இணையத்தில் தகவல் தேடுவோர் கவனத்திற்கு…

lap.jpg
கணினி என்பது ஆராய்சிகளுக்கும், அலுவலகங்களுக்கும் என்ற நிலை மாறி இன்று வீடுதோறும் ஓர் செல்லப் பிராணி போல இடம்பெற்றிருக்கிறது. இணையத்தின் பயன்பாடு வந்தபின் கணினி என்பது அன்றாட வாழ்வின் தேவைகளுக்கானவை என்னும் நிலை உருவாகியிருக்கிறது. மின்னஞ்சல்கள் அரட்டைகள் என தொடர்புகளுக்குப் பயன்படும் கணினி, தகவல் களஞ்சியமாகவும் பயன்பட்டு வருகிறது என்பது யாவரும் அறிந்ததே.

எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் இணையம் பல்வேறு தகவல்களை அளித்து வருகிறது. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க மாறுபட்ட தகவல்களும், முரண்பட்ட விளக்கங்களும் இணையத்தை ஆக்கிரமித்திருக்கின்றன.

இணையத்தின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் கட்டுரைகளுக்கு இருக்கக் கூடிய நம்பகத் தன்மை கேள்விக்குரியதாகவே இருக்கிறது. இதன் முக்கியமான காரணம் யார் வேண்டுமானாலும் இணையத்தில் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்னும் நிலையே.

விளம்பரத்துக்காகவும், வியாபாரத்துக்காகவும் தகவல்களை திரித்தும், சாதகப்படுத்தியும் இணையத்தில் வருகின்ற தகவல்களை ஆராய்ந்து சரிபார்க்கும் பணியும் இப்போது தகவல் தேடுவோருக்கு இருக்கிறது. நாம் பார்க்கும் இணைய தளம் நம்பகமானது தானா, இதில் குறிப்பிட்டுள்ளவை நடுநிலையோடு தான் குறிப்பிடப்பட்டிருக்கின்றனவா என்பதை ஆராயாமல் தகவல்களைப் பயன்படுத்துவது ஆபத்தில் முடியலாம்.

அதிலும் குறிப்பாக மருத்துவம் சார்ந்த தகவல்களைப் படிக்கும் போது அதிக பட்ச கவனம் தேவை.

1. யார் தளத்தை நடத்துவது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உலக நலவாழ்வு நிறுவனம், போன்ற அமைப்புகளெல்லாம்
தன்னுடைய தளத்தின் எல்லா பக்கங்களிலும் அதன் முத்திரை, காப்புரிமை, போன்ற விவரங்களைக் குறிப்பிட்டிருக்கும்.

2. தளத்திற்கு யார் பொருளாதார உதவிகள் செய்கின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும். .gov என முடியும் தளங்கள் அரசு நடத்தும்
தளங்கள், .edu தளங்கள் கல்வி தொடர்பானவை. இப்படிப்பட்ட தகவல்களை கவனிக்க வேண்டும். ஏதேனும் பிரபல நிறுவனம் நடத்தும்
தளமெனில் அந்த நிறுவனத்தின் பொருட்களின் தரம் மிகைப்படுத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்.

3. தளத்தின் நோக்கம் பெரும்பாலும் “எங்களைப் பற்றி” எனும் இடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த பக்கத்தில் தளத்தின் நோக்கம்
குறித்து தகவல்கள் கிடைக்கலாம். இங்கே கிடைக்கும் தகவல்களை முழுமையாக நம்பிவிட வேண்டுமென்பதில்லை. பெரும்பாலும்
இந்த இடங்களில் நேர்மையான முகம் மாட்டப்பட்டிருப்பதில்லை.

4. தகவல்களின் “மூலம்” தரப்பட்டிருக்கின்றனவா என்பதை கவனிக்க வேண்டும். அந்த தகவல் அளித்திருப்பவர் குறித்த தகவல்கள்
தரப்பட்டுள்ளனவா என்பதையும், வேறு தளத்திலிருந்தோ பத்திரிகையிலிருந்தோ எடுக்கப்பட்டிருந்தால் அதுகுறித்த விவரங்களோ,
இணைப்புகளோ தரப்பட்டிருக்கின்றனவா என்பதைப் பார்க்க வேண்டும்.

5. தகவல்கள் உண்மையானவை என்பதை நம்புவதற்குத் தேவையான சான்றுகள் இருக்கின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும்.
மருத்துவ ஆராய்ச்சிகள், அறிக்கைகள் போன்றவற்றுக்கான சான்று, ஆதாரம் தரப்பட்டிருக்கின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும்.

