அலாரத்தை ஆஃப் செய்து விட்டு தூங்குபவரா நீங்கள் ?

நல்ல பிள்ளையா காலை ஆறுமணிக்கு அலாரத்தை வைத்துவிட்டு அது காலையில் சத்தமிட ஆரம்பித்ததும் கண்ணைத் திறக்காமலேயே அலாரத்தைத் தலையிலடிக்கும் பழக்கம் உங்களுக்கும் உண்டா ?

தூக்கத்திலிருந்து எழும்பாத மகனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றாராம் ஒரு தந்தை நேற்று தான் தினசரியில் படித்தேன். அப்படி கஷ்டம் ஏதும் இல்லை அப்பாக்களே.. இந்த படத்தைப் பாருங்கள். !!! அதன்படி நடங்கள்.

usign.jpg

அசத்தல் விளம்பரம்

விளம்பரங்களுக்கு வசீகரிக்கும் தன்மை உண்டு. நான் விளம்பரங்களின் பிரியன். விளம்பரங்களில் தெரியும் கலை நயமும், ஆழமான கற்பனையும் பலநேரங்களில் நம்மை வியப்பின் உச்சிக்கு இட்டுச் செல்லும்.

அப்படி என்னைக் கவர்ந்த விளம்பரங்கள் பல…

இந்த விளம்பரத்தைப் பாருங்கள். குடித்து விட்டுக் காரோட்டாதீர்கள் என்னும் விளம்பரம். கண்ணாடியில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்துக்கும், எமனின் உருவத்துக்கும் முடிச்சுப் போட்டு, “டிரிங்க் அண்ட் டிரைவ்” விளம்பரம். வசீகரிக்கிறதா இல்லையா ?

drink_and_drive.jpg