“மன்னிக்கணும். தெரியாம உங்கள ஜெயில்ல வெச்சுட்டோம்” என்று யாராவது சொன்னால் எப்படி இருக்கும் ?
அதையே ஐம்பது வருடம் ஜெயிலில் இருந்த ஒரு நபரிடம் சொன்னால் ??
நம்பவே முடியாதவைகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு மிகச் சிறந்த உதாரணம்.
ஜேம்ஸ் என்னும் நபர் தனது தந்தையை காயப்படுத்திவிட்டார் என்பதற்காக இலங்கை ஜெயிலில் அடைக்கப்பட்டார். நடந்தது 1958ம் வருடம். அப்போது அவருக்கு 30 வயது.
அதன் பின் அங்கிருந்து மனநிலை மருத்துவமனைக்கும், இன்னொரு ஜெயிலுக்கும் என அலைக்கழிக்கப்பட்டவரைக் குறித்து அரசாங்கமும், அதிகாரிகளும், உறவினர்களும் எல்லாருமே மறந்து போனார்கள்.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அவர் மீது இதுவரை விசாரணையே நடக்கவில்லை என்பது தான்.
சமீபத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அவரைக் குறித்த விவரங்களை சேகரித்தபோது தான் இந்த விஷயமே தெரிய வந்திருக்கிறது.
மன்னிப்புக் கேட்டு அவரை வெளியே விட்டு விட்டார்கள்.
இப்போது அவருக்கு வயது 80 !
கொடுமை! கண்டிக்கத்தக்கது.
அன்புடன்,
ஜோதிபாரதி.
LikeLike
நம்ம ஊரிலும் ஆண்டாண்டாய் விசாரணைக் கைதிகளாகவே பலர் இருந்துவருகின்றனர். பெயிலுக்கு காசில்லாமல்.
LikeLike
இந்த மனநலத்துறை இருக்கிறதே ,அதுவும் போலீசும் குழப்புகிற குழப்பம் வேறு எந்தத் துறையும் செய்ய முடியாது.அவர்கள் செய்யும் குழப்பத்தில் பலியாகிறவர்கள் பலர்.
அன்புடன்
கமலா
LikeLike
என்ன செய்ய ? அநியாயமாய் ஒரு மனிதனுடைய வாழ்க்கைச் சுதந்திரத்தை பறித்துப் போடும் உரிமையை யார் யாருக்கு அளித்தது 😦
LikeLike
என்ன இது – இப்படி எல்லாம் நடக்குமா என்ன – அரசு இயந்திரம் சில வேளைகளில் இப்படித் தான் நடக்கிறது – செயல்படுகிறது
LikeLike
உண்மை தான் !
LikeLike