வைட்டமின் D யும், மாரடைப்பும்

fish.jpg

வைட்டமின் அளவு குறைவாய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பும், இதயம் தொடர்பான பிற நோய்கள் வரும் வாய்ப்பும் இரண்டு மடங்கு அதிகரிப்பதாக அமெரிக்க ஆராய்ச்சி முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

எலும்புகளுக்கு வலுவூட்டும் பணியை முதன்மையாய்ச் செய்யும் வைட்டமின் டி குறைவுபடும் போது பலவிதமான பாதிப்புகள் உடலில் ஏற்படுகின்றன என்பதையும் அந்த உயிர்ச்சத்து தேவையான அளவு இருந்தால் பலவிதமான நன்மைகள் உடலில் ஏற்படுகின்றன என்பதையும் ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்தியிருந்தன.

சூரிய ஒளியில் நிறைந்திருக்கும் வைட்டமின் டி சத்து உடல் முதுமையடைவதை தாமதப்படுத்தும் என லண்டன் ஆராய்ச்சி ஒன்று சில மாதங்களுக்கு முன்னால் தெரிவித்திருந்தது.

வைட்டமின் டி சத்து தேவையான அளவுக்கு இருந்தால் நுரையீரலுக்கு மிகவும் நல்லது எனும் ஆராய்ச்சி முடிவு சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளியியாகியிருந்தது. அல்சீமர் போன்ற ஞாபக மறதி நோய்களுக்கும் வைட்டமின் டி க்கும் கூட தொடர்பு உண்டு என்பதையும் ஆராய்ச்சிகள் குறிப்பிட்டிருந்ததன்.

வைட்டமின் டி குறைபாடு ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு முறிவு நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் புற்று நோய் போன்றவை வரும் வாய்ப்பை அதிகரிக்கிறது எனும் ஆராய்ச்சி கவனிக்கத் தக்கது.

தற்போது வைட்டமின் டி குறைபாடு மாரடைப்பு போன்ற நோய்களுக்குக் கூட காரணமாகிறது எனும் ஆராய்ச்சி வெளிவந்திருக்கிறது. இது வைட்டமின் டியின் தேவையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறது.

மீன், மீன் எண்ணை, முட்டை, பால் போன்றவற்றில் வைட்டமின் டி உள்ளது என்பதும், அதிகாலை வெயிலில் நனைந்தாலே தேவையான அளவு வைட்டமின் டி கிடைக்கும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரை.

பொழச்சு போங்க மிஸ்டர். Hogg

hogg.jpg

Hogg :- ஏம்பா கும்ளே.. எதுக்கு என்மேல குடுத்த கம்ப்ளெயிண்டை வாபஸ் வாங்கினே.

kumble :- அட போப்பா.. இந்த இண்டர்நெட் காரங்க தொல்லை தாங்க முடியல. சைமண்ட்ஸ் சை ஒரு குரங்காவே மாத்திட்டாங்க. இப்போ
எங்களை நீ என்ன திட்டினேன்னு வெளியே சொன்னா, எங்க நிலம தான் ரொம்ப மோசம். நீ பாட்டுக்கு 3 மேட்ஸ் ரெஸ்ட்
எடுத்துட்டு போயிடுவே. இதுக்கு வாபஸ் வாங்கறது பெட்டர்.

நீண்ட ஆயுளுக்கு 4 செயல்கள் !

veg.jpg

நான்கு விஷயங்களை வாழ்நாளில் கடைபிடித்து வாழ்ந்தால் ஆயுளில் பதினான்கு ஆண்டுகளை அதிகப்படுத்த முடியும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.

சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை ஈடுபடுத்தி, பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று இந்த முடிவை எட்டியிருக்கிறது.

அதென்ன நான்கு விஷயங்கள் ?

1. புகை பிடித்தலை விலக்குதல்
2. மதுவை வெகுவாகக் குறைத்தல் ( அதிகபட்சம் வாரம் 7 கப் வைன்)
3. தினமும் அரை மணி நேர உடற்பயிற்சி
4. பழவகைகள், காய்கறிகள் இணைந்த உணவுப் பழக்கம்.

இந்த நான்கு செயல்களையும் கடைபிடித்தால் இதய நோய்களோ, புற்று நோய் போன்ற அச்சுறுத்தல்களோ இல்லாமல் முதுமையை அனுபவிக்க முடியும் எனவும், ஆயுளில் பதினான்கு ஆண்டு வரை

அதிகரிக்கும் எனவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உடல் குண்டாகவோ, ஒல்லியாகவோ இருப்பதற்கும் ஆயுளுக்கும் சம்பந்தம் இல்லை எனவும், இந்த நான்கு செயல்களையும் கடைபிடித்து வாழ்ந்தாலே ஆயுள் அதிகரிக்கும் எனவும் கூறி அதே ஆய்வு

வியக்க வைக்கிறது.

புகை பிடித்தல், மது அருந்துதல் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் இந்த நான்கு செயல்களும் இணையும் போது ஆயுள் ஆரோக்கியமாய்

அதிகரிக்கும் என்பது புதிதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நம்முடைய ஆரோக்கியத்திற்கும், ஆயுளுக்கும் நாமே பொறுப்பாளி என்பதையே இந்த ஆய்வு முடிவும் உரக்கச் சொல்கிறது.