சிவாஜியைக் கவிழ்த்த அறிவு ஜீவி சுஜாதா !

sivaji-04.jpg
ரஜினி ரசிகர்களுக்குத் தேவையற்ற விஷயம் தான். ஆனாலும் மென்பொறியாளர்களின் மேல் இருக்கும் மாயையைக் குறித்த விஷயம் என்பதாலும், சுஜாதா போன்ற அறிவு ஜீவிகளின் கதை வசனத்தோடு வந்தது என்றதாலும் இதைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.

ஒருவேளை இதைக் குறித்து சக பதிவர்கள் எழுதியிருக்கக் கூடும், !

ஊரில் சிவாஜி படம் பார்த்துக் கொண்டு வந்த என்னுடைய உறவினர் ஒருவர் சொன்னார், ‘அமெரிக்கா போறவன் எது வேணும்ன்னாலும் பண்ணலாம்’ என்று. காரணம் சிவாஜி உருவாக்கிய திடீர் மாயை.

அதெப்படிங்க ? சிவாஜி திரைப்படத்தில் ரஜினி ஒரு Software System Architect. ஒரு முப்பது வயது திருமணமாகாத இளைஞர் போல வருகிறார். அவருடைய இருபது வருட சம்பாத்தியத்துடனும், இருபத்து ஐந்து வருட கனவுடனும்.

இருபது வருட சம்பாத்தியத்தின் மீதி 250 கோடி ரூபாய் ! கவனிக்க, மீதி. அதாவது பல கோடி ரூபாய்க்கு அவர் கட்டியிருக்கும் வீடு, கார்கள், நகைகள் இத்யாதிகள் தவிர. மணிவண்ணன் தான் ரொம்ப ஏழையா இருந்தவராச்சே !

சரி. நல்லது. சம்பாதித்த மொத்த பணமே 250 கோடி என்றே இருக்கட்டும்.

இருபது வருடத்துக்கு 250 கோடின்னா , சுமார் 80 கோடி ரூபாய் வருமான வரின்னு வெச்சுக்கலாம். 320 கோடி ரூபா ஆச்சா ?

இருபது வருட சம்பாத்தியம் 320 கோடி. வருடத்துக்கு என்ன 16 கோடி வருதா ?. ம்ம்.. அப்படின்னா ஒரு ஒண்ணே கால் கோடி ரூபாக்கு மேல மாசத்துக்கு வருது. அதாவது $3,25,000 மாத சம்பளம்.

அடடா.. இவ்ளோ சம்பளம் வாங்கற Software System Architect எங்கேப்பா இருக்கார் ? அவரோட செலவுகள் எல்லாம் கணக்கிட்டு பார்த்தா ஒரு அஞ்சு லட்சம் டாலர் மாத சம்பளமா வாங்கணும் !

அதுவும் இருபது வருட உழைப்புன்னா, சுமார் பதினோரு வயதிலிருந்தே இவரு இந்த சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார் என்று தான் அர்த்தம்.

என்னோட நண்பன் ஒருவன் Software System Architect ஆ இருக்கான், அவனுக்கு வருட சம்பளமே $120,000 தான் 🙂

அறிவு ஜீவி சுஜாதா குறைந்த பட்சம் சிவாஜி ஒரு கன்சல்டிங் கம்பெனி வெச்சிருக்காருன்னாச்சும் சொல்லியிருக்கலாம்.

இப்படியெல்லாம் பார்த்தா படம் முழுக்க ஓட்டை உடைசல் தான்னு நீங்க சொல்றீங்களா ? இல்ல – தலைவரு சும்மா ஜம்முன்னு இருக்காரு. அது போதும்ன்னு விட்டுடறீங்களா ? .. சரி சரி.. அப்போ நான் கிளம்பறேன்

Advertisements

39 comments on “சிவாஜியைக் கவிழ்த்த அறிவு ஜீவி சுஜாதா !

 1. என்னா கணக்கு பாக்குறீங்க நீங்க? சம்பளத்த சும்மா சேத்து வச்சாதான இந்த கணக்கு. வேறு எதாவது முதலீடு அப்டி இப்டின்னு இருந்தா பணம் பெருகும்ல.

