ரஜினியின் குசேலர் vs கத பறயும் போள்

katha.jpg

‘கத பறயும் போள்’ படத்தை வாசுவின் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது முதல் ‘கத பறயும் போள்’ டி.வி.டி கிடைக்குமா என்று மக்கள் கடைகளில் குவிவதாகச் சொன்னார் சென்னையில் டி.வி.டி வாடகை கடை வைத்திருக்கும் நண்பர் ஒருவர்.

கண்டிப்பாக இணையத்திலும் தேடல்கள் அதிகரித்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஸ்ரீனிவாசன் எனக்கு மிகவும் பிடித்த மலையாள திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர். குறிப்பாக ‘சிந்தாவிஷயமாய ஷியாமளா’ போன்ற படங்களில் அவருடைய திரைக்கதை வெகு அழகாக வெளிப்பட்டிருக்கும். இதைத்தான் தங்கர் பச்சான் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்று எடுத்தார்.

அழகிய ராவணம் படம் கூட அவருடைய திரைக்கதை என்பது போல ஒரு ஞாபகம்.

மணிச்சித்திரத் தாழ் படத்தை படம் வெளியான காலத்திலேயே பல முறை பார்த்திருக்கிறேன். சந்திரமுகியில் வாசுசெய்த செரித்துக் கொள்ள முடியாத மாற்றங்களையும். அதை விட கொடுமை ‘தேன் மாவின் கொம்பத்து’ படத்தை முத்துவாக எடுத்த போது நேர்ந்தது.

என்னுடைய நண்பர்கள் சிலர் இது தேன்மாவின் கொம்பத்து திரைப்படம் என்று சத்தியம் செய்த போது கூட நம்பவில்லை என்பது வேறு விஷயம்.

கதை சொல்லும் போது (கத பறயும் போள் ) கதை என்ன ?

முடிதிருத்தும் கடை வைத்திருக்கும் – ஸ்ரீனிவாசன் ஏழ்மை நிலையிலும் தன்னுடைய தேவைக்காக யாரையும் எதிர்பார்க்காதவன். நேர்மையானவன். தாழ்வு மனப்பான்மை கொண்ட அவன் தன்னுடைய மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் இவர்களுடைய தேவைகளுக்கான பணத்தையே சம்பாதிக்க முடியாமல் தவிக்கிறான். அப்போது போதாக்குறைக்கு ஒரு மாடர்ன் முடி திருத்தகமும் அங்கே வருகிறது.

அந்தக் கிராமத்துக்கு படப்பிடிப்புக்காக வரும் சூப்பர்ஸ்டார் மம்முட்டி இவருடைய நண்பர் என்று எங்கிருந்தோ கசியும் செய்தியால் ஒரே நாளில் வி.ஐ.பி ஆகிவிடுகிறார் ஸ்ரீனிவாசன். எனினும் தன் தேவைக்காக மம்முட்டியை அணுக அவர் மறுக்கிறார்.

ஒட்டு மொத்த ஊரும் மம்முட்டியுடனான ஒரு அறிமுகத்துக்காய் இவரை அணுக, இவர் மறுக்க, அதனால் அவமானமும், நிராகரிப்புக்கும் ஆளாகிறார்.
எனினும் தன்னுடைய தாழ்வு மனப்பான்மையால் நத்தை ஓட்டுக்குள் சுருண்டு விடுகிறார்.

கடைசியில் பள்ளி ஆண்டு விழா மேடையில் பேசும் மம்முட்டி, தன்னுடைய உயர்வுக்குக் காரணம் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனக்காய், எத்தனையோ தியாகங்கள் செய்த ஸ்ரீனிவாசன் தான் என்றும், நட்பை விடப் பெரியது தனக்கு எதுவுமே இல்லை என்றும் சொல்ல, அதைத் தொடர்வது நெகிழ வைக்கும் முடிவு.

இன்னசெண்ட், ஜெகதீஷ், முகேஷ், ஸ்ரீனிவாசன் என பழம் தின்று கொட்டை போட்ட நகைச்சுவை நடிகர்களால் நிறைந்திருக்கும் படம் நகைச்சுவைக்கு அதிக பட்ச உத்தரவாதம். (வடிவேலுவை தமிழில் எதிர்பார்க்கலாம் ? ) இறுதிக்காட்சிகள் நெகிழ்ச்சிக்கும்.

ஆனால் தமிழ்ல் இயக்கப் போவது வாசு அல்லவா ! எனவே கத பறயும் போள் படத்தைப் பார்த்தாலும் ‘குசேலர்’ அதே போல இருக்கப் போவதில்லை என்பது சர்வ நிச்சயம். அதிலும் திரைக்கதையை மாற்றப் போகிறேன் என்று அவர் சொல்லி விட்ட பின் 🙂

23 comments on “ரஜினியின் குசேலர் vs கத பறயும் போள்

  1. mmm மொழி மாற்றம் செய்யும் போது சிலவற்றை நமக்குத் தகுந்தாற்போல் மாற்றம் செய்வது நல்லது தான். தவறில்லை. மூலக்கதையின் அடிப்படைக் கருத்து மாறாமல் இருந்தால் சரி

    Like

  2. Well I am really worried about Pee-Pee Vasu’s another malayalam remake movie with Rajini as Vasu IS COMMITTED in murdering every classic in Malayalam!! (Already there are news items talking about a possible “lengthening” of Rajini’s role with a heroine etc., to cater(!?!) for Tamil audiences – HOW INSULTING! That’s the respect Rajini and Vasu have for the average Tamil cinema audience!! Hail them!!!

