ஒரு சுய புலம்பல்

family.jpg

இன்று காலையில் கொடூரமான செய்தியைப் படிக்க நேர்ந்தது. நடத்தையில் சந்தேகம் எனும் காரணத்தைக் கூறி தனது மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்திருக்கிறான் ஒருவன்.

இதில் திடுக்கிடும் செய்தி என்னவெனில், அவன் இரண்டு மனைவிகளுடன் குடித்தனம் நடத்துபவன் என்பது தான்.

அடிக்கடி இரண்டு மனைவிகளுடன் வாழும் நபர்களைப் பற்றிய செய்தியைப் படிக்கும் போது பல கேள்விகள் மனதுக்குள் எழுகின்றன.

சட்டம் அங்கீகரிக்காத ஒன்றை எப்படி இவர்களால் சமூகத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் செயல் படுத்த முடிகிறது.

எப்படி ஒரு மனைவியால், தன்னுடைய கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. என்னதான் பொருளாதார சார்பு இருந்தாலும்!

ஒருவேளை மனைவியின் நடத்தையில் பிழை இருப்பினும், இரண்டு மனைவியருடன் இருக்கும் ஒரு கணவனுக்கு, தன்னுடைய மனைவிக்கு இரண்டு கணவன் இருப்பதை தடுக்க என்ன உரிமை இருக்கிறது.

கடைசியாக, எப்படி ஐயா மனம் வருகிறது ? கணவன் மனைவி சண்டையில் கள்ளம் கபடமில்லாத பிஞ்சுக் குழந்தைகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய ?

கணவன் திட்டியதால் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கும் தாய்மார்கள், மனைவியையும் குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்யும் கொடூரர்கள், இரண்டாவதும் பெண்ணாய் பிறந்து விட்டதே என்பதற்காக குழந்தையை மூன்றாவது மாடியிலிருந்து வீசிக் கொன்ற தாய்…

இப்படி செய்திகளை தினம் தினம் படித்து காலைப் பொழுதை ஒரு விதமான மன அழுத்தத்துடனேயே ஆரம்பிக்க வேண்டிய சூழலில் வாழ்வதை நினைக்கும் போது ஆற்றாமையாய் இருக்கிறது.

காலையில் செய்தித் தாள் படிப்பதையே நிறுத்தி விடலாம் என நினைக்கிறேன்.

13 comments on “ஒரு சுய புலம்பல்

 1. //காலையில் செய்தித் தாள் படிப்பதையே நிறுத்தி விடலாம் என நினைக்கிறேன்.//

  நான் இந்த முடிவெடுத்து ரெம்ப நாளாச்சுங்க.(காரணம் : கும்பகோணம் நிகழ்ச்சி)

  Like

 2. //நான் இந்த முடிவெடுத்து ரெம்ப நாளாச்சுங்க.(காரணம் : கும்பகோணம் நிகழ்ச்சி)//

  நல்லது !

  Like

 3. நண்பரே !! என்ன செய்வது – தற்கொலைகள் கொலைகள் எல்லாம் ஒரு நிமிட உணர்ச்சிப் பெருக்கில் நடை பெறுகின்றன. திட்டமிட்ட செயல்கள் இல்லை. விழுக்காடு மிக மிகச் சிறியது தான். கவலை வேண்டாம். உலகம் எனில் பலதும் தான் இருக்கும்.

  Like

 4. //kalvi arivea theervu//

  என்னமோ படிச்சவைங்க எல்லாம் ரெம்ப நல்லவைங்க மாதிரி இல்ல சொல்றிங்க.

  என்ன…
  படிக்காதவைங்க முட்டாள்தனமாக தவறு செய்றாங்க.
  படிச்சவைங்க அறிவிபூர்வமாக தவறு செய்றாங்க.

  //எல்லாம் ஒரு நிமிட உணர்ச்சிப் பெருக்கில் நடை பெறுகின்றன. //

  சாலையை கடக்கும் போது தன்னிச்சையாக நாம் அக்கம் பக்கம் பார்க்கிறமோ , அதேபோல் ஒவ்வொரு செயல்லையும் செய்வதற்க்கு முன்னால் ஒரு நொடி நிதானித்தாலே போதும் பாதி தவறு நடக்காது.

  ஆனால் இது இந்த மாதிரி கொலைகாரங்களுக்கு பொருந்தாது.

  Like

 5. //நண்பரே !! என்ன செய்வது – தற்கொலைகள் கொலைகள் எல்லாம் ஒரு நிமிட உணர்ச்சிப் பெருக்கில் நடை பெறுகின்றன.//

  மக்களின் பொறுமை ரொம்பவே குறைந்து விட்டது போல !

  Like

 6. //சாலையை கடக்கும் போது தன்னிச்சையாக நாம் அக்கம் பக்கம் பார்க்கிறமோ , அதேபோல் ஒவ்வொரு செயல்லையும் செய்வதற்க்கு முன்னால் ஒரு நொடி நிதானித்தாலே போதும் பாதி தவறு நடக்காது.//

  சரியா சொன்னீங்க !!!

  Like

 7. //சட்டம் அங்கீகரிக்காத ஒன்றை எப்படி இவர்களால் சமூகத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் செயல் படுத்த முடிகிறது.

  ஆஹா எந்த லோகத்தில இருக்கீங்க….. இரண்டு மனைவி விஷயத்தலாம் இப்ப சட்டம் கண்டுக்கறதே இல்லை. ஒரு பத்து பதினைந்து அப்படி போனாதான்…..
  தவிர இரண்டு மனைவி பிரபலங்களை பற்றி குழந்தைக்கு கூட தெரியும்.
  பெரியார் சொன்ன மாதிரி பெண் விடுதலை முழுவதுமாக வேண்டும்

  Like

 8. //இரண்டு மனைவி பிரபலங்களை பற்றி குழந்தைக்கு கூட தெரியும்//

  ம்ம்… நீங்க சொல்றதும் சரி தான் 🙂

  Like

 9. நன்றி. தமிழில் எழுத யூனிகோட் பயன்படுத்துங்கள். எகலப்பை யை தரவிறக்கம் செய்யுங்கள். அதிலுள்ள உதவிப் பகுதி உங்களுக்கு உதவும். 🙂

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s