கடந்த இரண்டு மூன்று நாட்களாக எந்த ஆங்கில நியூஸ் சானலை திருப்பினாலும் இந்திய இளைஞர்களின் கோபமான பேச்சுகளும், பேட்டிகளும், நேர்காணல்களும் என அல்லோலகல்லோலப் பட்டுப் போனது கிரிக்கெட் விவகாரம்.
ஸ்டீவ் பக்னர் இந்தியர்கள் விளையாடும் போது தவறான தீர்ப்புகளையே வழங்குகிறார், ஹர்பஜன் மீதான தடை நீடிக்கப் பட்டே ஆகவேண்டும் என்றெல்லாம் மின்னஞ்சலிலும், எஸ்.எம்.எஸ் களிலும் இந்தியர்கள் ஒரு சுதந்திரப் போராட்ட வேகத்தில் உரை நிகழ்த்தினார்கள்.
கிரிக்கெட், இந்தியர்களுக்கு உணவு, உடை, உறைவிடத்தை விட முக்கியமாகிப் போய் விட்டது என்பதையே கொடும்பாவி எரிப்புகளும், கோப ஆர்பாட்டங்களும் வெளிப்படுத்தின.
எங்கேயாவது இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தற்கொலை செய்து கொண்டார்களா தெரியவில்லை. தினத்தந்தி படித்தால் தான் அந்த விஷயம் தெரியும்.
நிறவெறிக்கு எதிராக கடுமையாகப் போராடும் இந்தியா இதை அனுமதிக்காது என ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தனர் எல்லா சானல்களிலும், யாரோ ஒருவர்.
இத்தனை ஆவேசப்படக் கூடிய அளவுக்கு இந்த நிகழ்வு விஸ்வரூபமெடுத்ததற்கு இந்தியா இரண்டாவது டெஸ்டில் தோற்று விட்டது என்பதே முக்கியமான காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆஸ்திரேலியர்களின் சுப்பீரியாரிடி காம்ப்ளஸ், மற்றும் கிரிக்கெட்டில் காலம் ககலமாய் நிகழ்ந்து வரும் பிரிவினை பேதங்களும் யாரும் அறியாததல்ல.
என்னதான் இருந்தாலும், ஒரு விளையாட்டில் நிகழ்ந்த இந்த சம்பவம் இவ்வளவு முக்கியத்துவப் படுத்தப்பட வேண்டியது தானா ?
நிறவெறிக்கு எதிரானவர்கள் என்று பிரகடனப் படுத்திக் கொள்வதற்காக இத்தனை பிரயர்த்தனம் செய்ய நமக்கு உண்மையிலேயே அருகதை இருக்கிறதா ?
பல்லாயிரம் மக்களை மதரீதியாகப் பழிவாங்கும் நோக்கில் கொன்று குவித்த நிகழ்வுகள் நம் கண்முன்னே நிகழ்ந்த போதோ, அதற்குக் காரணமானவர்களை பத்திரிகை ஒன்று ஆதாரத்துடன் அம்பலப் படுத்தியபோதோ ஊடகங்கள் இத்தனை ஆவேசப்பட்டனவா ?
பழங்குடியினருக்கு எதிராகவோ, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகவே நடக்கும் வர்க்கபேத போராட்டங்களை முழுக்க முழுக்க ஓர் சமூக அக்கறையுடன் ஊடகங்கள் முழங்கியிருக்கின்றனவா ?
இன்றும் கூட நிகழும் ஆலய எரிப்புப் போராட்டங்களையும், அதை நியாயப்படுத்தும் அறிக்கைகளையும் இந்த ஊடகங்கள் நடுநிலையோடு விமர்சிக்கின்றனவா ? அல்லது அலசுகின்றனவா ?
ஒரு கிரிக்கெட் விளையாட்டுக்கோ, ஷில்பா ஷெட்டிக்கோ அல்லது ஐஸ்வர்யா ராயின் குடும்பத்துக்கோ மட்டுமே முக்கியத்துவம் தருவது தான் ஊடகங்களின் பணியா ?
