செக்ஸ் டே !!! லீவ் எடு கொண்டாடு !!!

suv.jpg

சோவியத் யூனியனின் சிதைவுக்குப் பின் ரஷ்யா சந்தித்து வரும் பிரச்சனைகளில் ஒன்று மக்கள் தொகை விகிதத்தில் ஏற்பட்டுள்ள சரிவு. இந்த சரிவை நிவர்த்தி செய்வதற்கு ரஷ்ய அரசு பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது.

இந்தியாவில் மக்கள் தொகையை எப்படி கட்டுக்குள் வைப்பது என்பது குறித்து ஆளாளுக்கு தலையைப் பிய்த்துக் கொண்டு திட்டங்களை வகுத்து வருவது போல ரஷ்யாவில் எப்படி அதிகரிப்பது என்று தலையைப் பிய்க்கிறார்கள்.

இரண்டு குழந்தைகள் அல்லது அதற்கு அதிகமான குழந்தைகள் உள்ளவர்களுக்கு கல்வி, வீட்டுப் பொருட்கள் போன்றவை வாங்க பல இலட்சம் ரூபாய்களை ரஷ்ய அரசு இலவசமாகவே வழங்கி வருகிறது.

மைய ரஷ்யாவான Ulyanovsk பகுதியிலுள்ள கவர்னர் கடந்த புதன் கிழமையை “குடும்ப உறவு தினம்” என்று அறிவித்தார். அன்றைய தினம் அலுவலகப் பணிகளை விட்டு விட்டு எல்லோடும் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று மனைவியுடன் காதலுடன் கசிந்துருகி காமத்தில் திளைத்திருக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

அன்றைய தினத்திலிருந்து சரியாக ஒன்பது மாதங்கள் கழிந்து அதாவது ஜூன் பன்னிரண்டாம் தியதி பிறக்கும் குழந்தைகளுக்கு பல பரிசுகள் வழங்கப்படுமாம். தொலைக்காட்சி, கார் போல பல பரிசுகள் இந்த பரிசுப் பட்டியலில் உண்டு. இந்த ஆண்டு “வெற்றிகரமாக” குழந்தை பெற்றுக் கொண்டவர்களில் பம்பர் பரிசாக ஒரு SUV கார் வழங்கப்பட்டிருக்கிறது !

கடந்த மூன்று ஆண்டுகளாகவே செயல்பட்டு வரும் இந்தத் திட்டத்தினால் அந்தப் பிராந்தியத்தில் சுமார் 4.5% பிறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது என்பது ஆஹா.. செய்தி !

சரி.. இந்த விஷயத்தை மட்டும் இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் பண்ண முடிஞ்சிருந்தா பிரச்சனை எப்பவோ முடிஞ்சிருக்குமே !!!

11 comments on “செக்ஸ் டே !!! லீவ் எடு கொண்டாடு !!!

 1. //இந்த விஷயத்தை மட்டும் இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் பண்ண முடிஞ்சிருந்தா பிரச்சனை எப்பவோ முடிஞ்சிருக்குமே !!! //

  ஹா ஹா..

  அதானே!..

  Like

 2. வெவரம் தெரிஞ்சவங்க. விடுமுறை கொடுக்கிறாங்க. வயிறு எரியுதப்பா!

  புள்ளிராஜா

  Like

 3. யார் யாருக்கு எது தேவையோ அதைச் செய்கிறார்கள். இந்தியர்களை மிஞ்ச ஆளில்லை

  Like

 4. Nallavellai India does not have such leave or else !!!! Oh unable to think about population. 🙂

  Natpudan
  Bala

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s