அதிர வைத்த சிவாஜி !

r5.jpg

சிவாஜி திரைப்படத்தின் மிகைப்படுத்தப்பட்ட விமர்சனங்களையும் சிலாகிப்புகளையும் மீறி தற்போது அதன் உண்மையான நிறம் வெளிவரத் துவங்கியிருக்கிறது.

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா ? அது சோற்றின் அளவைப் பொறுத்தது என்பீர்களெனில், அதை விடப் பெரியது பூசணிக்காய் என்பதையும் புரிந்து கொள்க 🙂

இணையத்தில் தான் சிவாஜியின் உண்மையான விமர்சனங்கள் வந்தன. அங்கவை சங்கவை என்று கறுப்பை அவமதிக்கும் கதாபாத்திரங்கள், மற்றும் சிவாஜியின் நிறம் மாற்றும் சேஷ்டைகள் என சில சில்லறை விஷயங்களையும் தாண்டி ஆழமான பார்வை இணைய விமர்சனங்களில் காணக் கிடைத்தது.

தற்போது தூங்கிக் கொண்டிருக்கும் திரையரங்குகள் ரசிகனின் புண்ணியத்தால் வார நாட்களில் முப்பது முதல் நாற்பது சதவீதம் வரை நிறைகிறதாம். வார இறுதிகளில் மட்டுமே கலெக்ஷன்.

சென்னையில் ஐநாக்ஸ், சத்யம் மற்றும் ஏவிஎம் ராஜேஸ்வரி தவிர மற்ற அனைத்து திரையரங்குகளிலும் கூட்டமில்லாத நிலையே !

நெல்லையில் பெரும்பாலான திரையரங்குகளில் போட்ட பணம் கிடைக்கப்போவதில்லை என வினியோகஸ்தர்கள் தரப்பு கவலையடைந்திருக்கிறதாம்

மதுரையிலும் இரண்டு திரையரங்குகளில் சிவாஜி போட்ட பணத்தை பெற்றுத்தர மாட்டாராம்.

வேலூரில் ஐம்பது இலட்சத்திற்கு வாங்கியதில் முப்பத்து ஐந்து இலட்சம் தேறினால் பெரிய விஷயம் என்கிறார்கள்.

திருவண்ணாமலை, குமரி மாவட்டம், கேரளா என பல இடங்களில் பல திரையரங்குகளை விட்டே படம் எடுக்கப்பட்டு விட்டது. ஒரு சில திரையரங்குகளில் தான் இப்போது ஓடுகிறது.

சிவாஜி சும்மா அதிருதில்ல ?? ஆமா.. வினியோகஸ்தர்கள் அதிர்ந்து தான் போயிருக்கிறார்கள்.

சரி சிவாஜியைப் பற்றி பேசுறதை நிறுத்திப்போம்…

ஏலேய்… தசாவதாரம் வரப்போகுதாம்ல ? அதுல எழுபது வயது பாட்டி மாதிரி வர கமல் கலக்கறாராம்லே.. ஏலே… நில்லுலே… சொல்லுததை கேட்டுட்டு போலே….