ஒன்பது ரூபாய் நோட்டு : மாதவனாய் வாழாதே.

9a.jpg

இந்த படம் பார்க்காதவன் ஜென்ம பாவத்தையும், கர்ம பாவத்தையும் மூட்டை மூட்டையாய்க் கொண்டவன் என்று பத்திரிகைகள் விமர்சன மழை பொழிந்ததாலும்,

என்னுடைய கதையை கொஞ்சம் சுட்டு தான் நிறைய பேர் தவமாய் தவமிருந்து படங்களை எடுக்கிறார்கள் என்று தங்கர் பச்சானே மறைமுகத் தாக்குதல்கள் நடத்தியதாலும்,

ஒன்பது ரூபாய் நோட்டு பார்க்க வேண்டும் என்னும ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்த வார இறுதி அந்த குறையைத் தீர்த்து வைத்தது.

இயல்பான மனிதர்களின் இயல்பான வாழ்க்கை இயல்பாய் படமாக்கப்பட்டிருக்கிறது ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில். இதற்காக தங்கர் பச்சானுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

ஒட்டுமொத்த திரைப்படத்தை சொல்ல அவர் எடுத்துக் கொண்ட உத்தி நல்ல உத்தி. பேருந்தில் பயணிக்கும் போது கதையும் கூடவே பயணித்து முடிவது நன்றாகத் தான் இருக்கிறது.

ஆனால் திரைக்கதையிலும், காட்சி அமைப்பிலும் தங்கர் பச்சான் ரொம்பவே கோட்டை விட்டு விட்டார் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. படம் பார்த்து முக்கால் வாசி ஆன பிறகு கூட மாதவருக்கு யாராரு சொந்தம், யாரு பையன், யாரு பொண்ணு, யாரு பேரன் என்பது போன்ற குழப்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

எனக்கு தான் இப்படி போல என்று அருகில் இருந்தவரின் தோள் தொட்டுக் கேட்ட போது ‘அவரு மருமகன்’ பா என்று சொன்னார். உடனே அவருக்கு அருகில் இருந்தவர். இல்லை இல்லை அது தான் மூத்த பையன் என்று அவரைத் திருத்தினார். சரி எதுக்கும் படம் முடிஞ்சதுக்கு அப்புறம் அப்பரேட்டர் கிட்டே கேட்டு தெரிஞ்சுக்கலாம்ன்னு விட்டுட்டேன். (அவர் தானே படத்தை அத்தனை தரம் பாக்கறார் )

நல்லவனாய் இருப்பவன் அநியாயத்துக்கு நல்லவனாய் இருக்கிறான் என்னும் வரை முறையை மீறாமல் தங்கர் படம் எடுத்திருக்கிறார். எந்த விவசாயியும் தனக்கு ஒரு சாகுபடியில் கிடைக்கும் பணம் மொத்தத்தையும் யாரிடமும் அப்படியே இனாமாகக் கொடுப்பதில்லை. கதாநாயகர்கள் விதிவிலக்கு.

ஒரு வார்த்தை சொல்லி விட்டதற்காய் ஊரை விட்டே ஓடுவதும், “மனைவி தான் கடவுள்” என்று பாடல் பாடிவிட்டு, அந்த மனைவியைக் கலந்தாலோசிக்காமல் தானாகவே எல்லா முடிவுகளையும் எடுப்பதும். மனைவியின் விருப்பத்துக்கு, ஒரு தாயின் உயிர் துடிக்கும் ஏக்கத்துக்கு, அழலில் விழுந்த புழுவான அவளுடைய மன வேதனைக்கு சற்றும் மதிப்புக் கொடுக்காமல் இருப்பதும், என்று தான் தங்கரின் மாதவம் செய்த மாதவர் வாழ்கிறார்.