    Like

  3. // Already there are news items talking about a possible “lengthening” of Rajini’s role with a heroine etc., to cater //

    நாம் வேண்டாவிடினும் இவ்வகையான ஊடுருவல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. கருத்துள்ள திரைப்படங்களா அல்லது இவ்வகையான திரைப்படங்களா என்ற கேள்வி எழும் போது ஏனோ ரசிகனின் மேல் பழியை போட்டு(ரசிகன் எதிர்பார்ப்பது பொழுதுபோக்கை மட்டுமே என்கிற ரீதியில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் திரைப்பட இயக்குனர்கள்/நடிகர்களின் கருத்துக்கள்) இவை சுலபமாக வெல்கின்றன. தமிழ் திரைப்பட உலகத்தில் இந்த நிலை என்று மாறுமோ 😦

    Like

  4. ஏதேனும் ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்க்கும் போது, இந்தப்படத்தை நம் மொழியில் எடுத்தால் எப்படி இருக்கும் என்று நமக்கே கற்பனைகள் வரும்போது, இயக்குனர்களுக்கும், பெரும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இந்த நினைப்பு வருவது தவறில்லையே! மலையாளத் திரைப்படம் அவ்வளவு நன்றாக இருக்கும்போது, அதை அப்படியே தமிழில் எடுப்பதிலும் சிக்கல் இருக்கிறது. அப்போதும் வாசு பிரச்சினைக்கு ஆளாகிறார்-அப்படியே எடுத்து விட்டார் என்று. பாவம் அவரும், சொந்தச் சரக்கு தீர்ந்துபோனபின், இப்படித்தான் மற்றோரின் கதையை எடுத்து, கதாநாயகர்களுக்கும், தயாரிப்பு நிறுவனங்களுக்கும் தகுந்தாற்போல் மாற்ற வேண்டியிருக்கிறது.

    Like

  5. நண்பர் லோகேஷ்’க்கு, நான் அங்ஙனம் கூற விழையவில்லை. ‘ஒரு படைப்பாளியின் படைப்பை நீங்கள் மேலும் உயர்த்த வேண்டாம், பல நேரங்களில் அது இயலாததாகவும் இருக்கிறது 😛 அதனுடைய மதிப்பை உங்களுடைய திறமையின்மையால் கெடுத்துவிடாதீரகள்’ என்பதே நான் கூற முயன்றது. அப்படி ஒரு வேளை நான் மொழி வன்மை இல்லாமையால் அவ்வாறாக வெளிப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் 🙂

    Like

  6. //mmm மொழி மாற்றம் செய்யும் போது சிலவற்றை நமக்குத் தகுந்தாற்போல் மாற்றம் செய்வது நல்லது தான்//

    “நமக்குத் தகுந்தாற்போல்” – அது எது என்பதில் தான் பிரச்சனையே 🙂

    Like

  7. //ஆனா இது ரஜினி வாழ்க்கையில நடந்த நிஜ கதைனு எங்கேயொ படித்த ஞாபகம்//

    ஓ… அப்படியா ? இருக்கலாம் !

    Like

  8. //மலையாளத் திரைப்படம் அவ்வளவு நன்றாக இருக்கும்போது, அதை அப்படியே தமிழில் எடுப்பதிலும் சிக்கல் இருக்கிறது. அப்போதும் வாசு பிரச்சினைக்கு ஆளாகிறார்-அப்படியே எடுத்து விட்டார் என்று. பாவம் அவரும், சொந்தச் சரக்கு தீர்ந்துபோனபின், இப்படித்தான் மற்றோரின் கதையை எடுத்து, கதாநாயகர்களுக்கும், தயாரிப்பு நிறுவனங்களுக்கும் தகுந்தாற்போல் மாற்ற வேண்டியிருக்கிறது.
    //

    உண்மை தான். “அப்படியே எடுப்பது” நிச்சயம் உதவாது. குறிப்பாக இந்த படத்தில் கூட ஒளிப்பதிவு, லொக்கேஷன் என பல இடங்களில் கற்கால வாசனை. தமிழில் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். எனக்குத் தெரிந்த வரை பாசில் ஒரு திறமையான இயக்குனர், அவருடைய படங்களையே தமிழில் எடுக்கும் போது அதற்குரிய தேவையான மாற்றங்களை மட்டும் செய்கிறார்.

