இந்த வெங்காயம் நறுக்கற வேலை இருக்கே.. அப்பப்பா… கண்ணெல்லாம் எரிய, கண்ணீர் வழிய ஒரு பெரும் பாடு. அதையே நம்ம வீட்டுப் பெண்கள் சர்வ சாதாரணமாகச் செய்து விடுகிறார்கள்.
அல்லது அவர்களுடைய கஷ்டத்தை சர்வ சாதாரணம் என்று சொல்ல நாம் சொல்லி விடுகிறோம்.
ஆனால், இந்த கலியுகத்தில் ஆண்களும் பெண்களைப் போலவே ( அதை விட அதிகமாகவே ) சமையலறையில் வெங்காயம் நறுக்க வேண்டியிருப்பதால் இந்த செய்தி ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரு இனிப்பான செய்தியே.
செய்தி என்னவென்றால், நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை வெங்காயத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், இதை நறுக்கினால் கண்ணீர் வராது !
என்னடா வெங்காயம் இது என்று துழாவிப் பார்த்தால் ஏதோ பயோ டெக்னாலஜி முறையில் இதை தயாரித்திருக்கிறார்களாம்.
இந்த ஆராய்ச்சி குறித்து கோலின் ஏடி எனும் அறிவியலார் குறிப்பிடுகையில், இந்த ஆராய்ச்சி 2002ம் ஆண்டு துவங்கியதாகக் குறிப்பிடுகிறார். ஜப்பான் ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்ணீரை வரவைக்கும் மூலக்கூறை வெங்காயத்திலிருந்து இனம் கண்டு கொண்டபின் இந்த ஆராய்ச்சி ஆரம்பிக்கப்பட்டதாம். (ஜப்பான் இளைஞர்களுக்கு என்ன பிரச்சனையோ ? )
இந்த ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக வெங்காயத்தின் தரத்தை அதிகரிக்கவும், அதன் குணங்களை வீரியப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், இந்த வெங்காயம் மேலும் பல சோதனைகள் கடந்து, பயிரிடப்பட்டு சந்தைக்கு வர இன்னும் பல ஆண்டுகள் பிடிக்குமாம். அடடா.. சரி சரி நம்ம பசங்களாவது அழாமல் இருக்கட்டும்.
வெங்காயத்தால அழறத தடுக்கறதுக்கு பதிலா மொத்தமா அழுகையை நிறுத்தற மாதிரி ஒரு ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்.
ம்ம்ம்ம்,,,,,ஐடியா இல்லாத பசங்க!!!!!!!!!!
LikeLike
vengayam narukinal alugai varamal irunthal athu nalla news thaan annal vengayam tastae varavillai yendral athu really alugura news!!! 🙂
LikeLike
ஹா…ஹா.. நச் பதில் பாலா 🙂
LikeLike
//வெங்காயத்தால அழறத தடுக்கறதுக்கு பதிலா மொத்தமா அழுகையை நிறுத்தற மாதிரி ஒரு ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்.
ம்ம்ம்ம்,,,,,ஐடியா இல்லாத பசங்க!!!!!!!!!!//
வெங்காயம் !
LikeLike