இதை அடக்குங்க பாக்கலாம் !

என்ன அதை அடக்கினேன், இதை அடக்கினேன்னு ஜம்பம் விட்டுட்டு திரியும் ஜல்லிக்கட்டு கில்லாடிகள் யாராச்சும் இருந்தா இந்த காளையை அடக்கச் சொல்லுங்களேன்.

cow1.jpg

ஆப்பிரிக்காவில் உள்ள இந்த காளை, உலகிலுள்ள விலங்கினங்களிலேயே பெரிய கொம்பு உடையது எனும் பெருமையைப்( ? ) பெற்றுள்ளது.

cow4.jpg

பாவம் இதைத் தூக்கிட்டு நடக்க அது என்ன பாடுபடுதோ ?…ம்…அதுக்கு தலைக்கனம் ரொம்பவே அதிகம் தான்.

cow41.jpg

பின் குறிப்பு : இது ஒரு உண்மைச் சமாச்சாரம், கிராபிக்ஸ் விளையாட்டு அல்ல !

கிரிக்கெட் வார்த்தைப் போர் : ஒரு அலசல்

cricket.jpg

கிரிக்கெட் விளையாட்டு ஒன்றும் தேசிய முக்கியத்துவம் கொடுத்து பேசப்படவேண்டிய விஷயம் இல்லை தான் எனினும் மக்களிடையே கிரிக்கெட் ஒரு போதையாகப் பரவியிருப்பதும், கோடிக்கணக்கான பணம் புரள்வதும், ஊடகங்களின் பிரதான செய்தியாக மாறியிருப்பதும் கவலை கலந்த கவனிப்புக்கு நம்மை இட்டுச் செல்கிறது.

விளையாட்டு எனும் எல்லையைத் தாண்டி கிரிக்கெட் இரண்டு நாட்டின் தன்மான பிரச்சனையாக உருவாகியிருப்பது இதன் மீதான கவனத்தை அதிகரித்திருக்கிறது.

கிரிக்கெட் விளையாட்டல்ல, அது அரசியலாகிவிட்டது இப்போது என்பதை நிகழ்வுகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.

சில விஷயங்கள் புரியவேயில்லை !

கிரிக்கெட் விளையாட்டில் வார்த்தை விளையாட்டுகள் சகஜம் என்று சொல்லும் ஆஸ்திரேலிய அணியினரால் இந்தியர்களின் வார்த்தை விளையாட்டை ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஏன் ?

இதன் உண்மையான காரணம் அவர்களுடைய இரத்தத்தில் ஊறியிருக்கிறது. தங்களை உயர்வாகவே மதிக்கும், அல்லது ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்களை இழிவாகவே மதிக்கும் போக்கு அவர்களை விட்டு வெளியேறுவதில்லை.

இதனால் தான் தங்களுடைய வெறுப்பை பல்வேறு விதமாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

தங்களை விட வயது குறைவான பந்து வீச்சாளர்களிடம் தோல்வியடையும் போது அவர்களுக்குள்ளே இருக்கும் ஈகோ எனும் அரக்கன் அசுரத்தனமாக வெளிப்படுகிறது.

இது தான் வேறு விதமாக வார்த்தைகளில் வெளிப்படுகிறது. அவர்கள் நாட்டிற்கு விளையாடச் சென்ற அணியினர் என்னும் குறைந்தபட்ச மரியாதை கலந்த கவனிப்பு கூட அவர்களிடம் இல்லாதது அவர்களுடைய கலாச்சாரத்தின் மீது கேள்வியாய் எழுகிறது.

இந்தியர்களைத் திருப்திப்படுத்த வேண்டுமானால் ஒரு ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த அம்பயரை நியமிக்கலாம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் சொல்லியிருப்பதே அவர்களுடைய மன ஓட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

ஆஸ்திரேலிய வீரர்களின் நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் இந்திய வீரர்களின் செயல்களைப் பெரிதுபடுத்தும் நடுவர்களே இருக்கிறார்கள் என்பதை ஒருவகையில் அவர்கள் ஒத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையே இது பூடகமாய் படம் பிடிக்கிறது.

இன்னொரு விஷயம், எதிரணி வீரர்களை மன ரீதியான உளைச்சலுக்கு உள்ளாக்காமல் வெற்றி பெற ஆஸ்திரேலியர்களுக்குத் தெரியாதா என்பது தான்.

செஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் கவன சிதறடிக்கும் நிகழ்வுகள் நடைபெறுவதில்லை. கிரிக்கெட்டில் இது மிக அதிக அளவில் நடைபெறுகிறது.

