தேவையற்ற விஷயம் தான். ஆனாலும் மென்பொறியாளர்களின் மேல் இருக்கும் மாயையைக் குறித்த விஷயம் என்பதாலும், சுஜாதா போன்ற அறிவு ஜீவிகளின் கதை வசனத்தோடு வந்தது என்றதாலும் இதைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.

ஒருவேளை இதைக் குறித்து சக பதிவர்கள் எழுதியிருக்கக் கூடும், !

ஊரில் சிவாஜி படம் பார்த்துக் கொண்டு வந்த என்னுடைய உறவினர் ஒருவர் சொன்னார், ‘அமெரிக்கா போறவன் எது வேணும்ன்னாலும் பண்ணலாம்’ என்று. காரணம் சிவாஜி உருவாக்கிய திடீர் மாயை.

அதெப்படிங்க ? சிவாஜி திரைப்படத்தில் ரஜினி ஒரு Software System Architect. ஒரு முப்பது வயது திருமணமாகாத இளைஞர் போல வருகிறார். அவருடைய இருபது வருட சம்பாத்தியத்துடனும், இருபத்து ஐந்து வருட கனவுடனும்.

இருபது வருட சம்பாத்தியத்தின் மீதி 250 கோடி ரூபாய் ! கவனிக்க, மீதி. அதாவது பல கோடி ரூபாய்க்கு அவர் கட்டியிருக்கும் வீடு, கார்கள், நகைகள் இத்யாதிகள் தவிர. மணிவண்ணன் தான் ரொம்ப ஏழையா இருந்தவராச்சே !

சரி. நல்லது. சம்பாதித்த மொத்த பணமே 250 கோடி என்றே இருக்கட்டும்.

இருபது வருடத்துக்கு 250 கோடின்னா , சுமார் 80 கோடி ரூபாய் வருமான வரின்னு வெச்சுக்கலாம். 320 கோடி ரூபா ஆச்சா ?

இருபது வருட சம்பாத்தியம் 320 கோடி. வருடத்துக்கு என்ன 16 கோடி வருதா ?. ம்ம்.. அப்படின்னா ஒரு ஒண்ணே கால் கோடி ரூபாக்கு மேல மாசத்துக்கு வருது. அதாவது $3,25,000 மாத சம்பளம்.

அடடா.. இவ்ளோ சம்பளம் வாங்கற Software System Architect எங்கேப்பா இருக்கார் ? அவரோட செலவுகள் எல்லாம் கணக்கிட்டு பார்த்தா ஒரு அஞ்சு லட்சம் டாலர் மாத சம்பளமா வாங்கணும் !

அதுவும் இருபது வருட உழைப்புன்னா, சுமார் பதினோரு வயதிலிருந்தே இவரு இந்த சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார் என்று தான் அர்த்தம்.

என்னோட நண்பன் ஒருவன் Software System Architect ஆ இருக்கான், அவனுக்கு வருட சம்பளமே $120,000 தான் 🙂

அறிவு ஜீவி சுஜாதா குறைந்த பட்சம் சிவாஜி ஒரு கன்சல்டிங் கம்பெனி வெச்சிருக்காருன்னாச்சும் சொல்லியிருக்கலாம்.

இப்படியெல்லாம் பார்த்தா படம் முழுக்க ஓட்டை உடைசல் தான்னு நீங்க சொல்றீங்களா ? இல்ல – தலைவரு சும்மா ஜம்முன்னு இருக்காரு. அது போதும்ன்னு விட்டுடறீங்களா ? .. சரி சரி.. அப்போ நான் கிளம்பறேன்