இது ஆண்களுக்கான சமாச்சாரம் !

tomato.jpg

தக்காளி சூப் குடிப்பது ஆண்களின் விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தினமும் ஒரு கப் சூப் குடிப்பதால் விந்தணுக்கள் அதிக சக்தி பெற்றுவிடும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்பது போர்ட்ஸ் மௌத் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் முடிவு.

லைக்கோப்பென் கான்சர் நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளி உட்கொள்வது கான்சரிலிருந்து பாதுகாக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் தகவல். இப்போது “இந்த” புதிய பயனும் அதனுடன் இணைந்திருக்கிறது.

நாற்பத்து இரண்டு வயதுக்கு மேல் இருக்கும் நபர்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த சோதனையில் இரண்டு வாரங்களிலேயே பன்னிரண்டு சதவீதம் வரை விந்தணு வீரியம் அதிகரித்திருக்கும் தகவல் ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்திருக்கிறதாம்.

அப்புறமென்ன, இனிமேல் வழியில் தக்காளி சூப் விற்றுக் கொண்டிருப்பவனைப் பார்த்தால் பைக்கை கொஞ்சம் நிப்பாட்டி ஒரு சூப் குடிச்சிட்டு போங்க 🙂

10 comments on “இது ஆண்களுக்கான சமாச்சாரம் !

  1. சில விஞ்ஞானப் பெயர்கள் தமிழ்படுத்துவதற்கு சில வருடங்கள் ஆகும். சில சமயம் நாம் ஆங்கிலப் பெயர்களை அப்படியே வழங்குகிறோம். அப்படி எழுதும்போது அடைப்புக் குறிக்குள் ஆங்கில உச்சரிப்பையும் தந்தால் பிற்காலத்தில் எடுத்தாள உதவுமில்லையா? (எ.கா>) லைகோபின்(lycopene)

    தொடர்ந்து எழுதுங்கள் 🙂

    Like

  2. tomootto mattum illa madhulampalam and his seeds, yellu, kollu, fineapple,murungai leaf veg flower cum, venthauam, mukkiuama onion vengauam(small), aanmai and vindu perukkikal sir

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s