  சிவாஜில ஆயிரம் அபத்தங்கள் இருக்கு.. இதெல்லாம் ஒன்னுமேயில்லே…

  Like

 2. why can’t he earned in Stock market?
  why can’t he “developed” something and sold the rights to a company and “earned” something?
  you are talking like a fool….this shows your utter jealousy towards Rajni….

  Like

 3. இங்க பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உண்டு. ‘சிஸ்டம் ஆர்கிடெக்ட் கூடவே பிசினஸ்’ அப்டீன்னு சேத்திருந்தா இந்த பிரச்சன இருந்திருக்காது.

  Like

 4. வணக்கம் சேவியர்

  உங்கள் பதிவுகளை நெருப்பு நரி உலாவியில் படிக்க முடியவில்லை
  please remove the “justify” font alinment

  மண்ணிக்கவும் என்னால் தமிழ்படுத்த இயலவில்லை

  Like

 5. //இங்க பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உண்டு. ‘சிஸ்டம் ஆர்கிடெக்ட் கூடவே பிசினஸ்’ அப்டீன்னு சேத்திருந்தா இந்த பிரச்சன இருந்திருக்காது.//

  அதே 🙂

  அங்கே நாலு வருஷம் வேலை பார்த்தவனுக்கு ( பிஸினஸ் இல்லாம ) இங்கே சென்னைல ஒரு கிரவுண்ட் ல வீடு ஒண்ணு கட்ட முடியாதுங்கறது தான் நிஜம் !

  Like

 6. நான் வாடிக்கையாளர்களை பார்க்கும்போது அவர்கள் எனது அனுபவங்களைப் பற்றிக் கேட்பார்கள். நான் இவ்வாறு கூறுவேன்:

  1. பொறியியலாளனாக 23 வருடங்கள்
  2. ஜெர்மன் மொழிபெயர்ப்பாளனாக 32 வருடங்கள்
  3. பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளனாக 29 வருடங்கள்

  ஆக மொத்தம் 84 வருடங்கள் என்பேன். எனது வயது 61 என்றும் கூறுவேன். “எப்படி இது”? என்று வாடிக்கையாளர் கேட்டால், ஓவர்டைம் என சிரிக்காமல் கூறுவேன்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  Like

 7. //அறிவு ஜீவி சுஜாதா // உங்களுக்கு பெருசு கூட என்ன பிரச்சினை சேவியர்? //

  சத்தியமா ஒரு பிரச்சனையும் இல்லை 🙂 அவரு வெளிநாட்டு மேட்டரை எல்லாம் புட்டு புட்டு வெப்பாரே … ங்கற அர்த்தத்துல தான் 🙂

  Like

 8. //1. பொறியியலாளனாக 23 வருடங்கள்
  2. ஜெர்மன் மொழிபெயர்ப்பாளனாக 32 வருடங்கள்
  3. பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளனாக 29 வருடங்கள்//

  அடேங்கப்பா !

  Like

 9. //என்ன தல நான் சொன்னதுக்கு ஒன்னும் பதில் சொல்லல. . . ..
  ஓ தீவிரமா சு டோ கு போடுறீங்களா . . . . . . .?//

  சு டோ கு – செகண்ட் பார்ட் பிராக்டிஸ் பண்றேன் 🙂 பாத்திருக்கீங்களா ?

  Like

 10. படத்தில் இருக்கும் பிற்பல சறுக்கல்களுக்கு இந்த இருநூறு கோடிதான் மிகவும் லாஜிக்கான மேட்டர்.

  மத்த எது வேணும்னாலும் சாத்தியப்படாமல் போகலாம்.

  ஆனால், இங்கே மூளையை உபயோகித்தால் இருநூறு மில்லியனுக்கு மேலேயே கொட்டலாம்.

  Like

 11. எல்லா ப்ளாக்கரும் இதையே குறையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

  என்னைக் கேட்டால் இது சாத்திய படக்கூடிய ஒன்று தான்.
  start up நிறுவனங்களில் சேரும்போது பங்குகள் கொடுப்பார்கள்(not all). நிறுவனங்கள் நன்றாக செயல் படும்பொது அல்லது பெரிய நிறுவனங்கள் வாங்கி கொள்ளும் போது, பங்குகளை விற்று நல்ல காசு பார்ப்பார்கள். முறையான பங்கு வர்த்தகத்தில் பெரும் பணம்
  பார்தவர்கள் உண்டு. இதற்கு பிசினஸ் பண்ணவேண்டிய அவசியமில்லை.

