புகைக்கு ஏன் அடிமையாகிறோம் ?

smoke.jpg
புகை பிடிப்பதன் தீமைகள் குறித்தும், அதை விலக்குவதற்காக எடுக்க வேண்டிய முறைகள் குறித்தும் சர்வதேச அளவில் டன் கணக்கில் கட்டுரைகளும் நூல்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

இன்னொரு பக்கம் புகை பிடித்தல் குறித்த ஆராய்ச்சிகள் மருத்துவ அரங்கின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டிருக்கிறது. தினம் தோறும் ஒவ்வோர் ஆராய்ச்சி முடிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. எதுவுமே புகை பிடித்தல் நல்லது என்று சொல்லாத போதும் புகை பிடித்தல் பழக்கம் ஒழியவில்லை என்பது கண்கூடு.

சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு முடிவு புகைக்கு அடிமையாகும் பழக்கத்தின் வேர்களை வெளிச்சப்படுத்தியிருக்கிறது. புகை பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் இருப்பதில்லை என்பதும், புகை பிடித்துப் பார்த்தவர்கள் அனைவரும் புகைக்கு அடிமையாவதில்லை என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது.

முதன் முதலாக புகை பிடிக்கும்போது புகை நமது மூளையில் ஏற்படுத்தும் மாற்றங்களே நாம் புகைக்கு அடிமை ஆவோமா இல்லையா என்பதை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதே சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி.

பதின் வயதுகளில் திருட்டுத் தனமாக புகை இழுத்துப் பார்க்கும் போது யார் மிகவும் ஓய்வாகவும், இன்பமாகவும் உணர்கிறார்களோ அவர்களே புகைக்கு அடிமையாவதாக இந்த ஆராய்ச்சி சொல்கிறது.

மூளையில் பரவும் நிக்கோட்டின் புகை எல்லோருடைய மூளையிலும் ஒரே போன்ற மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. சிலருக்கு அது எந்த மாற்றத்தையும் செய்யாமல், சிலரிடம் அதிகப்படியான மாற்றத்தை நிகழ்த்தி விடுகிறது. இதனால் தான் முதன் முறையாக புகை பிடிக்கும்போது வரும் உணர்ச்சிகள் கலவையாக உள்ளன.

இந்த முதல் முயற்சி தரும் கிளர்ச்சியே பிற்காலத்தில் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு நாம் அடிமை ஆவோமா இல்லையா என்பதை நிர்ணயிக்கின்றன.

இந்த கிளர்ச்சி கிடைத்தால் மூளை மீண்டும் மீண்டும் அந்த கிளர்ச்சியை எதிர்நோக்க ஆரம்பித்து விடுகிறது. நமது செயல்பாடுகளின் பின்னணியில் இருக்கும் மூளையின் நேரடி கட்டளைகள் அந்த கிளர்ச்சி சுகத்தை மனக்கண்ணில் அடிக்கடி நிகழ்த்திக் காட்டி புகைக்கு அடிமையாக்கி விடுகிறது.

சிறு வயதில் குழந்தைகள் புகை பிடித்தலை விளையாட்டாகக் கூட முயற்சித்துப் பார்க்கக் கூடாது என்பதற்கான முக்கியமான காரணம் என இதைக் கொள்ளலாம்.

புகை பிடித்தல் தனி மனிதனை மட்டுமன்றி சமூகத்தையும் பாதிக்கிறது என்பதும் நமக்குத் தெரிந்ததே. சீனாவில் மட்டுமே இருபது இலட்சம் பேர் புகை பாதித்து மரணமடையும் வாய்ப்பு இருக்கிறதாம். இதில் உள்ள அதிர்ச்சி கலந்த உண்மை என்னவெனில் இவர்களில் யாருமே புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அல்ல என்பது தான்.

அதாவது நம்மைச் சுற்றி உலவும் சிகரெட் புகையினால் புகை பிடிக்காதவர்களும் கூட சிறிது சிறிதாக பாதிப்படைகிறார்கள். நாளடைவில் இவர்களுக்கும் புகை பிடிப்பவர்களுக்கு வரக்கூடைய பெரிய நோய்கள் வந்து மரணமடையும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.

வாரத்துக்கு நாற்பது மணி நேரம் சிகரெட் புகை உலவும் இடங்களில் இருப்பவர்கள், தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் அத்தகைய ஒரு சூழலில் இருக்க நேர்ந்தால் அவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் உட்பட பல நோய்கள் தாக்குகின்றன.

புகை பழக்கத்துக்கு அடிமையான பலர் பிற்காலத்தில் அதிலிருந்து விடுபட புகையிலை மெல்லும் பழக்கத்துக்குத் தாவி விடுகின்றனர். அது புகை பிடிப்பதை விட அதிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என நியூயார்க் ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

புகை பிடித்தலின் தீமைகளும், அதை விலக்கும், தவிர்க்கும் முறைகளும் அனைவருக்கும் தெரிந்திருந்தும் அது குறித்த விழிப்புணர்வை பல வேளைகளில் இளைய தலைமுறையினருக்கு நாம் ஏற்படுத்துவதில்லை. ஊடகங்களின் மலினமான பிரச்சாரங்களை மீறி நமது சமூகத்தைக் காக்கும் கடமை நமக்கு உண்டு என்பதை உணர்ந்து விழிப்புடன் செயல்படுதல் அவசியம்

Advertisements

5 comments on “புகைக்கு ஏன் அடிமையாகிறோம் ?

  1. நீங்கள் எழுதியிருப்பது முற்றிலும் உண்மை.புகைபிடிப்பவர்கள் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் அவர்களை தொடர்ந்து புகைக்கு அடிமையாக ஆக்குகின்றன.அடிமை ஆவது என்பது ஒரு நோய்தான்!ஆனால் புகை அவர்களை விட பக்கத்திலிருப்பவர்களை அதிகமாகப் பாதிக்கிறது என்று பல புத்தகங்களில் பல முறை பலர் எழுதியும் புகை பிடிப்பவர்கள் தங்களை மற்றிக் கொள்வதாக தெரியவில்லை. நீங்கள் சொல்வது போல் புகையிலைக்குத் தாவுகிறவர்களும் இருக்கிறார்கள்.
    இதையெல்லாம் விட முக்கியமான ஒரு கருத்து மது அருந்துவதும் அளவுக்கு மீறினால்
    அதுவும் ஒரு நோய்தான். புகை பிடிப்பதைப்போலவே முளையில் ஏற்படும் ரசாயன மாறுதல் காரணமாகத்தான் மதுவுக்கும் மனிதன் அடிமையாகிறான். எல்லோரும் அடிமை ஆவதில்லை. யார் அவார்கள் என்பதற்கு ஒரு வரைமுறை இல்லை.எனவே இந்த மாதிரி பழக்கங்களை சகஜமாக ஆக்காமல் இருப்பதுதான் சாலச்சிறந்தது.

    Like

  2. புகை உடலுக்குப் பகை. ரிலாக்சேஷன் என்ற பெயரில் புகைக்க ஆரம்பிக்கும் நாம் கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு அடிமையாகி விடுகிறோம். அதனால் விளையும் தீமைகள் தெரியாமல் அல்லது தெரிந்துமே புகைக்கிறோம். அரசு வருமானத்தைப் பார்க்காமல் புகையை அறவே ஒழிக்க வேண்டும்.

    Like

  3. so vijay,sharuk,rajini etc were felt great (calm,pleasant)while smoking?.good social service throug media. in spreading calm pleasant!

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s