“என்னை ஆட்டமிழக்கச் செய்து பார்” என்றோ, “அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டுவேன் பார் “ என்றோ சவால் விட்டால் பரவாயில்லை. ஆனால் அதை விடுத்து வீரர்களின் குடும்ப உறவினர்களை திட்டுவதும், பாலியல் ரீதியான அருவருக்கத் தக்க வசனங்களைப் பேசுவதும் தான் கிரிக்கெட் வார்த்தை விளையாட்டெனில், மன்னிக்கவும் இதை விடக் கேவலமான ஒரு அணுகுமுறை இருக்க முடியாது. அது எந்த அணியாக இருந்தாலும் சரி.

ஆஸ்திரேலியர்கள் இந்தியர்களை நோக்கி பேசுவதையெல்லாம் பாராட்டாக இந்தியர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தத்துவார்த்த சிந்தனையை உதிர்த்திருப்பவர்கள், அதே மன நிலையுடன் பிற அணி வீரர்களின் வார்த்தைகளை ஆஸ்திரேலிய அணியினரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்துதல் அவசியம்.

இஷந்த் ஷர்மாவிற்கு பத்தொன்பது வயது தான் ஆகிறது என்பதற்காக சீனியர் வீரர்களின் அவமதிப்புகளையெல்லாம் தலை வணங்கி பெற்றுக் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை.
திருமண வயது 21 என்பது போல, திட்டுவதற்கும் திட்டை வாங்குவதற்குமான வயது வரம்பை அரசாங்கமும் நிர்ணயித்திருக்கவில்லை.

“தீய களை” என்பது போன்ற அர்த்தத்தில் ஹர்பஜனை ஹேடன் விமர்சித்திருப்பது அவருடைய சொந்தக் கருத்து என கருத முடியுமெனில், எதிர் விமர்சனங்களையும் அதே மனநிலையுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவருக்கும், அந்த அணியினருக்கும் வேண்டும்.

இன வெறி வார்த்தைகளை இந்தியர்கள் பயன்படுத்தினார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியதை மனதில் வைத்துக் கொண்டு, இப்போது இனவெறி குற்றச்சாட்டு எழவில்லையே இந்தியா வாயை மூடிக்கொள்ளட்டும் என்று நக்கலாய் கூறியிருப்பது ஏதேனும் ஒரு வகையில் இந்திய அணியை இழிவுபடுத்தவேண்டும் என்பதையே காட்டுகிறது.

விளையாட்டை சீரியசாகப் பார்த்து, சீரியசான விஷயங்களை விளையாட்டுத் தனமாய் விட்டு விடும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் எழுந்துள்ள இந்த சர்ச்சை உண்மையில் வெறும் வார்த்தை சம்பந்தப்பட்டதல்ல.

காலம் காலமாக இழிவு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் மானிட குலம் எழ முயலும்போது எரிச்சலைடையும் உயர் நிலையிலுள்ளவர்களின் மனநிலையின் வெளிப்பாடே !

உலகின் முதல் நீர்மூழ்கிக் கார் !

இது தான் உலகின் முதல் நீர்மூழ்கிக் கார் ! மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள கார் கண்காட்சியில் இது பங்குபெறப் போகிறது. பத்து மீட்டர் ஆழத்தில் பத்திரமாய் போகுமாம் இந்த கார் !

one1.jpg

சுவிட்சர்லாந்தின் ரின்ஸ்பீட் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த கார் sQuba என்று பெயரிடப்பட்டுள்ளது.

three.jpg

இதே நிறுவனம் தண்ணீரிலும் தரையிலும் அதி வேகத்தில் செல்லக்கூடிய கார் ஒன்றை சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத் தக்கது !

two1.jpg

புற்று நோய் வருமா ? 10 ஆண்டுகளுக்கு முன்பே அறியலாம் !!!

blood.jpg

ரஷ்ய விஞ்ஞானிகள் மருத்துவ உலகின் மிக முக்கியமான சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

நோயுற்றவர்கள் மருத்துவமனைக்குச் செல்வதும், பரிசோதனைகள் உடலிலிருக்கும் நோயைக் கண்டு சொல்வதும் தான் இது நாள் வரை மருத்துவப் பரிசோதனையாய் இருந்து வந்திருக்கிறது.

ஆனால் இப்போதைய புதிய கண்டுபிடிப்பு நோய் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே நோய் வரக் கூடிய சாத்தியக் கூறுகளைக் கண்டுபிடித்துச் சொல்கிறது என்பதே வியப்பூட்டும் செய்தி.