    சில உதாரணங்கள்

    அனியத்தி ப்றாவு = > காதலுக்கு மரியாதை
    தாளவட்டம் => மனசுக்குள் மத்தாப்பு

    Like

  9. //(ரசிகன் எதிர்பார்ப்பது பொழுதுபோக்கை மட்டுமே என்கிற ரீதியில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் திரைப்பட இயக்குனர்கள்/நடிகர்களின் கருத்துக்கள்) //

    பெரும்பாலான ரசிகர்கள் விரும்புவது பொழுதுபோக்கு திரைப்படங்களைத் தான். ஆனால் “பொழுதுபோக்கு” என்பதற்கு ஒவ்வொரு இயக்குனர்களும் வைத்திருக்கும் இலக்கணங்கள் தான் ரசிகன் நினைத்துக் கூட பார்க்காததாய் இருக்கிறது 🙂

    Like

  10. Hello!

    I am not saying that there should be no re-makes but when remaking a movie one should be faithful to the original.

    Have a look at our tamil “Chandramukhi” and “Manichitrathazu” – the malayalam original. Now, don’t you agree that Jothika SHOULD see Prabu as VETTAIYAN and NOT Rajini!! It’s totally because Pee-Pee Vasu did not understand the malayalam original at all!!! (Please do understand that I am not a fan of Prabu (enna kodumai sir-ithu!!) but just pointing out that there’s no logic or reason for Jothika’s character seeing Rajini as Vettaiyan!! That’s all!! (yeah, yeah I know about Rajini fans getting upset and all that – but even they would agree that Chandramukhi do not belong to Saravanan (Rajini)but belongs to Chandramukhi (Jothika)!!

    Like

  11. Pingback: கில்லி - Gilli » Blog Archive » Rajni’s Kuselan and Katha Parayumbol - Xavier

  12. Dear People,

    I still dont recognize vasu as a good creator. I dont want to use the word director as it involves trades other than creativity. Chandramukhi was a night mare, when compared to ‘Manichitrathazhu’ and the sole reason is this guy, who screwed up every inch of that ‘cinema’. Priyadarshan did the same thing to this movie in its hindi version. I am the most unfortunate to see this movie in all 4 langauages, including the original master piece. shobana, lighting and camera rocks in the original. Kannada version is another horror in its own style. Why do they want to screw up things to this extent, I really dont understand. But, its our fate. Though my comments are only specific to Vasu, there are other geniuses in the line. Utter waste.

    Cheers,
    Nokia Fan.

    Like

  13. பதிவுக்கு நன்றி.

    //ஸ்ரீனிவாசன் எனக்கு மிகவும் பிடித்த மலையாள திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர். குறிப்பாக ‘சிந்தாவிஷயமாய ஷியாமளா’ போன்ற படங்களில் அவருடைய திரைக்கதை வெகு அழகாக வெளிப்பட்டிருக்கும்//

    ஸ்ரீனிவாசனின் ‘சிந்தாவிஷ்டயாய சியாமளா’ என்கிற படமும் அவரது முதல் படமுமான ‘வடக்கு நோக்கிய யந்திரம்’ படமும் என் உள்ளம் கவர்ந்த மலையாளப் படங்கள். ‘வடக்கு நோக்கிய யந்திரம்’ படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டதா என்பதை அறிந்திலேன். ஆனால் ஸ்ரீனிவாசனின் இயக்கத்திற்கு பெரிய அளவில் கிட்டிய முதல் அங்கீகாரம் அப்படம்தான்.

    //அழகிய ராவணம் படம் கூட அவருடைய திரைக்கதை என்பது போல ஒரு ஞாபகம்//

    சந்தேகமே வேண்டாம்… ஸ்ரீநிவாசனின் எழுத்தில் வந்ததுதான் ‘அழகிய ராவணன்’ (இயக்கம்: கமல்).

    //ஆனால் தமிழ்ல் இயக்கப் போவது வாசு அல்லவா ! எனவே கத பறயும் போள் படத்தைப் பார்த்தாலும் ‘குசேலர்’ அதே போல இருக்கப் போவதில்லை என்பது சர்வ நிச்சயம். அதிலும் திரைக்கதையை மாற்றப் போகிறேன் என்று அவர் சொல்லி விட்ட பின் //

    என்ன கொடுமை சார் இது!!!!

    Like

  14. மணிச்சித்ரதாழை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குக் கலைக் கொலை செய்த வாசுவிடம் மீண்டும் ஒரு சோதனை முயற்சி,என்ன சொல்றது சீனிவாசன் இப்போதே மனச தேத்திக்க வேண்டியதுதான்.ரூம் போட்டு அழ தயாரா இருங்க!

    Like

  15. //சந்தேகமே வேண்டாம்… ஸ்ரீநிவாசனின் எழுத்தில் வந்ததுதான் ‘அழகிய ராவணன்’ (இயக்கம்: கமல்). //

    நன்றி பாரதீய நவீன இளவரசன்.

    Like

  16. //சீனிவாசன் இப்போதே மனச தேத்திக்க வேண்டியதுதான்.ரூம் போட்டு அழ தயாரா இருங்க!

    ஹா..ஹா.. 🙂

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s