நீண்ட ஆயுளுக்கு 4 செயல்கள் !

veg.jpg

நான்கு விஷயங்களை வாழ்நாளில் கடைபிடித்து வாழ்ந்தால் ஆயுளில் பதினான்கு ஆண்டுகளை அதிகப்படுத்த முடியும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.

சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை ஈடுபடுத்தி, பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று இந்த முடிவை எட்டியிருக்கிறது.

அதென்ன நான்கு விஷயங்கள் ?

1. புகை பிடித்தலை விலக்குதல்
2. மதுவை வெகுவாகக் குறைத்தல் ( அதிகபட்சம் வாரம் 7 கப் வைன்)
3. தினமும் அரை மணி நேர உடற்பயிற்சி
4. பழவகைகள், காய்கறிகள் இணைந்த உணவுப் பழக்கம்.

இந்த நான்கு செயல்களையும் கடைபிடித்தால் இதய நோய்களோ, புற்று நோய் போன்ற அச்சுறுத்தல்களோ இல்லாமல் முதுமையை அனுபவிக்க முடியும் எனவும், ஆயுளில் பதினான்கு ஆண்டு வரை

அதிகரிக்கும் எனவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உடல் குண்டாகவோ, ஒல்லியாகவோ இருப்பதற்கும் ஆயுளுக்கும் சம்பந்தம் இல்லை எனவும், இந்த நான்கு செயல்களையும் கடைபிடித்து வாழ்ந்தாலே ஆயுள் அதிகரிக்கும் எனவும் கூறி அதே ஆய்வு

வியக்க வைக்கிறது.

புகை பிடித்தல், மது அருந்துதல் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் இந்த நான்கு செயல்களும் இணையும் போது ஆயுள் ஆரோக்கியமாய்

அதிகரிக்கும் என்பது புதிதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நம்முடைய ஆரோக்கியத்திற்கும், ஆயுளுக்கும் நாமே பொறுப்பாளி என்பதையே இந்த ஆய்வு முடிவும் உரக்கச் சொல்கிறது.

Advertisements

8 comments on “நீண்ட ஆயுளுக்கு 4 செயல்கள் !

 1. இரசிய‌த்தைச் சொல்லிட்டிங்க இல்ல! இனிமே நூறுவயசு வாழ முழு மூச்சா முயற்சி செய்யப்போறேன்.
  சரிதானே?
  கமலா

  Like

 2. //kavntamani ketamaathri keata
  “ithellaam pannam ennathuku 14 varusham kooda vaaznthutu….”//

  உங்க நகைச்சுவை உணர்வை ரொம்பவே ரசிக்கிறேன் பாஸ்… 🙂

  Like

 3. //ஆயுளில் பதினான்கு ஆண்டு வரை
  அதிகரிக்கும் எனவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.//

  ஆயுள் தண்டனையா ?? 14 ஆண்டுகள் அதிகம் வாழ வேண்டுமா ?? 60க்கு மேல் போனஸ் தானே

  Like

 4. //1.புகை பிடித்தலை விலக்குதல்
  2. மதுவை வெகுவாகக் குறைத்தல் ( அதிகபட்சம் வாரம் 7 கப் வைன்)
  3. தினமும் அரை மணி நேர உடற்பயிற்சி
  4. பழவகைகள், காய்கறிகள் இணைந்த உணவுப் பழக்கம்.//

  நான்குமே மிக எளிதாக கடை பிடிக்கக்கூடியவை தான். என்ன மனக்கட்டுப்பாடு வேண்டும். அவ்வளவுதான்

  Like

 5. You have done a great service by writing about this reserach project. What caught my attention was, the body size does not matter, so long as one follows the four habits. The present obsession is to eat less and less and stay thin, without realising the effects of balanced diet.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s