ஒரு துளி இரத்தத்தைப் பரிசோதனை செய்து அவருக்கு பிற்காலத்தில் என்னென்ன நோய்கள் வரும் என்பதை கண்டறிந்து சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நீரிழிவு நோய் வரும் வாய்ப்பை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும், இதய நோய்களள மூன்று ஆண்டுகளுக்கு முன்பும், புற்று நோய் வரும் வாய்ப்பை பத்து ஆண்டுகளுக்கு முன்பும் இந்த சோதனை கண்டறிந்து சொல்லி விடுகிறது.

சிறுநீரகம், வயிறு, நுரையீரல் என அனைத்து விதமான பாதிப்புகளையும் இந்த சோதனை கண்டுபிடித்துச் சொல்லி விடுகிறதாம்.

இது மருத்துவ உலகின் புரட்சியாய் கருதப்படுகிறது. நோய் தாக்குவதற்கு வெகு நாட்களுக்கு முன்பே தெரிந்து விடுவதால் அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், நோய் தாக்காமல் காக்கவும் முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட இதே போன்ற சோதனைகள் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் நடைபெற்று வருகின்றனவாம்.

நோயின் வீரியம் அதிகரித்தபின் அதை இனம் கண்டு கொள்வது பொருள் இழப்பையும், உயிர் இழப்பையும் தந்து விடுகிறது. இந்த புதிய சோதனை வருமுன் காப்போம் நடவடிக்கை போல மருத்துவ உலகில் புத்தம் புதிய கதவுகள் சிலவற்றைத் திறந்துள்ளது என்றால் அது மிகையல்ல.

உலக வாகன வரலாற்றில் முதன் முறையாக… மரத்தினால் ஒரு கார் !!!

wood-car.jpg

அமெரிக்காவிலுள்ள வாகன வடிவமைப்பு நிறுவனம் ஒன்று உலகிலேயே முதன் முதலாக மரத்தாலான ஒரு சூப்பர் காரை வடிவமைத்துள்ளது.

இந்த வண்டியில் சுமார் 240 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யலாம். பாதுகாப்பும் அதிகம் என்கின்றனர் வடிவமைத்தவர்கள்.

1134 கிலோகிராம் எடையுள்ள இந்த கார், பொதுவான கார்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் எடை குறைவானது என்பது குறிப்பிடத் தக்கது.

ஒரு காலன் பெட்ரோலில் 36 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம் என்கிறார் இதை வடிவமைத்த ஜோ கார்மன்.

இன்னும் விலை நிர்ணயம் செய்யப்படாத இந்த கார் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வருகிறது.

உலக வாகன வரலாற்றில் முதன் முறையாக… மரத்தினால் ஒரு கார் என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு அப்படின்னா மாட்டுவண்டி, தள்ளுவண்டி எல்லாம் மரத்தினால செய்தது இல்லையா என கோயம்புத்தூர் குசும்புடன் விதண்டாவாதம் பண்ணக்கூடாது.. சரியா ?

பிரமிக்க வைக்கும் பாடி பில்டர் !

உலகின் மிகச் சிறிய “பாடி பில்டர்” எனும் பெருமையை பெற்றுள்ள இந்த ஆதித்யா இந்திய நாட்டைச் சேர்ந்தவர்.

வெறும் எண்பத்து நான்கு செண்டீ மீட்டர் உயரமும், ஒன்பது கிலோ எடையும் கொண்ட இவர் தன்னம்பிக்கையும், துணிச்சலும் மிகுந்தவராம்.

one.jpg

இவருக்கென்றே தயாராக்கப்பட்டுள்ள 1.5 கிலோ பளுவை தினமும் தூக்கி உடற்பயிற்சி செய்கிறார்.

two.jpg

கின்னஸ் நூலிலும் இடம்பிடித்துள்ள இவர் இப்போது மும்முரமாக நடனம் கற்று வருகிறாராம்.

அழகில்லை, திறமையில்லை, வசதியில்லை என்றெல்லாம் புலம்பும் இன்றைய நவீன இளைஞர்களுக்கு எதுவும் இல்லையென்று புலம்புவது இழுக்கு, வாழ்க்கையை துணிச்சலுடன் சந்திப்பதே அழகு என்று பாடம் கற்பிக்கிறார் இந்த பத்தொன்பது வயது சிறு இளைஞர்.