மகன் கஷ்டப்படுகிறான், அடி படுகிறான், பிச்சை எடுப்பது போன்ற பிழைப்பை நடத்துகிறான் என்பதை கண்ணால் காணும் போதும் கூட ஓடிச் சென்று “மகனே” என்று அழைத்து அரவணைத்து கண்ணீர் சிந்தாமல், வறட்டுப் பிடிவாதத்தில் உழலும் ஒரு மனிதனாய் தான் வாழ்கிறார் மாதவர். எந்தப் பெற்றோரும் மகன் தங்களை வெறுத்தாலும், அடித்தாலும் பிள்ளைகளின் துயரத்தைக் காண்கையில் அனைத்தையும் மறந்து தாவி ஓடுவார்கள் ஆறுதல் தர. ஆனால் தங்கரின் மாதவர் அப்படி இல்லை.

மனைவியின் துயரம், மகனின் துயரம் எல்லாம் புரிந்தும் புரியாதவராக, கிடைக்கும் பணத்தை நாசருக்குத் தவறாமல் ஒப்புவிப்பதில் மட்டும் மாதவர் சிறந்திருந்தால் போதுமா ?

தன்னுடைய மகன் ஒரு சலவைக்காரரின் மகளை விரும்புகிறார் என்று மாதவருக்குத் தெரிய வரும் போது அவர் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்து மலையளவு உயர்வார் என நினைத்தால்.. ம்ஹூம்… மாதவர் சாதாரணர். கடைசி காட்சியில் கூட மகனை, அவனுடைய இழி நிலையை துயரத்துடன் பார்த்து கடந்து போவதுடன் சரி.

மகனை எழுப்பி வாழ்க்கை என்பது உணர்வுகளில் தான் என அவனை அரவணைத்து அவனுடைய வாழ்க்கையில் சற்று ஆனந்தத்தையாவது அளிக்கவில்லை மாதவர்.

இவையெல்லாம் இல்லாமல் வெறுமனே பலா மரத்தையும், கிராமத்தின் இயல்பான சூழலையும் மட்டுமே காட்டிச் செல்லும் ஒரு திரைப்படமாகத் தான் இருக்கிறது ஒன்பது ரூபாய் நோட்டு.

வெறும் மாதவரின் நடிப்பை வைத்து படத்தை அற்புதம் என்று சொல்லிச் செல்ல முடியவில்லை. இந்தப் படத்துடன் ஒப்பிடுகையில் எனக்கு தவமாய் தவமிருந்து படம் பல மடங்கு உயர்வாய் தெரிகிறது.

தங்கர் பச்சான் ! நீங்கள் மண்ணிலிருந்து முளைத்திருக்கிறீர்கள். மண்ணின் மணத்தை கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்காமல் படம் எடுக்க விரும்புகிறீர்கள். வாழ்த்துக்கள்.

ஆனால் அந்த திரையாக்கம் சுமந்து வரும் செய்தி என்ன என்பதிலும் சற்று கவனம் செலுத்தலாமே ?

மாதவர் படையாட்சி சொல்லும் சேதி என்னவோ ? மனைவியின் உயிர் மூச்சான விருப்பங்களுக்காய் உன்னுடைய வறட்டுப் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காதே என்பதா ? பிள்ளைகள் ஒரு வார்த்தை சொல்லி விட்டார்கள் என்பதற்காக ஒரேயடியாய் தலை முழுகி ஓடி விடு என்பதா ?

கடைசியாய் ஒரே ஒரு விண்ணப்பம். அடுத்த படத்திலாவது பள்ளிக் குழந்தைகளை விட்டு விடுங்கள் பிளீஸ்.

13 comments on “ஒன்பது ரூபாய் நோட்டு : மாதவனாய் வாழாதே.

 1. மாதவனாய் வாழ்ந்தது சேவியர், ஒரு கேடம்பக்கத்து சினிமா கதையாசிரியன் அல்லவே!

  ஒரு கிராமத்தில் ஒரு சாதாரண வறட்டு கொளரவத்துடன் வாழ்ந்த ஒரு மனிதனின் கதைதான். அவனுக்கு வாழ்வியல் சார்ந்து எது சரி, எது தவறு என்று எண்ணக் கிடைக்கிறதோ அதனை அப்படியே செய்து வைக்கிறான்.

