ஓ… அங்கேயும் இதே கதி தானா !!!

school.jpg

கல்விக்கட்டணம் காடு மலை தாண்டி ஓடுவது இந்தியாவில் மட்டுமல்ல இங்கிலாந்திலும் தான் என்கிறது ஒரு புள்ளிவிவரக் கணக்கு. அதிலும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைப்பது என்பது மிகப்பெரிய பதவிகளை வகிப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியமாம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்விக்கட்டணம் நாற்பது விழுக்காடு வரை அதிகரித்திருக்கிறதாம். ஆனால் வருமானமோ வெறும் நான்கு விழுக்காடு தான் அதிகரித்திருக்கிறதாம்.

இதனால் இருபத்து மூன்று விதமான தொழில்களைச் செய்வோர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முடியும் என்ற பழைய நிலை மாறி, வெறும் பதிமூன்று விதமான தொழில் செய்பவர்களுக்கே இந்த வசதி கிடைக்கும் என்று அந்த புள்ளி விவரம் தெரிவித்திருக்கிறது.

அதாவது மருத்துவர், விமானி, வழக்கறிஞர்கள், வரைஞர்கள், கணிதவியலார் போன்ற சில பணிகளைச் செய்பவர்கள் மட்டுமே அந்த அளவுக்கு பணம் கொடுத்து பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியுமாம்.

காவல்துறையினர், பத்திரிகைத் துறையினர், பொறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் எல்லாம் தனியார் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைப்பதை மறந்து விட வேண்டியது தான் என்கிறது இந்த புள்ளி விவரம்

பின்னே சும்மாவா ஒரு குழந்தைக்கு வருடம் இருபது இலட்சம் செலவாகுமாமே !!!

Advertisements

2 comments on “ஓ… அங்கேயும் இதே கதி தானா !!!

  1. பல்கலைக்கழகங்கள் Topup fees என்று இன்னும் வசூலிக்க வழி செய்திட்டு போனார். அதற்கு முதல் ஒவ்வொரு வருசமும் Tution fees £1200, ஆனால் இப்ப Tution feesஓட Top-up fees £3000மும் குடுக்கணும். இதையெல்லாம் மாத்தப் போறதா கார்டண் பிரவுண் சொல்றார், பார்க்கலாம்.

    Like

  2. கல்வி அக்காலங்களில் எளிதாகக் கிடைத்தது. இப்போது பணம் பணம் – வேறு வழி இல்லை

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s