எதேச்சையாக தமிழ் மணத்தைத் திறந்தபோது தான் தெரிந்தது. ஆசிப் அண்ணனின் துணைவியாரின் எதிர்பாரா மரணம்.
தொலைபேசியில் நண்பர் கணேஷைப் பிடித்து விசாரித்தபோது கேட்ட செய்திகளெல்லாம் அதிர்ச்சியின் உச்சத்துக்கு என்னை இட்டுச் சென்றன. ஒரு முழு நாள் எந்த வேலையும் செய்ய இயலாமல் வெறுத்துப் போய் அமர்ந்திருந்தேன்.
இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு தான் தொலை பேசினேன். அப்போதைய ஆனந்தமான சூழலை இறைவன் இரண்டொரு வாரங்களில் இப்படிப் புரட்டிப் போட்டதை ஜீரணிக்க முடியவில்லை.
செய்தியைக் கேட்ட எங்களுக்கே இப்படிப் பட்ட துயரம் எனில் உங்கள் நிலமையை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
நட்புடன் துணையிருப்போம் என்றும், சோகத்தைத் தாங்கும் வலிமை பெற ஜெபித்திருப்போம் என்றும் சொல்வதைத் தவிர என்னிடம் வேறு வார்த்தைகள் ஒன்றும் இல்லை ஆசிப்.