ரோபோ : மீண்டும் விலகினார் ஐஸ்

aishwarya-rai.jpg

ஷங்கரின் “ரோபோ” படத்திலிருந்து ஐஸ்வர்யா ராய் விலகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாவம் ஷங்கரும் விடாமல் பல ஆண்டுகளாக ஐஸை துரத்திக் கொண்டே இருக்கிறார். ஜீன்ஸ் படத்தில் ஏற்பட்ட நட்பை மீண்டும் ஒரு முறை புதுப்பிக்க பெரும்பாடு பட்டு ஒரு வழியாக தயாரிப்பாளரின் 6 கோடி ரூபாயைக் கொடுத்து ஐஸ்வர்யாவை ஒத்துக் கொள்ள வைத்தார்.

இப்போது ஐஸ்வர்யா மீண்டும் விலகியிருக்கிறார். குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி தாயாகப் போகும் ஆசை இருப்பதால் ரோபோவில் கேட்கும் நீஈஈஈண்ட நாள் கால்ஷீட் வழங்க முடியாது என்று விலகியிருக்கிறார்.

இப்படி வருடக் கணக்கில் எடுப்பதற்கு திருமணமான நடிகைகளின் கால்ஷீட் வேண்டுமென்றால் திருச்செல்வத்தைப் போல “கோலங்கள்” எடுக்கப் போகலாம் ஷங்கர். அந்த தொடர் நடிக்கத் துவங்கிய பிறகு தேவயானி இரண்டு முறை கர்ப்பமாகி, இரண்டு பிள்ளைகளைப் பெற்று பிள்ளைகள் இப்போது பள்ளிக்கூடமும் போகத் துவங்கியிருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

ஏற்கனவே சிம்ரன் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக சந்திரமுகி படத்திலிருந்து விலகியதால் அந்த படம் படு சூப்பர் டூப்பர் ஹிட்டானதாம். எனவே இந்தப் படமும் சூப்பர் ஹிட் ஆகும் என்று கோலிவுட்டில் ஏற்கனவே பட்சிகள் ஆரூடம் சொல்லி சி(ரி)லிர்க்க வைக்கின்றனராம்.

எது எப்படியோ, ஐஸ்வர்யாவை மீண்டும் தன்னுடன் இணைக்க வேண்டும் என்னும் ஷங்கரின் கனவு இப்போதைக்கு நிறைவேறாது போலிருக்கிறது.

என்ன தான் செய்றது, அம்மாவுக்கும் 35 வயசாகுதுல்ல, இப்போவாச்சும் குடும்பத்தைக் கவனிக்கலேன்னா எப்போ கவனிக்கிறதாம் ?

Advertisements

7 comments on “ரோபோ : மீண்டும் விலகினார் ஐஸ்

 1. இதில் உள் குத்து ஏதும் இல்லையே…? 😀

  ///ஐஸ்வர்யாவை மீண்டும் தன்னுடன் இணைக்க வேண்டும் என்னும் ஷங்கரின்
  கனவு ///

  Like

 2. ///இதில் உள் குத்து ஏதும் இல்லையேஸ?
  //ஐஸ்வர்யாவை மீண்டும் தன்னுடன் இணைக்க வேண்டும் என்னும் ஷங்கரின்
  கனவு///

  டிபிசிடி ஸார், குற்றம் கண்டுபிடிக்கிறதுக்குன்னே அவதாரம் எடுத்து வந்திருக்கீங்களா..? ம்ஹ¤ம்.. உங்களைச் சொல்லிக் குத்தமில்ல..

  சேவியர் ஸார் தகவலுக்கு மிக்க நன்றி.. இது நல்ல விஷயம்தானே.. அது அதை அந்தந்த காலத்துல செஞ்சு முடிச்சிரணும்.. எது இறுதிவரை வருமோ அதுதான் நமக்கு முதல்ல வேணும்.. மத்ததெல்லாம் அப்பாலதான்..

  ரஜினியா முக்கியம்..? சிம்ரன் செய்ததும் தவறில்லை.. ஐஸ் செய்வதும் தவறில்லை.. நல்ல ஆரோக்கியமான முடிவு என்றே நினைக்ககிறேன்..

  Like

 3. நல்லவேளை வந்து காப்பாத்துனீங்க 🙂

  //எது இறுதிவரை வருமோ அதுதான் நமக்கு முதல்ல வேணும்.. மத்ததெல்லாம் அப்பாலதான்.. //

  சரியா சொன்னீங்க !

  Like

 4. தலைவரு தேவையில்லாம எதுக்கு கனவு காண்றாரு ? அவரு ரேஞ்சுக்கு 30 வயசுக்கு மேல உள்ள நடிகைகள் தேவையா என்ன ?
  பேசாம பாவனாவை புடிக்கவேண்டியது தானே !

  Like

 5. //Paavam Bhavana… Venumna grand daughter characterla nadikalam robotla..//

  உன் பேச்சை பார்த்தா கமல் ரசிகன் போல தெரியுதே.. உஷார் தம்பி !! அமெரிக்காவுக்கே ஆட்டோ வரும் !

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s