ஆஸ்கர் விருதுகள் அனைவருக்கும் தெரியும். ஆபாசப் படங்களுக்கான ஆஸ்கர் விருது ?
கடந்த வார இறுதியில் லாஸ் வேகசில் நடந்திருக்கிறது ஆபாச படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா. !!! ஏகப்பட்ட பார்வையாளர்களுடன்(இருக்காதா பின்னே) கோலாகலமாக நடந்திருக்கிறது விழா.
கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் தயாரான ஆபாச திரைப்படங்களின் எண்ணிக்கை 12,000! இதையெல்லாம் எப்ப பார்த்து, எப்படி பார்த்து, என்ன முடிவெடுத்தார்களோ ?
ஈவன் ஸ்டோன் என்பவர் சிறந்த நடிகருக்கான (இப்படியும் சொல்லலாமா ?) விருதைப் பெற்றிருக்கிறார். அவருக்கு வயது 43 ! ( அட.. அதுல கூட வயசானவங்க தான் சூப்பர் ஸ்டார் போல). தல சுமார் அறுநூறு – எழுநூறு படம் நடிச்ச்சு பட்டைய கிளப்பியிருக்காராம். நிறைய விருது வாங்கி அசத்தியிருக்காராம்.
கண்ணீர் மல்க மல்க சிறந்த நடிகைக்கான விருது யார் வாங்கினது என்று தெரியவில்லை
ஆபாசப் படங்களுக்காக எவ்வளவோ உழைக்கிறோம், நமது திறமை அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று நிகழ்ச்சியை நடத்தியவர் உணர்ச்சி பொங்க உரையாற்றியிருக்கிறார்.
அங்கே ‘ஆபாச’ உடை அணிந்து வந்தார் என்று யாரும் வழக்குப் பதிவு செய்ய மாட்டார்கள் என நம்பலாம்.
என்னென்ன தலைப்புகளில் விருதுகள் வழங்கப்பட்டிருக்கலாம் என்னும் கற்பனையை உங்களிடமே விட்டு விடுகிறேன்.
அடுத்த முறை ‘அந்த மாதிரி’ படம் வாங்கினால், எத்தனை ஆஸ்கர் விருது வாங்கியிருக்கிறது என்பதைப் பார்த்து வாங்குங்கள்.
🙂
உலகம்… அப்படித்தானாம்!!! 😉
LikeLike
திரு. சேவியர் அவர்களே, தங்களை ஒரு மொக்கை போட அழைத்துள்ளேன்.
விபரம் இங்கே:
http://appaavi.hikanyakumari.com/?p=134
வாங்க வந்து நம்ம ஆட்டையில் சேர்ந்துக்கோங்க 🙂
LikeLike
நன்றி மயூரேசன்.
LikeLike
//திரு. சேவியர் அவர்களே, தங்களை ஒரு மொக்கை போட அழைத்துள்ளேன்.
விபரம் இங்கே:
http://appaavi.hikanyakumari.com/?p=134//
நீங்க அப்பாவியா ? அடப்பாவியா ? தெரியாத வேலையை எல்லாம் செய்ய சொல்றீங்க 🙂 வர்றேன்.. திங்கட் கிழமை 🙂
LikeLike
ம்ம்ம் இப்படியும் ஒரு உலகம் – எப்படியும் பொழுதைக் கழிக்க ஏதாவது ஒரு வழி. என்ன செய்வது
LikeLike
🙂
LikeLike