6. இந்த தகவல்களைத் தந்திருப்பவர்கள் அந்தந்த துறையில் திறமையானவர்கள் தானா என்பதைக் குறித்த புரிதல் இருப்பதும் அவசியம்.

7. இணையம் தகவல்களின் குவியலாக இருப்பதால் பல பழைய காலாவதியாகிப் போன தகவல்களும் காணக் கிடைக்கும். எனவே படிக்கும்
தகவல் எப்போதைய தகவல் என்பதைக் கவனிக்க வேண்டியது மிக மிக அவசியம். சமீபத்திய தகவல்களைச் சார்ந்திருப்பதே மாறிவரும்
சூழலுக்கு ஏற்றதாக அமையும்.

8. அந்த தளத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் சார்புடையவையா என்பதை அறிய வேண்டும். அதற்கு அந்த தளத்தில்
இணைக்கப்பட்டிருக்கும் உரல்கள் ஒருவிதத்தில் உதவும். பெரும்பாலான மருத்துவ பக்கங்களில் இன்னோர் பக்கத்துக்கு இணைப்பு
வழங்குவதில்லை. இணைப்புகள் பெரும்பாலும் விளம்பர உத்திகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

9. பயன்பாட்டாளரிடமிருந்து தளம் எத்தகைய தகவல்களை வாங்குகிறது என்பதிலிருந்தும் தளத்தின் நோக்கம் பல வேளைகளில் புரிய
வரலாம். தனிப்பட்ட தகவல்களை நம்பகமற்ற தகவல்களில் அளிக்க வேண்டாம். அவை விளம்பர நோக்கத்துக்கானவை என்பதில்
சந்தேகமில்லை.

10. தளத்திலுள்ள கேள்வி – பதில் பக்கங்கள், உரையாடல்கள் போன்றவையும் தளத்தைக் குறித்த பல தகவல்களைத் தரக் கூடும். அத்தகைய
வசதி இருந்தால் சில நாட்கள் அந்த தளத்தைத் தொடர்ந்து கவனித்து வந்தாலே தளத்தின் தன்மை புரிந்து விடும்.

இவற்றைக் கவனத்தில் கொண்டால் நாம் ஒரு இணைய அன்னப் பறவையாகி நல்லவற்றைப் பிரித்தெடுக்க முடியும் என்பது நிஜம். எனவே மாறிவரும் வாழ்க்கைச் சூழலை அர்த்தமுள்ளதாக்கவும், அவசரமாய் இறங்கி நிதானமாய் வருந்துவதைத் தவிர்க்கவும், இணையத்தைப் பயன்படுத்தும் போது அதிக கவனத்துடன் இருத்தல் அவசியம்

பின் குறிப்பு :- இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டிய செயல்கள் தெரிந்திருந்தால், பகிர்ந்து கொள்ளுங்கள்.

10 comments on “இணையத்தில் தகவல் தேடுவோர் கவனத்திற்கு…

 1. இணையத்தைப் பற்றிய எச்சரிக்கை – தேவையான ஒன்று – இன்றைய தினம் குப்பைகள் பெருகிக் கொண்டிருக்கும் இணையத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  Like

 2. Hi Saviar

  I am daily read ur website. it’s vey usefull for me and everybody,and thanks for giving more information.

  Like

 3. ///அந்த தளத்தில் இணைக்கப்பட்டிருக்கும் உரல்கள் ///

  உரல்னா என்ன? பல பேருடைய ப்ளாகில் உரல், உரல்ன்னு போட்டிருக்காங்க, ஆனா ஒருத்தரும் உலக்கை, மிக்சி, திருவை போன்ற மற்ற அரவைக் கருவிகளைப் பற்றி ஏன் எழுதவில்லை?

  புரியலை, தயவு செய்து விளக்கவும்…

  Like

 4. //Hi Saviar

  I am daily read ur website. it’s vey usefull for me and everybody,and thanks for giving more information.

  //

  மிக்க நன்றி மணி கண்டன். அடிக்கடி வாங்க 🙂 கருத்துக்களைச் சொல்லுங்க.

  Like

 5. //உரல்னா என்ன? பல பேருடைய ப்ளாகில் உரல், உரல்ன்னு போட்டிருக்காங்க, ஆனா ஒருத்தரும் உலக்கை, மிக்சி, திருவை போன்ற மற்ற அரவைக் கருவிகளைப் பற்றி ஏன் எழுதவில்லை?

  //

  ம்ம்ம்… இதை விளக்க பெரிய இலக்கிய வாதிகள் யாராவது வருவாங்க.. கொஞ்சம் காத்திருங்க 😉

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s