வந்தது ஈ – படை; அலறுது சென்னை !

e.jpg

( தமிழ் ஓசை இணைப்பில் வெளியான எனது குறுங் கட்டுரை )

கடந்த ஓரிரு வாரங்களாக சென்னையில் உள்ள காய்கறி, மீன், மற்றும் இறைச்சி அங்காடிகளுக்கு செல்வோர் ஈக்களின் படையால் சூழப்படுகிறார்கள். கொஞ்சம் கவனம் தவறினால் மூக்கு காதுகளில் கூட ஈக்கள் நுழைந்து விடும்.

சந்தையில் பொருட்களை வாங்குவதற்குச் செலவிடும் சில நிமிடங்களிலேயே இந்த நிலை எனில் சந்தையிலேயே நாள் முழுதும் உழைப்போரை என்னவென்பது ? பாவம் என்பதைத் தவிர ?

ஈரக் காலங்களில் அதிகமாகத் தென்படும் இந்த ஈக்கள் ஒருவித அருவருப்பைத் தருவது மட்டுமன்றி பல நோய்களுக்கும் காரணமாகி விடுவதால் ஈக்களைவிட்டி விலகி இருக்க வேண்டியது அவசியமாகிறது.

கிமு நானூறாம் நூற்றாண்டுகளின் வரலாற்றின் பக்களிலேயே ஈ மொய்த்த கதைகள் இருக்கின்றன. எனவே இது இன்று நேற்று துவங்கிய பிரச்சனை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது,.

ஈக்கள் சுமார் நூறு விதமான நோய்களைப் பரப்பும் கிருமிகளை சுமந்து திரிகின்றன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. டைபாய்டு, ஆந்திராக்ஸ், டிபி போன்ற அச்சுறுத்தும் நோய்களும் இந்த பட்டியலில் இருப்பதால் அதிக கவனத்துடன் ஈக்களை விரட்டுதல் அவசியமாகிறது,

சுமார் எழுபது முதல் நூற்று ஐம்பது முட்டைகள் வரை ஒரே நேரத்தில் போடும் இந்த பெண் ஈக்கள் தங்கள் வாழ்நாளில் சுமார் 900 முதல் 8000 வரை முட்டைகளை ஈனுமாம். இதன் பரவுதல் என்பது மிகவும் வேகமாக நடக்கக் கூடியது என்பதை இது காட்டுகிறது.

கொசுக்களைப் போல இரத்தத்தில் கலக்கும் நோய்க்கிருமிகளோடு அலைவதில்லை எனினும் உணவுப் பொருட்களில் இலட்சக்கணக்கான பாக்டீரியாக்களை இறக்கி வைக்கும் பணியை இந்த ஈக்கள் செய்கின்றன.

பெண் ஈக்கள் இருக்குமிடங்கள் தான் குழுக்களாக ஈக்கள் அலையும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கொசுக்களைப் போலவே ஈக்களையும் அழிக்கும் ஒரே ஆயுதம் சுத்தம் தான். வெளிச்சத்தைக் கொண்டு இருட்டை விரட்டுவது போல சுத்தத்தைக் கொண்டு தான் ஈக்களை விரட்ட வேண்டும்.

அலுவலகச் சுவர்களில் மினுங்கும் மின் ஈ விரட்டிகள் , வீடுகளில் அடிக்கப்படும் ஈ மருந்துகள் எல்லாம் ஈக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் தற்காலிகத் தீர்வுகள். ஈக்கள் முட்டையிடும் இடங்களை அழிப்பதே ஈக்களை அடியோடு அழிக்கும் வழியாகும்.

குறிப்பாக அழுகிய காய்கறிகள், ஈரமான குப்பைக் கூடைகள், மதில் சுவரோரமாய் கிடக்கும் குப்பைகள், வீட்டிற்குள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஈரமான பாத்திரங்கள், கேன்கள் என எல்லா இடங்களும் ஈக்களின் சாகுபடி இடங்களாகின்றன.

எனவே இப்படிப்பட்ட இடங்களை சுத்தமாக வைத்திருப்பது மிக மிக அவசியம். குப்பைக் கூடைகளை எல்லாம் வீட்டை விட்டு வெளியே தூரத்தில் வைப்பது பலன் தரும்.

ஈக்கள் வந்து உட்காரும் சன்னல்களை மூடிவைப்பதும், அந்த இடங்களில் பூச்சிக் கொல்லி அடிப்பதும் வீட்டிற்குள் ஈக்கள் நடமாடுவதைக் குறைக்க உதவும். ஆனால் சமையலறைப் பகுதிகளிலலும், உணவு உண்ணும் இடங்களிலும் மின் ஈ விரட்டிகளை மாட்டுவதோ, மருந்து அடிப்பதோ கூடவே கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.

அளவில் சிறியது தானே என்று அலட்சியமாய் இருக்காமல் பல நூற்றாண்டுகளாக நம்மைத் தொடர்ந்து தாக்கி வரும் ஈக்களை சுத்தம் எனும் விழிப்புணர்வு வாள் கொண்டு விரட்டுவோம். ஆரோக்கிய வாழ்வு வாய்க்கும்

சேவியர்

Advertisements

4 comments on “வந்தது ஈ – படை; அலறுது சென்னை !

  1. Pingback: Mosquito, housefly, gnat - Xavier « கில்லி - Gilli

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s