சருக்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி

sugar.jpg

நீரிழிவு நோய்க்கும் வைட்டமின் B1 க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்னும் அரிய கண்டுபிடிப்பை ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்தியிருக்கின்றனர்.

மருத்துவ வரலாற்றிலேயே நீரிழிவு நோய்க்கும் ஒரு வைட்டமின் சத்துக்கும் இடையே உள்ள தொடர்பைச் சொல்லும் முதல் ஆராய்ச்சி இது என்பது குறிப்பிடத் தக்கது.

நீரிழிவு நோய் இருப்பவர்களின் உடலில் இருந்து இந்த உயிர்ச்சத்து பதினைந்து மடங்கு அதிகமாய் வெளியேறுவதால் தான் உடலில் பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

இந்த சத்து நீரிழிவு நோயாளிகளை விட்டு வெளியேறாமல் இருந்தால் இதயம், கண், சிறுநீரகங்கள், நரம்பு போன்ற நோய்கள் இவர்களைத் தாக்கும் பாதிப்பு குறைவு என்றும் இவர்களுடைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

இறைச்சி, தானிய வகைகள் போன்றவற்றில் காணப்படும் இந்த வைட்டமின் B1 அளவை உடலில் தேவையான அளவுக்கு தக்க வைத்துக் கொண்டால் நீரிழிவு நோயின் பாதிப்பைக் குறைக்கலாம்.

அதாவது கொஞ்சம் கொஞ்சமாய் உயிரைக் கொல்லும் நீரிழிவு நோயின் வீரியத்தை உணவு முறை மூலமாகவே கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்னும் உயரிய ஆராய்ச்சியாய் இந்த ஆராய்ச்சி கருதப்படுகிறது.

உலகெங்கும் பெரும்பாலான மக்களை ஆட்டிப் படைக்கும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியுமெனில் மருத்துவ உலகின் மாபெரும் கண்டுபிடிப்பாய் இது நிகழும் என்பதில் சந்தேகமில்லை.

6 comments on “சருக்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி

  1. நீங்கள் எழுதும் இது மாதிரி இடுகைகளுக்கு ஆதாரங்களும்(reference) வெளி இணைப்புகளும் கொடுத்தால், விரும்பியவர் மேலும் படிக்க இலகுவாக இருக்குமே.

    Like

  2. சர்க்கரை தப்புன்னு சொன்னாங்க .. சருக்கரை ன்னு தான் சொல்லணுமாமே !!!

    நண்பர் சாரங்கன், அடுத்த முறை புதுசா எழுதும்போ லிங்க் கொடுக்கறேன். இது news.bbc.co.uk ல தான் படித்தேன்

    Like

  3. சாரங்கனின் மறுமொழியை வழி மொழிகிறேன். தேவையானவர்களுக்கு அதிகத் தகவல் தேட எளிதாக இருக்கும். சேவியரின் பதிலும் சரியானதே.

    Like

Leave a comment