சென்னைக்கு விடிவு காலம் ?

சென்னையிலுள்ள அனுமதி பெறாத விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது வரவேற்கத் தக்கது.

அனுமதி பெற்ற அனுமதி பெறாத எனும் கட்டுப்பாடுகள் இன்றி முக்கியமான சாலைகளில் நிறுவப்பட்டிருக்கும் விளம்பரப் பலகைகளை அகற்றுவது உண்மையிலேயே சென்னையை அழகுபடுத்தும்.

சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனத்தைச் சிதறடிக்கும் முக்கியமான பணியை இந்த விளம்பரப் பலகைகள் செய்கின்றன.

சமீபத்தில் ஒரு விளம்பரம் ஆண்களின் ஆடைக்கானது என்பதை நம்பவே முடியாதபடி பெண் ஒருத்தி உள்ளாடையுடன் இருக்கும் கவர்ச்சிப் படத்துடன் நகரை ஆக்கிரமித்திருக்கிறது. சென்னை வாசிகளுக்குத் தெரிந்திருக்கும்.

ஆஹா… உச்சகட்டம் விளம்பரம் இன்னொரு பக்கம், ஆடைகள், நகைகள் என எங்கும் விளம்பர மயம்.

பெரும்பாலான விளம்பரங்கள் பெண்களை மையப்படுத்தியே அதுவும் ஆபாசமாக முன்னிலைப்படுத்தியே வருவது கவலைக்குரியது.

உதாரணத்துக்குத் தான் இந்த விளம்பரம்.

விளம்பரப் பலகைகள், அரசியல் வாசம் வீசும் கட்டவுட்கள், ரசிகர் மன்ற டிஜிடல் பேனர்கள், இவை ஏதும் இல்லா சென்னை நினைத்துப் பார்க்கவே சுகமாக இருக்கிறது.

கலைஞர் செய்த நல்லசெயல்களின் பட்டியலில் இதுவும் சேரட்டும்

dc-ad.jpg

10 comments on “சென்னைக்கு விடிவு காலம் ?

 1. இனிய சேவியர்,

  படத்தில் நீங்கள் காட்டியிருக்கும் அந்த அண்ணாசாலை – எல்டாம்ஸ் சாலை வானுயர்ந்த விளம்பரப்பலகை எனக்கும் எரிச்சலைத் தந்தது.

  பொறுப்பாகச் செயல்படவேண்டிய பத்திரிகையாளர்களே இப்படிப்பட்ட விளம்பரங்களால் மக்களை ஈர்க்க முடிவு செய்துவிட்டார்கள்.

  சென்னை விமான நிலையத்தின் அருகுல் இருக்கும் சில விளம்பரப் பலகைகளில் பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகளின் ஒளியால், ஓடுதளத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை என சில விமானிகள் குறைகூறியபோதே இதில் அரசு கவனம் செலுத்தியிருக்கவேண்டும்.

  இப்போதாவது ஒரு முடிவுக்கு வந்தார்களே, மகிழ்ச்சி.

  அன்புடன்
  ஆசாத்

  Like

 2. ஆமாம், இதற்கு எதுக்கு ஒரு பலான பேனர்.

  கலைஞர் பண்ணின நல்ல காரியங்களா…. நல்ல ஜோக்குதான்.

  அவர் படத்தை வெச்சிருக்கிற தட்டிகளை எடுத்தாலே மெட்றாசுல பாதி பிளாட்பாரம் ப்ரீ ஆகிடும்தானே.

  நன்றி

  Like

 3. //சென்னை விமான நிலையத்தின் அருகுல் இருக்கும் சில விளம்பரப் பலகைகளில் பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகளின் ஒளியால், ஓடுதளத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை என சில விமானிகள் குறைகூறியபோதே இதில் அரசு கவனம் செலுத்தியிருக்கவேண்டும்//

  அசத்தலா சொன்னீங்க ஆசாத் அண்ணாத்தே

  Like

 4. //ஆமாம், இதற்கு எதுக்கு ஒரு பலான பேனர்.//

  நான் பொய் சொல்றேன்னு நீங்க நினைச்சிடக் கூடாதுன்னு தான். 🙂

  Like

 5. vandi ottum podhu inna bayamnaa cutout nammae mela vizhundaal kadha kandal aayidum andhe bayam vera undu xavi, seekarama andhe cutouts, banners, boards eduthal safety illainaa bayamaa irukku 😦

  Like

 6. விளம்பரங்கள் பூக்கடைகளுக்குக் கூட தேவைப் படுகிற காலமிது. போட்டிகள் அதிகரித்த உலகினில் என்ன தான் செய்வது ? மக்களை ஈர்க்க வேண்டுமே

  Like

 7. சென்னையிலாவது பரவாயில்லை. இங்கே (ஹைதராபாதில்)240 அங்குல ஃப்ளாட் ஸ்கிரீன் தொலைக்காட்சியை அந்தரத்தில் வைத்து விளம்பரம் செய்கிறார்கள். அதில் புதிய திரைப்படங்களின் விளம்பரங்கள் வேறு. ஒருமுறை நயன்தாராவை அதில் பார்த்ததாய் ஞாபகம். (அப்போது நான் காரை ஓட்டவில்லை. டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன்.)

  Like

 8. // ஒருமுறை நயன்தாராவை அதில் பார்த்ததாய் ஞாபகம்//

  இதையெல்லாம் மறக்க மாட்டீங்களே !!!

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s