வேற்றுக்கிரக வாசி வீடியோவில் விழுந்தார் !

alien-2.jpg

வேற்றுக் கிரக வாசிகளைக் குறித்த குழப்பங்களும், கேள்விகளும், ஆச்சரியங்களும் நம்மை எப்போதுமே ஒருவித சிலிர்ப்பு உணர்வுகளுக்குள் இட்டுச் செல்கின்றன.

வேற்றுக் கிரக வாசிகளைப் பார்த்தேன், மங்கலாய்ப் படம் பிடித்தேன் என்றெல்லாம் உலவிய ஆயிரக்கணக்கான கதைகளில் உண்மை இல்லை என்று ஒரு சாராரும், உண்மையே என்று ஒருசாராரும் வாதிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

தற்போது இஸ்தான்புல்லில் வீட்டுக் காவலாளி ஒருவர் எடுத்த வீடியோ ஒன்றில் வேற்றுக் கிரகவாசிகள் இருவரும், அவர்களுடைய, பறக்கும் தட்டும் தெளிவாகத் தெரிவதாக துருக்கியின் UFO தலைவர் Haktan Agdogan யதெரிவித்திருக்கிறார்.

அதற்கு ஆதாரமாக அந்த காவலாளி, Yalcin Yalman, எடுத்த 22 நிமிட வீடியோ ஆதாரத்தையும் வழங்கியிருக்கிறார். !

உண்மையா? பொய்யா என்பது விரைவில் விளங்கிவிடும் !

வேற்றுக் கிரகவாசிகள் குறித்த சிலிர்ப்பூட்டும் கதைகளை சமீபத்தில் மதன் அவர்களுடைய ‘மனிதனும் மர்மங்களும்’ நூல் வாயிலாக படிக்க நேர்ந்தது, ரொம்ப சுவையாகவும், எளிமையாகவும்.

நவீனத்தின் அடுத்த மைல்கல்.

one1.jpg

அட்டகாசமான மெல்லிய பாட்டரி ஒன்றை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாட்டரி பேப்பர் போல மெல்லியதாக இருக்கிறது. இதன் தடிமன் 0.5 மில்லி மீட்டர் மட்டுமே. எல்லாமே வசதியாய் இருக்கிறது, ஆனால் இதை கண்டுபிடித்தவருடைய பெயரான Zhang Xiachang ஐ உச்சரிப்பது மட்டும் கடினமாய் இருக்கிறது 🙂

உலகின் மிக மெல்லிய லேப் டாப்.

one.jpg

உலகின் மிக மெல்லிய மடிக்கணினியை ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. இந்த மடிக்கணினியின் அதிகபட்ச தடிமன் 1.93 செண்டி மீட்டர்கள் எனவும், மிக மெல்லிய பாகம் 0.41 செண்டி மீட்டர் அளவு எனவும் இதை அறிமுகம் செய்து வைத்த ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

two.jpg

மிக மெல்லியதாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்த கணினியாய் இது செயல்படும் என்கின்றனர். இதில் குறுந்தகடுகளைப் பயன்படுத்தும் வசதி இல்லை. எனினும் பிற கணினியில் உள்ள குறுந்தகடு செயலிகளை கம்பியில்லா தொடர்பின் மூலம் இயக்கும் ஆற்றல் இந்த கணினிக்கு உள்ளதாம்.

three.jpg

இந்த மடிக்கணினியின் மொத்த எடையே 1.36 கிலோ கிராம் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது $1800 என இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை அதிகம் என நினைப்பவர்கள் ஓரிரு ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டியது தான்.