பாட்டு கேட்டால் மின்னல் தாக்கும் !!!

a.gif

நவீன உலகம் இன்று தனது ஒரு கையில் நவீனத்தையும், மறுகையில் ஆபத்தையும் வைத்துக் கொண்டு தான் பயணித்துக் கொண்டிருக்கிறது.

அதிலும் கைப்பேசியில் தினம் தோறும் முளைக்கும் புதுப்புது வடிவங்களும் வசதிகளும் வியப்பையும், பயத்தையும் ஒரே நேரத்தில் தருகின்றன.

காதுகளில் இயர்போன் மாட்டாத இளைஞர்களை ரயில் பயணங்களில் இப்போதெல்லாம் பார்ப்பது மிகவும் அரிதாகிவிட்டது. எல்லோர் காதுகளிலும் சுசித்திராக்கள் மூக்கால் பேசிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது ரஹ்மான்கள் அலறிக்கொண்டிருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் ஐப்பாடுகளை இடுப்பில் சொருகிக்கொண்டு வாக்கிங், ஜாகிங் செய்வது சர்வ சாதாரண நிகழ்ச்சி. இது கூட ஆபத்தில் முடியலாம் என்னும் தகவல் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

கனடாவின் வேன்கோவர் பகுதியில் ஒருவர் ஐப்பாடை இடுப்பில் சொருகிக் கொண்டு ஹாயாக பாட்டுக்கேட்டுக்கொண்டே ஓடிக்கொண்டிருந்திருக்கிறார். திடீரென வந்த மின்னல் அவருடைய இயர்போன் வழியாக காதை தாக்கி காதுகளின் கேட்கும் தன்மையை வெகுவாக இழந்திருக்கிறார். அவருடைய நாடியும் இந்த தாக்குதலில் உடைந்திருக்கிறது.

இத்தகைய கருவிகள் ஆபத்தற்றவை எனும் கூற்று கேள்விக்குறியாகி இருக்கிறது. பாதிப்புக்குள்ளான நபர் அணிந்திருந்த ஹெட்போன் மெட்டலும், அவருடைய வியர்வையும் கலந்ததனால் தான் மின்னல் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது. சாதாரணமான உபயோகத்தில் இவை நிகழ வாய்ப்பில்லை என சம்மதங்கள் சொல்லப்படுகின்றன.

மின்னல் தாக்கியபோது அந்த நபர் சுமார் எட்டு அடி தூரம் தூக்கி வீசப்பட்டதாக பார்த்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்வுக்குப் பின் கனடா மருத்துவர்கள் ஜாகிங் செய்துகொண்டே பாட்டு கேட்போரை எச்சரித்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் மின்னல் தாக்கும் வாய்ப்பு இருக்கும் காலநிலைகளில் இவை தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

( கொஞ்சம் பழைய செய்தி தான்.. ஆனாலும் .அறிய வேண்டிய செய்தி ! )

Advertisements

One comment on “பாட்டு கேட்டால் மின்னல் தாக்கும் !!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s