குழந்தைக்குக் காது சரியாய் கேட்கிறதா ?

kid.jpg

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்காணிக்கும் போது பல வேளைகளில் தவற விட்டு விடுகின்ற ஒன்று குழந்தையின் கேட்கும் திறன் குறித்த கண்காணிப்பு. அதெல்லாம் சரியாத் தான் இருக்கும் எனும் அதீத நம்பிக்கை அல்லது அதையெல்லாம் கவனிக்கணுமா என்ன ? எனும் விழிப்புணர்வற்ற நிலை இரண்டையும் இதன் காரணங்களாகக் கொள்ளலாம்.

குழந்தைகளின் காது கேட்கும் திறன் குறித்த சோதனைகளை நிச்சயம் செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவர். அதாவது ஆறு மாதமான குழந்தை அர்த்தமற்ற உளறல்களை தன்னுடைய மழலைக்குரலால் பேச ஆரம்பிப்பது தான் இயற்கை. காது கேட்கும் திறன் பாதிப்படைந்துள்ள குழந்தைகளுக்கு இந்த காலம் மாறுபடுகிறதாம்.

சத்தம் போடாமல் சமர்த்தாய் படுத்திருப்பது கூட கவனிக்கப் படவேண்டியது தான் என்கின்றனர் இ.என்.டி மருத்துவர்கள். ஆறு மாதத்திலேயே எந்த சத்தமும் எழுப்பாமல் சில மாதங்களுக்குப் பின் சத்தம் போட ஆரம்பிக்கும் குழந்தைகள் கவனிக்கப்பட

தாமதமாக ஒலியெழுப்புவதோ, அல்லது சத்தமே எழுப்பாமல் இருக்கும் மழலைக்காலமோ குழந்தையின் காது கேட்கும் திறன் பாதிப்படைந்திருக்கலாம் என்பதன் அறிகுறிகள் எனக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளின் வளர்ச்சியை ஒத்த வயதுடைய மற்ற குழந்தைகளின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

சிறுவயதிலேயே இந்த குறைபாட்டைக் கண்டுபிடித்து விட்டால் எளிதில் நிவர்த்தி செய்து விட முடியும். பிறந்த சில வாரங்களிலேயே செய்யக் கூடிய ஆட்டோமேட்டிக் பிரைன் ஸ்டெம் ரெஸ்பான்ஸ் டெஸ்ட், ஆட்டோஅக்குஸ்டிக் டெஸ்ட் போன்ற சோதனைகள் இன்று பிரபலம்.

இந்த கணினி சார் சோதனைகள் குழந்தைக்கு கேட்கும் திறன் இருக்கிறதா இல்லையா என்பதை தெளிவாகக் காட்டிவிடும்.

இந்தியாவில் பிறக்கும் சுமார் எட்டாயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தை கேட்கும் திறனின்றி பிறக்கிறது என்பது அதிர்ச்சியூட்டும் தகவல். இந்த குறைபாட்டை முளையிலேயே கண்டு பிடித்தால் எளிதில் குணப்படுத்தி விட முடியும்.

எனவே குழந்தைகளின் காதுகளையும் தவறாமல் கவனியுங்கள்

Advertisements

2 comments on “குழந்தைக்குக் காது சரியாய் கேட்கிறதா ?

  1. Pingback: Powerlinestamil’s Weblog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s