“தல” விதி !

thala.jpg

கிரீடம் படம் தல எதிர்பார்த்தபடி அமையவில்லையாம். தல கடைசில ஜெயிலுக்குப் போறதை சகிச்சுக்க முடியாம தலயோட ரசிகர்கள் தியேட்டருக்கே போகலயாம்.

என்னய்யா படம் எடுத்திருக்கே. எங்க தல தோக்கற மாதிரி படம் எடுக்க உனக்கு என்னா தெகிரியம். எல்லாருமா சேர்ந்து தலய வெளியே தல காட்டாம செஞ்சுடுவீங்க போலிருக்கே. வீட்டுக்கு ஆட்டோ ஊர்வலம் அனுப்பவா கணக்கா நிறைய மிரட்டல்களாம்.

மலையாளத்துல இதெல்லாம் சகஜம். ஆன தமிழ்ப்படுத்தும்போ மக்கள் இதையெல்லாம் ஒத்துக்க மாட்டாங்கன்னு இயக்குனருக்குத் தெரிய வேண்டாமா ?

மோகன்லாலும், திலகனும் அபினயிச்சப்போ ஆ கிளைமேக்ஸ் ஆணு சித்ரத்தின்றே அதி உன்னதமாய விஜயத்தினு காரணம். என்றெல்லாம் இயக்குனர் சொல்லியும் கேட்காமல் கிளைமேக்ஸ் காட்சியை மாற்ற வேண்டும் என்று சொல்லி விட்டார்களாம் தயாரிப்பாளர் தரப்பில்.

ஒரு ரூபா வெச்சுட்டு கோடீஸ்வரன் ஆகற சீசன்ல போய் ஜெயிலை எல்லாம் காட்டுவாங்களா ? என்ன டயரக்டர் சார்.

கிளைமேக்ஸ் மாற்றப்பட்ட பெட்டி அவசர அவசரமாக எல்லா இடங்களுக்கும் பறந்து திரிகிறதாம்.

எல்லாம் நம்ம தல விதி !