ரஜினியை எதிர்க்கும் மன்சூர் !

man.jpg

சிவாஜி படம் வெளியாகும் நாளில் என் படமும் வெளியாகும் பிச்சுகினு ஓடும் என்று பிச்சுவா பக்கிரி கணக்கா சத்தம் போட்டுட்டு இருந்தார் மன்சூர்.

சிவாஜி படத்துக்கு டிக்கெட் கிடைக்காம என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சிட்டு வெளியே நிக்கிறவங்களைப் பாத்து ‘ என்னைப் பார் யோகம் வரும்’ ன்னு சொல்லணுங்கிறது தான் தமிழாகரனோட நோக்கம்.

இது யாரு தமிழாகரன்னு கேக்காதீங்க. தமிழ்ப் பற்று தலைக்கு ஏறினபோது மன்சூர் தன்னோட பெயரை தமிழாகரன்னு தமிழ்ப்படுத்தின விஷயம் உங்களுக்கு மறந்திருக்க நியாயமில்லை.

ம்.. வாஸ்து படி வாயை மாற்றியும் மன்னிக்கவும் பெயரை மாற்றியும் ஒண்ணும் சரிப்பட்டு வரலை. அதனாலதான் சிவாஜி ரிலீஸ் நேரத்தில் முறுக்கிக்கிட்டு குறுக்கே நின்னு சின்ன விளம்பரம் வாங்கிகிட்டாரு.

ஆனா பாவம் என்ன பண்ண ? சிவாஜி படம் வெளியானபோது மன்சூர் அலிகான் படத்துக்கு தியேட்டர் கிடைக்கவில்லை. எதுக்கு திருஷ்டிக் கழுதைன்னு தியேட்டர்காரங்க நினைச்சிருக்கலாம்.

அந்த கடுப்புல, எந்தக் கொம்பனாலும் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியாது. கருப்புப் பணத்தை ஒழிக்கலாம்ன்னு எவனாவது சொன்னா அதை இருநூறு ரூபா டிக்கெட் ‘பிளாக்ல’ வாங்கி பாக்காதீங்கன்னு விளம்பரம் போட்டார் மன்சூர். பரவாயில்லையே ! கொஞ்சம் கவன ஈர்ப்பு யுத்தியில வெற்றி பெற்றுட்டாரேன்னு நிமிர்ந்து உட்கார்ந்தா கொஞ்ச நாள் கழிச்சு இன்னோர் விளம்பரம்.

என்னால படத்தை வருஷக் கணக்கா “ஓட்ட” முடியாது ( என்ன கொடுமை சரவணன் இது ? ) அதனால ஓடற நாலு நாளுக்குள்ள வந்து பாத்துட்டு போங்க ன்னு சொல்லி ஒரு விளம்பரம்.

ஏதாவது பண்ணி தன்னோட படத்தை நாலுபேருக்கு தெரிய வைக்கணுங்கிறதுல மன்சூர் வெற்றி பெற்றுவிட்டார். ஆனா, இதுக்காக படத்தைப் போய் பார்த்து ஹி…ஹி… இதெல்லாம் நடக்கிற காரியமா ?

திருட்டு விசிடிலயாவது நாலு பேர் மன்சூர் படம் பார்த்திட்டு இருந்தாங்க அதையும் அடிச்சு உடைச்சு காலி பண்ணிட்டாரு. இனிமே என்ன பண்றதா உத்தேசமோ ?

ஓவரா யோசித்து, அடுத்த படத்திற்கு ‘என்னைப் பார் மோகம் வரும்’ என்று தலைப்பிட்டு தலைப்பில்லா சேலைக்காரியை நிற்க வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Advertisements

6 comments on “ரஜினியை எதிர்க்கும் மன்சூர் !

  1. Mansoor sonnathula konjam niyayamum irukku…. thannudaiya sontha theatre la alungale illama 800 days enna 800 years kooda oru sappai padaththai ottalaam….ithu oru sathanai enre solla mudiyadhu……ellam oru build up pppuuuu

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s