ஆளை விடுங்க சாமி.

email.jpg

வாங்கப்பா வாங்க. கடந்த சில வருஷங்களா எனக்கு செயின் மெயில் அனுப்பி கலங்கடிச்ச உங்க எல்லாருக்கும் பொத்தாம் பொதுவா ஒரு வணக்கம் சொல்லிக்கறேன்.

சும்மா சொல்லப்படாது சாமி, உங்களால நான் பட்ட நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

உங்களால நான் சினிமா போறதையே நிப்பாட்டினேன். ஏன்னா யாருடா எப்போ எயிட்ஸ் ஊசி போட்டுருவாங்களோங்கற பயம் தான்.

இப்ப எல்லாம் நான் டியோடரண்ட் யூஸ் பண்றதில்லேப்பா. ஏன்னா அது பயன்படுத்தினா கேன்சர் வரும்னு சொன்னது நீங்க தானேப்பா.

இப்பல்லாம் பயப்படாம இராத்திரி பக்கத்து பில்டிங் கூட போக முடியறதில்லை. எங்கேடா பெர்ஃப்யூம் சாம்பிள் வெச்சு யாராச்சும் நம்ம கையில இருக்கிறதை சுருட்டிடுவாங்களோன்னு தான்.

போன் பண்ணும்போ கூட பயமா இருக்கு. யாராவது ஏதாவது நம்பரை டயல் பண்ண சொல்லி பில் எக்கச்சக்கமா ஏறிடுமோன்னு தான். ஏன்னா நீங்க தானே அதுவும் இதுவும் அடிக்கடி சொல்லி பயப்படுத்தறீங்க.

ஆறு வருஷமா ஐந்து வயசில இருக்கிற பொண்ணு ஒண்ணுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு பணம் அனுப்பி அனுப்பி என்னோட சேமிப்பெல்லாம் கரைஞ்சு போயிடுச்சுப்பா.

பத்து பேருக்கு, இருபது பேருக்குன்னு இமெயில் அனுப்பி அனுப்பி இன்னும் இலவச லேப்டாப்பை எதிர்பார்த்துட்டே இருக்கேன்.

பத்து நிமிடங்களுக்குள் இருபது பேருக்கு மெயில் அனுப்பிட்டு நினைத்தது நடக்கும்ன்னு வேண்டிகிட்டு தான் இருக்கேன். அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடம் ஆன பின்பும்.

ஏதோ கதிர் பூமிக்கு பாயுதுன்னு சொல்லி பாதி நாள் என்னோட மொபைல் போன் ஆஃப் ல தான் கிடக்குது.

இன்னும் என்னென்ன மெயில்ஸ் இந்த வருஷம் வரப் போகுதோ ? நல்லா யோசிச்சு ஏதாச்சும் அனுப்பிட்டே இருங்க. ஏடிஎம் ல அடிப்பாங்க, சந்துல ஒதப்பாங்க, பஸ்சுல மிதிப்பாங்கன்னு. இப்போதைக்கு ஆளை விடுங்க.

( ஒரு மின்னஞ்சல் கருவிலிருந்து )

2 comments on “ஆளை விடுங்க சாமி.

  1. நைஜீரியாவில் இருந்து வரும் – நம்மைக் கோடீஸ்வரர்களாக்கும் மடல்கள் தங்களுக்கு வருவதில்லையா ?? கட்டற்ற சுதந்திரம் – அலைபேசியில் குறுஞ்செய்திகள் – இணைய மடலில் அறிவுரைகள் – பயமுறுத்தல்கள் – விண்ணப்பங்கள் – வேதனைகள் – என்ன செய்வது ??????

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s