சுவாரஸ்யமான சில கின்னஸ் சாதனைகள் !

கின்னஸ் சாதனைக்காக என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள் மக்கள். சிலருக்கு கின்னஸ் சாதனை செய்து கொண்டே இருப்பது ஒரு பொழுது போக்கு. நூற்றுக்கணக்கான கின்னஸ் சாதனைகள் செய்தவர்கள் இருக்கிறார்கள்.

1.

உலகிலேயே அதிக நீச்சல் உடை அழகிகள் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் என்பதற்காக கின்னஸ் நூலில் இடம் பிடித்த படம்.

1.jpg

2. ஹங்கேரியில் 6400 இணைகள் ஒரே இடத்தில் குவிந்து இதழ் முத்தம் அளித்தது கின்னஸ் நூலில்.

2.jpg

3. குழந்தைகளைப் போல ஸ்கிப்பிங் செய்து கொண்டே 5 கி.மீ தூரத்தை 35 நிமிடங்களில் கடந்தார் ஃபர்மன். சுவாரஸ்யம் என்னவெனில் முதல் மற்றும் கடைசி நூறு மீட்டர்களை ஒரு சிறுத்தையைக் கூட்டிக் கொண்டு ஸ்கிப்பினார் 🙂

3.jpg

4. உலகிலேயே மிக உயரமான நாய் 7′.2″ அதன் தோழனான 7.5 ” நாயுடன்.

4.jpg

5. ஹூலா ஹூப்ஸ் என்னும் இவர் 144 கின்னஸ் சாதனைகளைச் செய்திருக்கிறார். இப்போது அவர் செய்து கொண்டிருப்பது 145 வதுக்கான முயற்சி.

5.jpg

இப்படியா மறப்பார்கள் ?

jail.jpg

“மன்னிக்கணும். தெரியாம உங்கள ஜெயில்ல வெச்சுட்டோம்” என்று யாராவது சொன்னால் எப்படி இருக்கும் ?

அதையே ஐம்பது வருடம் ஜெயிலில் இருந்த ஒரு நபரிடம் சொன்னால் ??

நம்பவே முடியாதவைகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

ஜேம்ஸ் என்னும் நபர் தனது தந்தையை காயப்படுத்திவிட்டார் என்பதற்காக இலங்கை ஜெயிலில் அடைக்கப்பட்டார். நடந்தது 1958ம் வருடம். அப்போது அவருக்கு 30 வயது.

அதன் பின் அங்கிருந்து மனநிலை மருத்துவமனைக்கும், இன்னொரு ஜெயிலுக்கும் என அலைக்கழிக்கப்பட்டவரைக் குறித்து அரசாங்கமும், அதிகாரிகளும், உறவினர்களும் எல்லாருமே மறந்து போனார்கள்.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அவர் மீது இதுவரை விசாரணையே நடக்கவில்லை என்பது தான்.

சமீபத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அவரைக் குறித்த விவரங்களை சேகரித்தபோது தான் இந்த விஷயமே தெரிய வந்திருக்கிறது.

மன்னிப்புக் கேட்டு அவரை வெளியே விட்டு விட்டார்கள்.

இப்போது அவருக்கு வயது 80 !

ரோபோ vs இயந்திரா : ஒரு பார்வை

robo.jpg

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “ரோபோ” படத்தின் பெயர் இயந்திரா என முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரோபோ என்னும் பெயரை வைப்பதையே ஷங்கர் விரும்பினாலும் கேளிக்கை வரி போன்ற சலுகைகளுக்காக தமிழில் மட்டும் “இயந்திரா” என்று பெயரிட்டுள்ளனர்.

இயந்திரா – பெண்பாலைக் குறிக்கும் பெயராக இருக்கிறதே என்ற ஷங்கரின் சற்று தயங்கியிருக்கிறார். பரவாயில்லை இது எனது பேத்தி “யாத்ரா” வின் பெயரைப் போல இருக்கிறது எனவே மாற்ற வேண்டாம் என ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டாராம்.

“இயந்திர மனிதன்” எனும் ரோபோவின் தமிழாக்கம் ஆங்கில டப்பிங் படங்களைப் போல இருக்கிறது என்றும் “இயந்திரன்” என்று பெயர் வைக்கலாம், அது இந்திரன் போலவும் ஒலிக்கும் என முதலில் பரிசீலிக்கப் பட்டதாம். முதல்வன், இந்தியன் போன்ற ஷங்கரின் முந்திய பட பெயர்களோடு ஒத்துப் போகும் எனவும் அலசப்பட்டதாம்.

“என் இனிய இயந்திரா” என்பது சுஜாதாவின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ்ப் பெயர்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டதிலிருந்து ஓரளவு நல்ல தமிழ்ப் பெயர்களை திரைப்படங்களுக்குச் சூட்டும் வழக்கம் வந்திருக்கிறது.

மலையாளப் படங்களுக்கு ஆங்கிலப் பெயர்களைச் சூட்டுவது அங்கே பெரிய விவாதத்துக்குரிய செயலாகவும் மாறியிருக்கிறது. மலையாளத்தில் வெளிவரும் படங்களில் எண்பது விழுக்காடு பெயர்களும் ஆங்கிலத்தில் தான் வெளிவருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.