தங்கத்தாமரை மகளே

டோக்கியோவில் ஒரு விளம்பர நிகழ்ச்சிக்காக தங்கத்தாலேயே ஆடை நெய்து அசத்தல் நடை நடந்த அழகி.

gold2_tokyo.jpg

ஆடையில் இருப்பது 365 ஆஸ்திரேலிய தங்க நாணயங்கள்.

gold1_365ausgoldcoins.jpg

போகிற போக்கில் யாராவது அவிழ்த்துக் கொண்டு ஓடி விடக் கூடாது என்பதற்காக கூடவே ஒரு பாதுகாப்பு அதிகாரி !

gold3.jpg

செட்டாப் பாக்ஸ் தொல்லை ஒழிகிறது !

tv.jpg

ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். அப்படியானால் கூத்தாடிகள் இரண்டு பட்டால் ஊருக்குத் தானே கொண்டாட்டம் ?

செட்டாப் பாக்ஸ், கேபிள் கூத்துகளைப் பார்த்தால் அப்படித் தான் தெரிகிறது.

ஒரு நாள் சன் மியூசிக் சானலில் “அற்புதமான வாய்ப்பு, எஸ்.சி.வி செட்டாப் பாக்ஸ் விலை 499 மட்டுமே “ என்று முழங்கினார்கள்.

அடடா.. ( சென்னையின் தலை விதியான)நாலாயிரம் ரூபாய் செட்டாப் பாக்ஸ் 499 ரூபாய்க்கே கொடுக்கிறார்களே பரவாயில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

அடுத்த நாள் கலைஞர் தொலைக்காட்சியில் “ஹாத் வே செட்டாப் பாக்ஸ் – முற்றிலும் இலவசம் “ என்று அதிரடித்தது.

இதென்னடா ? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே சன் சானலில் “எஸ்.சி.வி” இலவசம். வாங்குங்கள் வாங்குங்கள் என்று கூவிக் கொண்டிருந்தது.

ஓஹோ இப்படிப் போகுதா விஷயம் ? என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது “நீயா, நானா யார் தான் இங்கே ரொம்பப் பெரியவன் “ எனும் பாடல்.

சென்னை மக்களை சுதந்திரமாக சானல்களைப் பார்க்க விடாமல் சுற்றி வளைத்து செட்டாப் பாக்ஸ் சங்கிலியில் சுற்றி டி.டி யில் போட்டால் மட்டுமே கிரிக்கெட் கூட பார்க்க முடியும் எனும் சூழலை உருவாக்கி விட்டார்கள், பணம் சம்பாதிக்க விரும்பியவர்கள்.

குழந்தைகளை ஒரு கார்ட்டூன் சானல் கூட பார்க்க விடாமல் செய்த இந்தியாவிலேயே “தனித்துவம்” மிக்க நகரம் என்னும் பெயரையும் பெற்றது சென்னை !!!

கடுப்பில் இருந்த மக்களை டிஷ், டாட்டா ஸ்கை என இழுக்க அதைப் பொறுக்க முடியாமல் சன் டி.டி.ஹைச் வந்தது. மாறன் தான் மாறியாச்சே அவ்ளோ ஈசியா வந்துடுமா என்ன ?

கேபிள் நறுக்கப்படுகிறது, டிஷ் நசுக்கப்படுகிறது, பணியாளர்கள் வெறுக்கப்படுகின்றனர் என கூச்சல் குழப்பங்கள் எங்கும்.

சந்தடி சாக்கில் ரிலையன்ஸ் டிஷ் கூட வரப்போகிறது என்றார்கள்.

இந்தக் களேபரச் சூழலில் நேற்று எங்கள் ஏரியா கேபிள் டிவி ஆபரேட்டரைப் பார்த்தேன்

என்னப்பா எல்லா செட்டாப் பாக்ஸ்சும் இலவசம் ன்னு சொல்றாங்களே, ஒரு நாலஞ்சு நம்ம வீட்டுல கொண்டு வெச்சுட வேண்டியது தானே ” என்றேன் ஒரு சின்ன சிரிப்புடன்.

அட. அது கூட வேணாம் சார். இந்த செட்டாப் பாக்ஸ் எல்லாமே எடுத்துடப் போறாங்களாம். இன்னும் பத்து நாள்ல பாருங்க, பழைய படி கேபிள்லயே எல்லா சானலும் வரும்” என்றார்.

அடடா… சென்னைக்குக் கூட விடிவு காலம் வந்துடும் போலிருக்கே !

“வெங்காய” விஷயம்.

onion.jpg

இந்த வெங்காயம் நறுக்கற வேலை இருக்கே.. அப்பப்பா… கண்ணெல்லாம் எரிய, கண்ணீர் வழிய ஒரு பெரும் பாடு. அதையே நம்ம வீட்டுப் பெண்கள் சர்வ சாதாரணமாகச் செய்து விடுகிறார்கள்.