கிரிக்கெட் விளையாட்டில் நிகழ்ந்ததால் பெரிது படுத்தப்படும் இந்த சம்பவம் வேறு விளையாட்டுகளில் நிகழ்ந்திருந்தால் ஒரு சிறு பெட்டிச் செய்தியோடு தானே முடிந்து போயிருக்கும்.
வர்த்தகத்தைத் தாண்டி எதையும் சிந்திக்காத ஊடகங்கள் இருக்கும் வரை இந்த நிலை மாறும் என்று சொல்ல முடியாது.
போராட்டங்களின் மூலமாக இந்தியா புனிதமான கைகளைக் கொண்டிருக்கிறது என்று உலகிற்குச் சொல்வதாக ஊடகங்கள் நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் இப்படிச் சொல்ல நமக்குத் தகுதி இருக்கிறதா?. ஊடகங்கள் மேல் நோக்கியே பார்க்காமல் சற்று கீழ்நோக்கியும் பார்த்தல் நலம்.
கடைசியில் கிரிக்கெட் விளையாட்டிலும் பணம் தான் விளையாடப் போகிறது. இந்தியா விளையாடாது என்று அறிவித்தால் அந்த நஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல.
எனவே இந்தியா விளையாடும், ஐசிசியோ, பிசிசியோ எதுவாய் இருந்தாலும் கடைசியில் எடுக்கும் முடிவு விளையாட்டைத் தொடர்வதாகவே இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. காரணம் விளையாட்டின் மீது நீங்களோ நானோ கொண்டிருக்கும் ஆர்வமல்ல.
பணம் ! வியாபாரம். அவ்வளவே !!!
//ஒரு கிரிக்கெட் விளையாட்டுக்கோ, ஷில்பா ஷெட்டிக்கோ அல்லது ஐஸ்வர்யா ராயின் குடும்பத்துக்கோ மட்டுமே முக்கியத்துவம் தருவது தான் ஊடகங்களின் பணியா ? //
பின்னே எப்படி சிந்தனையை மழுங்கடிப்பதாம்???
//வர்த்தகத்தைத் தாண்டி//
வர்த்தகத்தை தாண்டி மட்டுமல்ல… தனது வர்க்கத்தையும் (வர்க்க பாசம்)
//பல்லாயிரம் மக்களை மதரீதியாகப் பழிவாங்கும் நோக்கில் கொன்று குவித்த நிகழ்வுகள் நம் கண்முன்னே நிகழ்ந்த போதோ, அதற்குக் காரணமானவர்களை பத்திரிகை ஒன்று ஆதாரத்துடன் அம்பலப் படுத்தியபோதோ ஊடகங்கள் இத்தனை ஆவேசப்பட்டனவா ?//
இதையும் படியுங்கள்
http://poar-parai.blogspot.com/2008/01/blog-post.html
LikeLike
Hot news is the matter at the end!!!!…..
ithu Hockiyla nadantha kooda yaarum kavanichuruka maatanga
LikeLike
Good “Alasal”. For that matter in the present day world evertyhing is money!
LikeLike
ட்வென்டி-ட்வென்டி மேட்ச்சில் இந்தியா வென்று நாடு திரும்பியபோது ந்டந்த வரவேற்பைப் பார்த்தே நான் “கிரிக்கெட் விளையாட்டா வியாபாரமா” என்று எழுதினேன். பாருங்கள்.
சகாதேவன்.
LikeLike
நியாயமான கேள்விகள்..
இப்படிலாம் கேள்விகேட்டா ‘நாங்க’ மாறுவோம்மா என்ன?
/கடைசியில் கிரிக்கெட் விளையாட்டிலும் பணம் தான் விளையாடப் போகிறது. /
இது எத்தனைபேருக்கு புரியுது..
என்னமோ.. போங்க…. ;((
LikeLike
ம்ம்ம்ம் நல்லதொரு பதிவு. ஆனால் தங்களின் ஆதங்கம் புரிகிறது. இப்பதிவு எம்மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது திண்ணம். என்ன செய்வது.
LikeLike
Pingback: கிரிக்கெட் வார்த்தைப் போர் : ஒரு அலசல் « அலசல்