  தமிழ் நாட்டைச் சேர்ந்த சோமசேகர் என்பவர் MICRSOFT நிறுவனத்தில் வேலை செய்கிறார். 2000 க்கும் அதிகமான பேரை மேலாண்மை(manage) செய்கிறார். இவருக்கு வருடதிற்கு $1,20,000 தான் இருக்குமென்று நினைக்கவில்லை.

  Like

 12. Who started this topic anyway (I know Xavier is the reason for all), what happened to tamil people, we never ask these questions before, we have watched many thousands of tamil movies from MGR to latest Sivaji, anybody dare to ask any questions….

  MGR villan Nambiar kitta irunthu heroine kappathuvar, avar enga irunthu vandarnu yaravathu oru question kettu iruppangala…

  ennathu ithu sinnapullathanama irukku???? xavier intha topica vacchu comedy panringannu theriyuthu……..

  Like

 13. >>//please remove the “justify” font alinment//
  >> தேடிப்பாக்கறேன் என்ன பண்ணணுன்னு !
  In the template for your blog find the CSS style with:

  .entry {
  ....
  text-align: justify
  ....
  }

  and remove it. That should fix the problem.

  Like

 14. சிவாஜி திரைப்படத்தில் ரஜினி ஒரு Software System Architect. ஒரு முப்பது வயது திருமணமாகாத இளைஞர் போல வருகிறார். ???

  what a great Jock he is 30 ha ha ha Jeviyear Annaa 007 vazhka…

  Thank for your comment

  siva
  pondicherry

  Like

 15. சும்மாவாச்சும் தொழிலதிபர் என்று போட்டிருக்கலாம்.
  தமிழ் நாட்டு நடிகைகள் திருமணமாவது நியாயப்படுத்தப் பட்டிருக்கும்.
  என்ன அமெரிக்க தொழிலதிபரை திருமணம் செய்யும் நடிகை/துணை நடிகைகள் காட்டும் பந்தாக்கள் நிஜம் என்றாகியிருக்கும்!!!!!!!!!!!

  Like

 16. Pingback: Top Posts « WordPress.com

 17. // படத்தில் இருக்கும் பிற்பல சறுக்கல்களுக்கு இந்த இருநூறு கோடிதான் மிகவும் லாஜிக்கான மேட்டர்.

  மத்த எது வேணும்னாலும் சாத்தியப்படாமல் போகலாம்.

  ஆனால், இங்கே மூளையை உபயோகித்தால் இருநூறு மில்லியனுக்கு மேலேயே கொட்டலாம்.

  ஆனால், இங்கே மூளையை உபயோகித்தால் இருநூறு மில்லியனுக்கு மேலேயே கொட்டலாம்.//

  இருநூறு மில்லியன்னா 20 கோடி தானே 🙂 ம்…ம்… ஓ.. நீங்க பாபா வாச்சே $ ல சொல்லியிருப்பீங்க !

  Like

 18. //தமிழ் நாட்டைச் சேர்ந்த சோமசேகர் என்பவர் MICRSOFT நிறுவனத்தில் வேலை செய்கிறார். 2000 க்கும் அதிகமான பேரை மேலாண்மை(manage) செய்கிறார். இவருக்கு வருடதிற்கு $1,20,000 தான் இருக்குமென்று நினைக்கவில்லை.

  //

  பணம் கோடிக்கணக்கில் சம்பாதிக்க பல வழிகள் உண்டு ஒத்துக் கொள்கிறேன். முன்னாள் அமெரிக்கக் குடிசை வாசிதான் நானும் 🙂 சென்னையின் வெப்பம் பிடித்துப் போனதால் இங்கே கூடாரமடித்திருக்கிறேன் இப்போது.

  உண்மையில், Architect எனும் பதத்தை உபயோகிப்பதன் மூலமாகவே மிகப்பெரிய சம்பளம் வாங்குபவன் என்னும் தோற்றத்தை உருவாக்க முயன்றிருக்கிறார் சுஜாதா என்றே எனக்குத் தோன்றுகிறது.