  இந்தக் கதையின் மூலமாக இரு பக்கமாகவும் கருத்தினை எடுத்துக் கொள்ளலாம் 1) பெரியவர்கள் சிறு பிரச்சினைகளுக்காக இப்படி ஒரு முடிவு எடுப்பது சரியல்ல, மற்றும் வளர்ந்து வளரும் குழந்தைகளின் தேவைகளை புரிந்து கொள்வது அவர்களின் கடமை 2) வளரும் குழந்தைகள் வயதானவர்களின் முக்கியத்துவம் அறிந்து கொடுக்கும் மரியாதையை கொடுக்க வேண்டுமென்பது. இப்படியாகவும் எடுத்துக் கொள்ளலாம் தானே.

  கேடம்பாக்கம் பாணியில் எடுத்தால் நமக்கு வேண்டியது மாதிரி கதையை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த படமே ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்துத்தான் எனும் பொழுது, ஒரு மனிதன் சில விசயங்களை உணராமலேயே இறந்து விடுவதில்லையா அது போலத்தான், மாதவரும் நிறைய விசயங்களில் காம்ப்ரமைஸ் பண்ணிக் கொள்ளாமலேயே இறந்து விட்டார்.

  அதற்கு உ.தா: //மகனை எழுப்பி வாழ்க்கை என்பது உணர்வுகளில் தான் என அவனை அரவணைத்து அவனுடைய வாழ்க்கையில் சற்று ஆனந்தத்தையாவது அளிக்கவில்லை மாதவர்.//

  நீங்கள் கூறிய படியே எனக்கும் அந்த அவா எழுந்தது அந்தக் காட்சியைக் காணும் பொழுது. ஆனால், மாதவரான அந்த மனிதனுக்கு தன் மனம் அப்படிச் செய்ய உந்துதல் அளிக்க வில்லை. அங்குதான் நானும், நீங்களும், மாதவரும் வித்தியாசப் படுகிறோம் என்பதனை உள்ளது உள்ளபடியே கூறியிருக்கிறார், இயக்குனர் என்று நினைக்கிறேன்.

  Like

 2. //கடைசியாய் ஒரே ஒரு விண்ணப்பம். அடுத்த படத்திலாவது பள்ளிக் குழந்தைகளை விட்டு விடுங்கள் பிளீஸ்.//

  Sorry for English. In small villages school children are as visible as the bufallos that roam the roads, I would say even more is their impact on daily life. One cannot imagine a life in villeges without children walking to school in the morning and in the evening.
  Unlike cities where school going children are not so visible since they travel in autos or other vehicles and there vehicles all over during that time.

  Like

 3. தெகா, உங்கள் கருத்துக்களுக்க்கு நன்றி. உங்கள் பதில் விரிவாகவும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. நன்றி 🙂

  Like

 4. // I would say even more is their impact on daily life. One cannot imagine a life in villeges without children walking to school in the morning and in the evening.
  //

  நான் இல்லையென்று சொல்லவில்லை சிரில். ‘பள்ளிக்கூடத்தில்’ ஆசிரியரியையை காமப் பார்வை பார்ப்பது, 9ரூபாயில் உதட்டு முத்தம் என்றெல்லாம் மாணவர்களைக் காட்ட வேண்டாமே என்று தான் சொல்ல வந்தேன்.