அல்லது அவர்களுடைய கஷ்டத்தை சர்வ சாதாரணம் என்று சொல்ல நாம் சொல்லி விடுகிறோம்.

ஆனால், இந்த கலியுகத்தில் ஆண்களும் பெண்களைப் போலவே ( அதை விட அதிகமாகவே ) சமையலறையில் வெங்காயம் நறுக்க வேண்டியிருப்பதால் இந்த செய்தி ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரு இனிப்பான செய்தியே.

செய்தி என்னவென்றால், நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை வெங்காயத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், இதை நறுக்கினால் கண்ணீர் வராது !

என்னடா வெங்காயம் இது என்று துழாவிப் பார்த்தால் ஏதோ பயோ டெக்னாலஜி முறையில் இதை தயாரித்திருக்கிறார்களாம்.

இந்த ஆராய்ச்சி குறித்து கோலின் ஏடி எனும் அறிவியலார் குறிப்பிடுகையில், இந்த ஆராய்ச்சி 2002ம் ஆண்டு துவங்கியதாகக் குறிப்பிடுகிறார். ஜப்பான் ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்ணீரை வரவைக்கும் மூலக்கூறை வெங்காயத்திலிருந்து இனம் கண்டு கொண்டபின் இந்த ஆராய்ச்சி ஆரம்பிக்கப்பட்டதாம். (ஜப்பான் இளைஞர்களுக்கு என்ன பிரச்சனையோ ? )

இந்த ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக வெங்காயத்தின் தரத்தை அதிகரிக்கவும், அதன் குணங்களை வீரியப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், இந்த வெங்காயம் மேலும் பல சோதனைகள் கடந்து, பயிரிடப்பட்டு சந்தைக்கு வர இன்னும் பல ஆண்டுகள் பிடிக்குமாம். அடடா.. சரி சரி நம்ம பசங்களாவது அழாமல் இருக்கட்டும்.

காதலர் தின காட்சிகள் : வித்தியாசமானவை.

இது தான் உலகிலேயே மிக விலை உயர்ந்த காதலர் தின ரோஜா.
இதில் 50 காரட் வைரமாலை சுற்றப்பட்டுள்ளது. தற்போது தாய்லாந்திலுள்ள பாங்காக் ஹோட்டல் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

50-carat-diamond-necklace-touted-as-the-worlds-most-expensive-valentines-rose-at-a-hotel-in-bangkok.jpg

இவை ஹாலந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏழு வர்ண ரோஜாப்பூக்கள்.
இவை உண்மையில் வெள்ளை ரோஜாக்கள், அவற்றின் மீது வானவில் வர்ணம் பூசவேண்டும் எனும் சிந்தனை யாருக்கோ உதயமானதால் இப்போது ஏழு வர்ண ரோஜாவாக உருவெடுத்திருக்கிறது.

imported_from_holland_7clrs.jpg

காதலி பிரிந்து சென்ற துயரத்தில் இருக்கும் காதலன் என்ன செய்யலாம் ? இதோ, இந்த கருப்பு ரோஜாக்களின் ஒன்றை அனுப்பலாம். இந்த காட்சி சீனாவில்.

in_china.jpg

இந்தப் பன்றி தென் இங்கிலாந்தில் உள்ளது. உடலில் இதய வடிவ கருப்பு அடையாளத்துடன் இருப்பதால் இது காதலர் தின சிறப்புப் பன்றியாகி பிரபலமடைந்துள்ளது.

newent-southwestern-england.jpg

மெக்சிகோவில் “Love to Madness” வரை எனும் கண்காட்சியில், ஓவியங்கள் சிற்பங்கள் என காதலைப் பற்றிய ஏராளமான தகவல்கள்.
சிற்பத்தில் இருப்பதைப் பார்த்து சிற்றின்ப வேட்கை கொண்ட காதலர்கள்.

love-to-madness-exhibition_mexico.jpg

சீனாவில் இளம் பெண்களைச் சுண்டியிழுக்கிறதாம் இந்த புதிய காதலர் தின பொம்மைகள். காதல் – பிணைப்பு எனும் வார்த்தைகளே சீன மொழியில் அதன் மீது எழுதப்பட்டுள்ளன.


உண்மைக் காதலர் அனைவருக்கும்
உளமார்ந்த காதலர் தின நல்வாழ்த்துக்கள்.