  Like

 19. ஆர்க்கிடெக்ட் என்ன் ஒரு என்ஜினியர் கூட சம்பாதிக்கலாம் – சரியான கம்பெனியில் சரியான நேரத்தில் stock options கிடைத்தால். Google ல் நமக்கு தெரிந்து ஒரு சாதாரண பில்ட் என்ஜினியர் காட்டில் இப்படி கொட்டியது!

  பி.கு: சந்தடி சாக்கில் டோண்டு மாமா இங்கேயும் சுயபுராணம் பாடுவதை பார்த்தால் சிரிப்பு வருகிறது. திருந்தவே மாட்டாய்ங்கப்பா…

  Like

 20. //சிவாஜி திரைப்படத்தில் ரஜினி ஒரு Software System Architect. ஒரு முப்பது வயது திருமணமாகாத இளைஞர் போல வருகிறார். அவருடைய இருபது வருட சம்பாத்தியத்துடனும், இருபத்து ஐந்து வருட கனவுடனும்//

  முப்பது வயது இளைஞன் எப்படி இருபது வருட சம்பாத்தியத்துடன் வர முடியும் ? 10 வயதிலேயே வேலைக்குப் போய்விட்டாரா ?

  சரி 40 வயது என்று வைத்துக் கொண்டாலும், அது வரைக்கும் திருமணம் ஆகாமல் இருந்தாரா ?

  கண்ணுல மத்தாப்பு கொளுத்துறாங்க !
  :))

  Like

 21. என்ன சேவியர் அதான் காதுல பூவையுங்கடானு தமிழகமே தயாரா இருக்குல. அப்புறம்?

  Like

 22. அட போங்கப்பா குட்டி சாமியாரை நம்புறிங்க. குட்டி சாப்ட்டுவேறு இஞ்சினியரை நம்பமாட்டுங்கிறிகளே. விசயம் தெரிஞ்ச 3 வியாபாரி (சங்கர் + ஏ.வி.எம்.+ரஜினி) உளுத்துபோன சரக்கை வித்துட்டாங்க என்ன பண்ணுறது ராமதாசு மாதிரி ஆளு கூட இப்ப சைலன்டாவுல ஆகிபுட்டாக.

  Like

 23. India uvala 3 vasayu paiyan income tax katrannanu sonna aannu dina thanthi padipeenga…thalaivaru 30 varusam U.S la irunthurukkaru…athuvum appellam $ value enna irunthathu?

  nee kooda than velacherila thani veedu vechirukke….9 varusathula eppadi sambathichannu nanga kettoma?

  Like

 24. innom onnu solla maranthutten…India vula infosys narayana murthi oda driver sotthu mathippu 2 crore na athaium nambuveenga…madras la oru katchi oda vatta seyalalar 50 kodi samabthikuran 5 varusathula….
  thalaivarai mattum kelvi kekureenga

  Like

 25. It is possible, look at samir bhatia, he started hotmail and sold 300 thousand like that sivaji also started some company and sold it. since he is System Architect he might done something (like security) and from royalty he might have got that. Don’t think your level.

  Like

 26. yov president electionle ootu poda theriyatha vijaykanth oru doctornu and election cmsnr sonna nambuve, ithe nambamate. poi vere ethavuthu velai iruntha paru. unnale pathungi pathungi blogthan eluthamudiyum. theriyamana ala iruntha, ethavuthu paperle eluthu papom. appa naan accept panikaren

  Like

 27. அய்ய்யே – அனுபவிங்கப்பா – ஆராயாதீங்க – தமிழ்ப் பட லாஜிக் தெரியாதா ?? ஆமா வழக்கமா நண்பர் சேவையரோட இடுகைகள் 0 comments னு தானெ காமிக்கும். இதுக்கென்ன இத்தனை மறு மொழிகள்

  Like

 28. My dear friend who talks about SIVAJI’s earnings! Think of politicians! A couple of years ago those who were wandering in streets begging for money have become circles, big sircles (vattam maavattam) and now they own in crores!!!! …and in binami names we dont know how much they possess!
  So there is nothing wrong in a software system architect earning in US! in US stock market is a very big game! If you are really inteligent you will spend time questioning like this, you’d be earning much more than this!
  Intha arasialvaathigalaiyellam patriyosikatheenga! Sujaatha ezhuthinathai patri mattum ‘comment’adinga!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s