  Like

 5. //thangarudya padangal ore maathriyaanavai………
  malarum ninaivugali asaipodupavai….
  vera maathri padam eduka thangaruku theriyatho ennomo//

  சரியாகச் சொன்னீர்கள். தன்னுடைய படத்தைத் தவிர வேறு எந்த படமும் நல்லதல்ல என்னும் கொள்கையுடையவர் தங்கர் 🙂

  Like

 6. மாதவனா வாழ்ந்து பாரு…….பாட்டை ஒரு மயக்கத்துடன்(எல்லோரும் என்னை வெறுப்புடன் பார்க்கும்போதும்}பார்ப்பதும், ஒன்பது ரூபாய் நோட்டு சினிமா நிச்சயம் போகணும்னு சொல்லிக் கொண்டிருப்பதுமாக இருந்த‌ தருணத்தில் உங்கள் விமர்சனம் பார்த்தேன். நிஜமாகவே கொஞ்சம் வருத்தமாகத் தானிருந்தது.
  தவமாய்த் தவமிருந்து அப்பாக்களும் , ஒன்பது ரூபாய் நோட்டு அப்பாக்களும் கலந்ததுதானே நமது சமூகம்.
  இப்படித்தான் அப்பா இருக்கணும்னு ஏதாவது வரைமுறை இருக்கா என்ன?
  மற்ற கருத்துக்கள் பற்றி எனக்கு படம் பார்த்தால்தான் தெரியும்.
  அன்புடன்
  கமலா

  Like

 7. ஒன்பது ரூபாய் நோட்டு மாதவ படையாச்சின் வாழ்க்கையும் அவரின் எண்ணங்களும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று யாரும் வரையறுக்க முடியாது அது அந்த படைப்பாளியின் எழுத்தோடத்தைப் பொறுத்தது…

  இந்தப் படம் உணர்த்துவது ஒரு சராசரி மனிதனைச் சுற்றி நிகழும் சமூக அவலங்கள் உள்ளுர் அரசியல் முதல் உலக அரசியல் வரை, உலகமயம், தாராளமயம் போன்றவற்றின் தாக்கங்கள்… மண்ணின் மைந்தர்களின் மணிண் மைந்தர்களை மண்ணிலிருந்து அண்ணியப்படுத்துவது… இன்று எதை இழந்து… எதைத் தேடி ஓடுகிறோம் என்பதை தங்கராசு கதையோட்டத்தோடு அலசுகிறார்…

  Like

 8. ஒன்பது ரூபாய் நோட்டு மாதவ படையாச்சின் வாழ்க்கையும் அவரின் எண்ணங்களும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று யாரும் வரையறுக்க முடியாது அது அந்த படைப்பாளியின் எழுத்தோடத்தைப் பொறுத்தது…

  இந்தப் படம் உணர்த்துவது ஒரு சராசரி மனிதனைச் சுற்றி நிகழும் சமூக அவலங்கள் உள்ளுர் அரசியல் முதல் உலக அரசியல் வரை, உலகமயம், தாராளமயம் போன்றவற்றின் தாக்கங்கள்… மண்ணின் மைந்தர்களை மண்ணிலிருந்து அண்ணியப்படுத்துவது… இன்று எதை இழந்து… எதைத் தேடி ஓடுகிறோம் என்பதை தங்கராசு கதையோட்டத்தோடு அலசுகிறார்…

  Like

 9. தெகா மற்றும் சீதா பிரபாகரன் இருவரின் கருத்துக்களை நான் ஆதரிக்கின்றேன், அது தான உண்மை, நாம் சினிமா தளத்தில் ஒளிபதிவுக்கு அடிமையாகிவிட்டோம் , உண்மை யதார்தத்திற்கு வர மறுக்கிறோம்.உள்ளது உள்ளபடியே உணர்வது தான் இலக்கியம், அந்த இலக்கியத்தை படமாக்கும் போது ஒரு வண்ணான் மகளை ஒரு வன்னியன் மணமுடிப்பது என்பது இன்றைய சினிமா உலகத்திற்கு ஏற்றதாக இருக்கலாம் ஆனால் சாதி சனம் என உயிராக வாழ்ந்த மனிதர்களால் அது முடியாது , அதனை திரைப்படமாக எடுக்கும் போது அதனை மாற்றிக் காட்டினால் மண்ணனி தன்மை மனிதனின் தன்மை கெட்டுவிடும்என நினைக்கின்றேன்

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s